திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 171 நிகமம் எனில் (பழநி) Thiruppugazh 171 nigamamenil (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தந்த தத்த தானன தனதனன தந்த தத்த தானன தனதனன தந்த தத்த தானன ...... தனதான ......... பாடல் ......... நிகமமெனி லொன்று மற்று நாடொறு நெருடுகவி கொண்டு வித்தை பேசிய நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா நெளியமுது தண்டு சத்ர சாமர நிபிடமிட வந்து கைக்கு மோதிர நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய் முகமுமொரு சம்பு மிக்க நூல்களு முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில் முடிவிலவை யொன்று மற்று வேறொரு ...... நிறமாகி முறியுமவர் தங்கள் வித்தை தானிது முடியவுனை நின்று பத்தி யால்மிக மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே திகுதிகென மண்ட விட்ட தீயொரு செழியனுடல் சென்று பற்றி யாருகர் திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது சிறியகர பங்க யத்து நீறொரு தினையளவு சென்று பட்ட போதினில் தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற மகிதலம ணைந்த அத்த யோனியை வரைவறம ணந்து நித்த நீடருள் வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மலரூபம் வரவரம னந்தி கைத்த பாவியை வழியடிமை கொண்டு மிக்க மாதவர் வளர்பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி கொண்டு வித்தை பேசிய ... வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும் தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா ... போலிக் கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு, நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து ... (தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து, கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் உடையோராய் ... கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய், முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில் ... அவர்களது முகமானது, ஒரு செய்யுளும் வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால், முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது ... அவை ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம். முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே ... (இத்தகைய கல்வி போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில் நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக. திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ... திகுதிகு என்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுடைய உடலைச் சென்று (சுரப் பிணியாகப்) பற்றிட, ஆருகர் திகையின் அமண் வந்து விட்ட போதினும் அமையாது ... பல திசைகளிலிருந்தும் சமணக் குருக்கள் வந்து முயன்ற போதிலும் சுரம் தணியாமல், சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்ட போதினில் தெளிய ... (திருஞான சம்பந்தராக வந்த) உனது சிறிய தாமரைக் கரத்தினின்று, திருநீறு ஒரு தினை அளவு (பாண்டியன் மேல்) பட்டவுடனே சுரம் தணிய, இனி வென்றி விட்ட மோழைகள் கழு ஏற மகிதலம் அணைந்த அத்த ... பின்பு (வாதப் போரில்) வெற்றியை இழந்த அந்த அறிவிலிகள் கழுவில் ஏற, இச்சாதனைகளுக்காக இந்தப் பூமியில் அவதரித்த குருவே, யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் வகை தனை அகன்றி இருக்கும் மூடனை ... பெண்களின் சிற்றின்பத்திலேயே கணக்கற்ற முறை ஈடுபட்டு, நாள்தோறும் (உனது) பேரருளின் திறங்களை உணராமல் விலகி நிற்கும் மூடனாகிய என்னை, மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு ... ஆணவ மலம் நாளுக்கு நாள் மனத்தைக் கலக்கும் பாவியாகிய என்னை, வழி அடிமையாக ஆட்கொண்டு, மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே. ... சிறந்த மகா தவசிகள் வாழும் பழனியில் வந்து அமர்ந்த வெற்றி வேலவப் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.436 pg 1.437 pg 1.438 pg 1.439 WIKI_urai Song number: 181 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 171 - nigamam enil (pazhani) nikamameni lonRu matRu nAdoRu nerudukavi koNdu viththai pEsiya nizhalarsiRu punsol katRu veeRuLa ...... peyarkURA neLiyamuthu thaNdu sathra sAmara nipidamida vanthu kaikku mOthira nedukiyathi kuNda lapra thApamu ...... mudaiyOrAy mukamumoru sampu mikka nUlkaLu muthumozhiyum vanthi rukku mOvenil mudivilavai yonRu matRu vERoru ...... niRamAki muRiyumavar thangaL viththai thAnithu mudiyavunai ninRu paththi yAlmika mozhiyumvaLar senchol varkka mEvara ...... aruLvAyE thikuthikena maNda vitta theeyoru sezhiyanudal senRu patRi yArukar thikaiyinamaN vanthu vitta pOthinu ...... mamaiyAthu siRiyakara panga yaththu neeRoru thinaiyaLavu senRu patta pOthinil theLiyaini venRi vitta mOzhaikaL ...... kazhuvERa makithalama Naintha aththa yOniyai varaivaRama Nanthu niththa needaruL vakaithanaiya kanRi rukku mUdanai ...... malarUpam varavarama nanthi kaiththa pAviyai vazhiyadimai koNdu mikka mAdhavar vaLarpazhani vantha kotRa vElava ...... perumALE. ......... Meaning ......... nikamam enil onRum atRu nALthoRu(m) nerudu kavi koNdu viththai pEsiya: Not knowing even a little bit of the meaning of VEdic scripture, some people roam about stealing others' texts from here and there nizhalar siRu pun sol katRu veeRu uLa peyar kURA: and compose fake poems; learning those trivial words, they assume several pompous titles for themselves; neLiya muthu thaNdu sathra(m) sAmara(m) nipidam ida vanthu: they obtain, as gift, heavy palanquin (that bends the backs of the bearers) and go about (in procession) accompanied by the paraphernalia of ornamental umbrella and fan; kaikku mOthira neduki athi kuNdala prathApamum udaiyOrAy: with rings on their fingers and bright and long ear-studs dangling from their ears, they move about proudly; mukam oru sampu mikka nUlkaLum muthu mozhiyum vanthu irukkumO enil: if one asks them whether they could explain a particular poem, mixed with prose, or a stanza from old texts like ThirukkuRaL, mudivil avai onRum atRu vERoru niRamAki muRiyum avar thangaL viththai thAn ithu: their faces turn pale with embarrassment for not knowing anything, and they are ultimately humiliated; that is the extent of their so-called erudition! mudiyavu(m) unai ninRu paththiyAl mika mozhiyum vaLar sem sol varkkamE vara aruLvAyE: Enough of this type of education, and to put an end to such learning, kindly bless me with the gift of the choicest words that should sprout in my mind in abundance so that I could praise Your glory prolifically and with steadfast devotion! thikuthiku ena maNda vitta thee oru sezhiyan udal senRu patRi: When scorching flames of fire afflicted the body of PANdiya King Nedunchezhiyan (in the form of high fever), Arukar thikaiyin amaN vanthu vitta pOthinum amaiyAthu: many samaNa priests from all directions were summoned, but they could not lessen the fever despite best efforts; siRiya kara pangayaththu neeRu oru thinai aLavu senRu patta pOthinil theLiya: however, when a speck of holy ash from the small lotus hand of Yours (coming as ThirugnAna Sambandhar) was sprinkled on the body (of the PANdiya King), the fever remitted; ini venRi vitta mOzhaikaL kazhu ERa makithalam aNaintha aththa: later, being vanquished (in the debate of words), the unwise samaNa priests went to the gallows; to accomplish all this, You were born in this world, Oh Master! yOniyai varaivu aRa maNanthu niththa needu aruL vakai thanai akanRi irukkum mUdanai: I am such a dumb fool indulging repeatedly in carnal pleasure and straying away everyday from the path of Your grace; mala rUpam vara vara manam thikaiththa pAviyai vazhi adimai koNdu: I am a sinner agitated by the faeces of arrogance day after day; nevertheless, kindly take charge of me as Your bonded slave! mikka mAdhavar vaLar pazhani vantha kotRa vElava perumALE.: Oh Lord with the triumphant spear, You have chosen Your abode in Pazhani where great sages who have performed many penances reside, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |