பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 421 181 வேதப்பொருள் என்றால் ஒரு சிறிதும் தெரியாது, நாள்தோறும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இய பற்றிய பாடல்கள்ைக் கொண்டு, தனது வித்தைப் பெருக்கைப் பற்றிப் பெருமிதம் பேசும் போலிக் கவிகள், சில அற்பச் சொற்களைக் கற்று ஆடம்பரமான பட்டப்பெயர்களை வைத்துக்கொண்டு - (தூக்குவோரது) முதுகு நெளியத்தக்க கனத்த பல்லக்கு, குடை சாமரம் (இவை) நெருங்கும்படியாக உலவிக் கையில் மோதிரங்கள், (காதில்) நீண்டு தொங்கும் (ஒளி) மிக்க குண்டலங்கள் தாங்கிய சிறப்பை உடையவர்களா யிருப்பார்கள்; (ஆனால்) (அவர்கள்) முகமானது - செய்யுளும் வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய ಅಶ್ಗ கற்றுள்ளிரோ, ளக்கக் கூடுமோ" எனில் முடிவில் அவை ஒன்றும் தெரியாததால் வேறொரு நிறமாக மாறி . (வெட்கத்தால் முகம் வெளுத் து) - மனம் குலைந்து போகின்றவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்; ஆதலால் இத்தகைய கல்வி (போதும் போதும்; இது) முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒருவ்ழியில் நின்ற பத்தியுட்ன் நிரம்பத் துதிப்பதற்கு மேலும் மேலும் எழுகின்ற செஞ்சொற்களின் பெருக்கே (என் நெஞ்சிற்) பெருகிவர அருளுவாயாக (அல்லது - மனம் குலைந்து நாணமுறச் செய்யும் கல்விதான் இது; ஆதலால் - என் வாழ்நாள் வதும் உன்னை ஒருமைப்பட்ட பத்தியுட்ன் - ரம்பத் துதிப்பதற்கு அருளுவாயாக எனலுமாம்.) திகுதிகென மண்டி எரியவிட்ட தீயானது (சுரப்பிணியாய்) அந்தப் பாண்டியனுடைய உடலைச் சென்று பற்ற, சமணர்களிற் - (பல) திசைச் சமணக் குருக்கள்மாரும் வந்து முயன்று பார்த்தபோதும் (அந்தச் சுரம்) தணியாமல் சமணர்கள் வைகையாற்றில் விட்ட ஏடு ஆற்று வெள்ளத்துடன் அடித்துக்கொண்டு போக, சம்பந்தப்பெருமான் வாழ்க அந்தணர்" என்னும்