திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 170 நாத விந்து (பழநி) Thiruppugazh 170 nAdhavindhu (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன தான தந்தன தானா தனாதன ...... தனதான ......... பாடல் ......... நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, ஞான பண்டித ஸாமீ நமோநம ... பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி போக அந்தரி பாலா நமோநம ... (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி நாக பந்த மயூரா நமோநம ... தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம ... எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, கீத கிண்கிணி பாதா நமோநம ... இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி தீர சம்ப்ரம வீரா நமோநம ... மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி, கிரிராஜ ... மலைகளுக்கெல்லாம் அரசனே, தீப மங்கள ஜோதீ நமோநம ... திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, தூய அம்பல லீலா நமோநம ... பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, தேவ குஞ்சரி பாகா நமோநம ... தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி, அருள்தாராய் ... உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக. ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ... தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம், ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ... கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்), ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை ... ஏழு உலகங்களில் உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும் நாயக ... சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே, வயலூரா ... வயலூருக்குத் தலைவா, ஆதரம் பயில் ஆரூரர் தோழமை ... தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை சேர்தல் கொண்டவரோடே முனாளினில் ... நாடியவராய், அவருடன் முன்பொருநாள், ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி ... ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே) ஆதி அந்தவுலாவாசு பாடிய ... ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ... சேரர் பெருமானாம் சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. ... திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே. |
* இது 'திருக்கற்குடி' அல்லது 'உய்யக்கொண்டான்' என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது. |
** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் 'ஆதி உலா' என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். - பெரிய புராணம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.250 pg 1.251 pg 1.252 pg 1.253 WIKI_urai Song number: 100 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'பழநி' திரு சண்முக சுந்தரம் 'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 170 - nAdha vindhu (pazhani) nAdha vindhuka lAdhee namOnama vEdha manthraso rUpA namOnama njyAna paNditha sAmee namOnama ...... vegukOdi nAma sambuku mArA namOnama bOga anthari bAlA namOnama nAga bandhama yUrA namOnama ...... parasUrar sEdha dhaNdavi nOdhA namOnama geetha kiNkiNi pAdhA namOnama dheera sambrama veerA namOnama ...... girirAja dheepa mangaLa jOthee namOnama thUya ambala leelA namOnama dhEva kunjari bAgA namOnama ...... aruLthArAy eedha lumpala kOlA lapUjaiyum Odha lunguNa AchA raneethiyum eera munguru seerpA dhasEvaiyu ...... maRavAdha Ezhtha lampugazh kAvE riyAlviLai sOzha maNdala meedhE manOhara rAja gembira nAdA LunAyaka ...... vayalUrA Adha rampayil ArU rarthOzhamai sErdhal koNdava rOdE munALinil Adal vempari meedhE RimA kayi ...... laiyil Egi Adhi antha ulA Asu pAdiya sErar kongu vaikAvUr nanAdadhil Avinan kudi vAzhvAna dhEvargaL ...... perumALE. ......... Meaning ......... nAdha vindhu kalAdhee: You are the basis of the principles of Nadha (Lingam) and the Receptacle (Peetam) (or Shivasakthi)*, namO nama: I bow to You; I bow to You vEdha manthra sorUpA: You are the beauty of VEdAs (Scriptures) and ManthrAs (all chantings), namO nama: I bow to You; I bow to You njyAna paNditha sAme: You are the most learned and knowledgable, namO nama: I bow to You; I bow to You vegu kOdi nAma sambu kumArA: You are the son of Sambhu, with millions of names, namO nama: I bow to You; I bow to You bOga anthari bAlA: You are the son of UmA, provider of happiness to all beings, namO nama: I bow to You; I bow to You nAga bandha mayUrA: You mount the peacock which tames and binds the snake to its feet, namO nama: I bow to You; I bow to You parasUrar sEdha dhaNda vinOdhA: You made a sport of punishing all the hostile demons (asuras) namO nama: I bow to You; I bow to You geetha kiNkiNi pAdhA: Your holy feet wear the lilting anklets, namO nama: I bow to You; I bow to You dheera sambrama veerA: You are the valorous and great warrior, namO nama: I bow to You; I bow to You giri rAja: You are the king of all mountains, dheepa mangaLa jOthee: You are the sacred light emanating from all lamps, namO nama: I bow to You; I bow to You thUya ambala leelA: You play in the pure cosmic sky, namO nama: I bow to You; I bow to You dhEva kunjari bAgA: You are the consort of DEvayAnai, namO nama: I bow to You; I bow to You aruL thArAy: I seek Your blessings. eedhalum pala kOlAla pUjaiyum: Charity, many special modes of worship, Odhalun guNa AchAra neethiyum: learning, virtues, character, justice, eeramun guru seer pAdha sEvaiyu: compassion and service to the teacher's (Guru's) feet - maRavAdha: (the above) will never be forgotten (in) Ezhthalam pugazh kAvEriyAl viLai sOzha maNdala meedhE: the ChOzha Mandalam, which is praised by people in the seven worlds, and which is made fertile by the great river KAveri; rAja gembira nAdALu nAyaka: in that kingdom is a region called Rajagembiram***, and You are its Lord! vayalUrA: You are also the Lord of VayalUr! Adharam payil ArUrar thOzhamai: Once the friendship of ArUrar (Sundarar) was sought sErdhal koNd avarOdE munALinil: (by Cheraman Peruman**) who wanted to travel with his friend Adal vempari meedhERi mA kayi laiyil Egi: mounted on a dancing horse all the way to the heavenly abode (Maha Kailas). Adhi antha ulA Asu pAdiya: (There, the Chera King) sang the beautiful (antha=beautiful) Adhi UlA ex tempore; sErar kongu vaikAvUr nanAdadhil: That Cheraman Peruman ruled Kongu NAdu, in which is the part, VaikavUr. Avinan kudi vAzhvAna: In VaikavUr is ThiruvAvinankudi (Pazhani's foothill), You are the Life of that place, and dhEvargaL perumALE.: You are the Great one for all the DEvAs! |
* 'nAdha bhindu' ('vindhu') is explained here: 'nAdha' is the principle of sound. It is also known as 'nAma' or name. From this 'nAdha' or name, came out 'bhindu' or 'rUba' which is the form. These name and form are 'nAma' and 'rUba' or 'nAdha' and 'bhindu', what is known as 'OmkAra praNava', and these are the seed and seat of all matter and force. 'nAdha' is represented by a line or a pillar and the 'bhindu' by a disc or elliptic base. It is this 'nAdha' or vibration that is known as 'lingA', and 'bhindu' is what is known as its 'peetam'. This 'lingam' along with 'peetam' is the principle of name and form, that is beyond any comprehension, and the form that could be comprehended little better came out of the 'bhindu' in the order of evolution. This is what is known as 'Siva-Sakthi aikkiyam' which is 'rUbArUbam' ('rUba - arUbam'), that is with shape or without shape. (reference - Siva Agamam and Saiva SidhdhAndham). |
** The story is about CheramAn PerumAn, King of Kongu NAdu, who lived 1,150 years ago and became a great friend of Sundarar, one of the four pillars of Saivism. When Sundarar was sent for by Lord SivA to come to KailAs, Sundarar desired that his friend Cheraman should also join him. Cheraman rushed in a horse to join Sundarar. He reached Kailas earlier than Sundarar but was stopped at the gate. While waiting for Sundarar to reach Kailas, Cheraman sang "Adhi UlA" in praise of KailAs spontaneously and was admitted into heaven along with Sundarar - This story is in Periya PurANam. |
*** Rajagembiram is now known as ThirukkaRkudi or UyyakkondAn. It is near Tiruchi on the route to VayalUr. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |