பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 முருகவேள் திருமுறை 13- திருமுறை தீப மங்கள ஜோதி நமோ நம துாய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்; ஈத லும்பல கோலால பூஜையும் ஒத லுங்குண ஆசார நீதியும் ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத ஏழ்த லம்புகழ், காவேரி யால்விளை சோழ மண்டல மீதே மநோகர ரோஜ கெம்பிர நாடாளு நாயக வயலுTரா; "ஆத ரம்பயி லாரூரர் தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி. ஆதி யந்தவு லாவாசு பாடிய சேரர் கொங்கு'வை காவூர் நனாடதில் ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. (1) 1.கோலாகலம் என்பது கோலாலம் என்றாயிற்று கோலாகலம் - சம்ப்ரமம். 2. ராஜகெம்பிர நாடு - பாடல் 390 பார்க்க. இந்நாடு சோழ நாட்டின் ஒரு பகுதி - தக்க யாகப் பரணி - பக்கம் 381. 3. இங்குக் குறித்துள்ள வரலாறு: ஆயிரத்து நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவரும், தேவா ரம் பாடினவருமான பூ சுந்தரமூர்த்திப் பெருமானுக்கு மிக உகந்த நண்பர் சேரமான் பெருமாள் என்னும் சேர அரசர். குடிகள் கழறுவன (சொல்வன) எல்லாம் தாம் இருந்த இடத்தே தமக்குத் தெரியும்படியான வரத்தை இவர் பெற்றிருந்ததால் இவருக்குக் கழறிற்றறிவார் நாயனார்" என்றும் பெயர். இறைவன் அனுப்பின வெள்ளை யானையின் மீது சுந்தரர் கயிலைக்குச் சென்ற பொழுது தமது நண்பராம் சேரனை அவர் நினைத்தார். இதை அறிந்த சேரம்ான் உடனே ஒரு குதிரையின் மீதேறிச் சுந்தரர் ஏறிச் செல்லும் யானையை வலம்செய்து, சுந்தரருக்கு முன்னே கயிலையை அடைந் தார். இறைவனது ஆணையின்றிச் சென்றபடியாற் சேரமான் கயிலை வாயிலில் தடைபட்டு நிற்க வேண்டி வந்தது. அங்கனம் தடை பட்டு நின்ற