திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 174 பஞ்ச பாதகன் (பழநி) Thiruppugazh 174 panjapAdhagan (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன தந்த தானனந் தானதன தானதன ...... தனதான ......... பாடல் ......... பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை ...... பவுஷாசை பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் ...... புரிவாயே வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி ...... முருகோனே மங்கை மோகசிங் காரரகு ராமரிட தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ் மங்க ளாயிசந் தானசிவ காமியுமை ...... யருள்பாலா கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர ...... அணைவோனே கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல் கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர் கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் ... ஐந்து பாதகங்களும்* செய்தவன், பாவம் செய்தவன், முற்றிய மூடன், வெகு வஞ்ச லோபியன் ... மிக்க வஞ்சகத்தோடு கூடிய பேராசைக்காரன், சூதுகொலை காரன் ... சூது, கொலை இவை செய்யும் பேர்வழி, மதி பண்கொளாதவன் ... அறிவில் நல்ல பண்பே இல்லாதவன், பாவகட லூடுநுழை பவுஷாசை பங்கன் ... பாவக்கடலில் நுழைகின்ற செருக்கு, ஆசை என்ற குற்றம் உடையவன் ஆகிய நான், மோதியம் பாழ்நரகில் வீணின்விழ ... தாக்குண்டு அந்தப் பாழ் நரகத்தில் வீணாக விழும்படியாக பெண்டிர் வீடுபொன் தேடி ... பெண்கள், வீடு, பொன் என்னும் மூவாசை கொண்டு தேடி அலைந்தும், நொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடி ... ஒரு நொடியில், மறைந்து கிடக்கும் ஐவகை மலங்களுடனும்** பாசங்களுடனும் சேர்ந்து, வெகு சதிகாரர் அஞ்சு பூதமுண்டா கடிய காரர் ... மிக்க மோசக்காரராம் ஐந்து பூதங்களாகிய அந்தத் தீயவர் இவர் தங்கள் வாணிபங் காரியம லாமல் ... இவர்களின் வியாபார காரியங்களில் கலவாமல், அருளன்பர் பாலுடன் கூடியறி யாதபுகழ் அடியேனை ... அருள் பெற்ற அன்பர்களிடத்தே கூடியறியாத புகழையே கொண்டுள்ள நான், அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி ... தேவர்களும், திருமாலும், பிரமனும் தேடியும் காணாத ஜோதியாம், சந்த்ர சேகரன் பாவைவிளையாடு ... சந்திரசேகரனாம் சிவபிரானும், பாவையாம் தேவி பார்வதியும் கூடி விளையாடுகின்ற படிக அந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே ... ஸ்படிகம் போன்று தூய அழகுடன் உள்ள நாடாகிய சிவலோகத்தில் உள்ளவர்களோடு கூடி விளையாட அருள் புரிவாயாக. வஞ்ச மாசுரன் சேனைகடலோடு குவடுங்கவே ... வஞ்சம் நிறைந்த கொடும் சூரனும், அவனது படையும், கடலும், கிரெளஞ்சமலையும் ஒடுங்கும்படியாக, இனன் போலவொளிர் வேலைவிடு ... சூரியனைப் போல ஒளிவீசும் வேலாயுதத்தைச் செலுத்திய, வண்கையா கடம் பேடுதொடை யாடுமுடி முருகோனே ... வழங்கும் தன்மையுடைய கையனே, கடப்பமலர் மாலை விளங்கும் திருமுடியை உடைய முருகனே, மங்கை மோகசிங்கார ரகு ராமரிட தங்கை ... மங்கை, வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமனின் (திருமாலின்) தங்கை, சூலியங் காளியெமை யீணபுகழ் மங்களாயி ... சூலமேந்தியவள், அழகிய காளி, யாம் அனைவரையும் ஈன்ற புகழ் நிறைந்த மங்களகரமான தாய், சந தானசிவ காமியுமை யருள்பாலா ... சந்தான விருட்சம் போல் வேண்டிய வரங்களைத் தரும் சிவகாமி, அந்த உமாதேவி அருளிய பாலனே, கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை ... கொஞ்சும் அழகிய கிளி போன்ற பேச்சும், கரிய கடைக் கண்களும், பெண்கள் நாயகந் தோகைமயில் போல் ... பெண்களுக்குள் தலைமையும், கலாப மயில் போன்ற சாயலும், இரச கொங்கை மால்குறம் பாவை ... இன்பம் தரும் மார்பகமும், பெருமையும் உடைய குறப் பெண் வள்ளியின் அவல் தீரவர அணைவோனே ... ஆவல் தீர வந்து அவளை அரவணைத்துக் கொண்டவனே, கொண்டல் சூழுமஞ்சோலை மலர் வாவி ... மேகங்கள் சூழ்ந்த அழகிய சோலைகளும், மலர்கள் நிறைந்த குளங்களும், கயல் கந்து பாய நின்றாடு துவர் பாகை யுதிர் ... கயல் மீன்கள் வேகமாகப் பாய்வதால் ஆட்டப்படும் துவர்த்த பாக்குக்கிளைகளில் இருந்து உதிர்கின்ற கந்தி யோடகஞ் சேர் ... கமுகமரங்களும் தன்னகத்தே கொண்டுள்ள பழநி வாழ்குமர பெருமாளே. ... பழநி மலையில் வாழ்கின்ற குமரப் பெருமாளே. |
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை. |
** ஐவகை மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதனம் என்பவையாம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.442 pg 1.443 pg 1.444 pg 1.445 WIKI_urai Song number: 183 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 174 - panja pAdhagan (pazhani) panja pAthakan pAvimuzhu mUdanveku vanja lOpiyan chUthukolai kAranmathi paNko LAthavan pAvakada lUdunuzhai ...... pavushAsai pangan mOthiyam pAzhnarakil veeNinvizha peNdir veedupon thEdinodi meethilmaRai panja mAmalam pAsamodu kUdiveku ...... sathikArar anju pUthamuN dAkadiya kArarivar thangaL vANipang kAriyama lAmalaru Lanpar pAludan kUdiyaRi yAthapuka ...... zhadiyEnai aNdar mAlayan thEdiyaRi yAthavoLi chanthra sEkaran pAvaiviLai yAdupadi kantha nAdudan kUdiviLai yAda aruL ...... purivAyE vanja mAsuran sEnaikada lOdukuva dunga vEyinan pOlavoLir vElaividu vaNkai yAkadam pEduthodai yAdumudi ...... murukOnE mangai mOkasing kAraragu rAmarida thangai chUliyang kALiyemai yeeNapukazh manga LAyisan thAnasiva kAmiyumai ...... yaruLbAlA konju mAsukam pOlamozhi neelakadai peNkaL nAyagan thOkaimayil pOlirasa kongai mAlkuRam pAvaiyaval theeravara ...... aNaivOnE koNdal chUzhumanj sOlaimalar vAvikayal kanthu pAyanin RAduthuvar pAkaiyuthir kanthi yOdakanj cErpazhani vAzhkumara ...... perumALE. ......... Meaning ......... panja pAthakan pAvimuzhu mUdan: I have committed the five gravest offences*; I am a sinner; I am a total fool; veku vanja lOpiyan chUthukolai kAran: I am the most devious and the worst miser; I am a gambler and murderer; mathi paNko LAthavan: My mind never adopts good ethics; pAvakada lUdunuzhai pavushAsai pangan: I am guilty of vanity and lust which immerse me in the sea of sins; mOthiyam pAzhnarakil veeNinvizha: I throw myself into the bottomless pit of hell due to my peNdir veedupon thEdi: quest for women, properties and gold; nodi meethilmaRai panja mAmalam pAsamodu kUdi: in a fraction of a second, I mingle with the five great slags** and suffer due to attachment; veku sathikArar anju pUthamuN dAkadiya kArar: and the five elements, notorious for their sly deceit, play havoc on me; ivarthangaL vANipang kAriyama lAmal: Rather than falling victim to their commercial and materialistic actions, aruLanpar pAludan kUdiyaRi yAthapuka zhadiyEnai: I should have joined the company of Your blessed devotees; but I am notorious in not mingling with such good people. aNdar mAlayan thEdiyaRi yAthavoLi: Despite their searching everywhere, celestials, Vishnu and BrahmA were unable to have a vision of the effulgence chanthra sEkaran pAvaiviLai yAdu: of SivA, who wears the crescent moon on His tresses; along with Him, the Supreme Mother, PArvathi, revels in the Land of SivA, padikantha nAdudan kUdiviLai yAda aruL purivAyE: that is pure as the crystal. Kindly bless me so that I too can join their play in that Land! vanja mAsuran sEnaikada lOdu kuvadungavE: The treacherous demon, SUran, his armies, the seas and the Mount Krouncha were all destroyed yinan pOlavoLir vElaividu vaNkai yA: when You wielded the spear, dazzling like the sun, from Your benevolent hand! kadam pEduthodai yAdumudi murukOnE: On Your tresses You wear the garland of kadappa flowers, Oh MurugA! mangai mOkasing kAra ragu rAmarida thangai: She is the eternal damsel; She is the younger sister of enchanting and handsome Raghuraman (Vishnu); chUliyang kALiyemai yeeNapukazh manga LAyi: She holds the trident in Her hand; She is the beautiful KALi; She, the most famous and auspicious Mother, delivered all of us; santhAna siva kAmiyumai yaruLbAlA: She is SivagAmi who grants all our boons like the SanthAna Tree (wish-yielding tree); You are the son of that UmAdEvi! konju mAsukam pOlamozhi neelakadai: Her speech is charming like the parrot's; her eyes are blue; peNkaL nAyagan thOkaimayil pOlirasa: she is the leader of the girls; her beauty is like that of the peacock; kongai mAlkuRam pAvai: She has large bosom; She is the damsel of the KuRavAs; aval theeravara aNaivOnE: and You hugged that VaLLi so tightly that her desire was fulfilled! koNdal chUzhumanj sOlai: The lovely groves are so tall that clouds come to rest on the top; malar vAvikayal kanthu pAyanin RAduthuvar pAkaiyuthir kanthi yOdu: the ponds are full of flowers; the kayal fish jump so high that they shake the betelnut trees from which the bitter-sweet nuts drop down; akanjcEr pazhani vAzh kumara perumALE.: and all these natural beauties abound in this place, Pazhani, which is Your abode, Oh KumarA, the Great One! |
* Five heinous sins (crimes) are: murder, stealing, lying, drunkenness and abuse of the teacher. |
** Five great slags are: arrogance, karma, delusion, deception and concealment. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |