திருப்புகழ் 162 ஞானங்கொள்  (பழநி)
Thiruppugazh 162 gnAnangkoL  (pazhani)
Thiruppugazh - 162 gnAnangkoL - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானந்த தனன தான தானந்த தனன தான
     தானந்த தனன தான ...... தனதான

......... பாடல் .........

ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
     நாடண்டி நமசி வாய ...... வரையேறி

நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
     நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி

ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
     லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும்

ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
     லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய்

தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
     சீரங்க னெனது தாதை ...... ஒருமாது

சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
     சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா

கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
     காடந்த மயிலி லேறு ...... முருகோனே

காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
     காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஞானங்கொள் பொறிகள் கூடி ... ஞான இந்திரியங்கள் யாவும்
ஒருமுகமாகக் கூடி,

வானிந்து கதிரிலாத நாடு அண்டி ... வானில் சந்திரன் சூரியன்
இன்றியே ஒளி வீசும் உலகத்தை அடைந்து,

நமசி வாய வரையேறி ... நமசிவாய என்ற பஞ்சாட்சர மலையின்
மீது ஏறி,

நாவின்ப ரசமதான ஆநந்த அருவி பாய ... நாவுக்குப் பேரின்ப
இனிமையைத் தரும் ஆனந்த அருவி பாய,

நாதங்களொடு குலாவி விளையாடி ... அந்தச் சிவயோக சமாதியில்
உள்ள நாதங்களோடு கலந்து விளையாடல் புரிந்து,

ஊனங்க ளுயிர்கள் மோக ... ஊன் பொதிந்த உடம்புடன் கூடிய
உயிர்களை மயங்கச் செய்யும் தன்மையும்,

நானென்பது அறிவி லாமல் ஓம் அங்கி யுருவ மாகி ... நான்
என்ற அறிவே அற்றுப் போய், ப்ரணவ ஜோதி வடிவமாகி,

இருவோரும் ஓரந்த மருவி ... ஜீவாத்மாவாகிய யானும்
பரமாத்மாவாகிய நீயும் ஒரே வடிவமாகி,

ஞான மா விஞ்சை முதுகினேறி ... மெய்ஞ்ஞான வித்தையாகிய
குதிரையின் முதுகில் ஏறி,

லோகங்கள் வலம தாட அருள்தாராய் ... உலகம் முழுதும்
வலமாக பவனி வரும் பெருவாழ்வை அருள்வாயாக.

தேனங்கொள் இதழி ... தேனை உடையதும் அழகியதும் ஆன
கொன்றை மலரையும்,

தாகி தார் இந்து சலில வேணி ... ஆத்தி மலர் மாலையையும்,
நிலவையும், கங்கையையும் ஜடாமுடியில் அணிந்தவரும்,

சீர் அங்கன் எனது தாதை ... சிறந்த திருமேனியை உடையவரும்,
எனது தந்தையாரும்,

ஒருமாது சேர்பஞ்ச வடிவி ... ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச*
சக்திகளின் கலவையான வடிவழகி,

மோகி யோகங்கொள் மவுன ஜோதி ... சிவத்தின் காதலி,
சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி
வடிவினாள் ஆகிய உமா தேவியார்

சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா ... சேர்ந்திருக்கிற
இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப்
பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே,

கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய ... காடுகளும்
மலைகளும் தீவுகளும் கடல்களும் பொடியாக

நீல காடு அந்த மயிலிலேறு முருகோனே ... காட்டில் நீல
நிறத்தோடுள்ள அழகிய மயிலில் ஏறும் முருகனே,

காமன்கை மலர்கள் நாண ... மன்மதனுடைய கரத்தில் உள்ள
மலர்க் கணைகள் மயக்கும் ஆற்றலின்றி நாண,

வேடம்பெண் அமளி சேர்வைகாண் ... வேடர் குலப் பெண்
வள்ளியுடன் மலர் மஞ்சத்தில் இணைந்திருக்கும்

எங்கள் பழநி மேவு பெருமாளே. ... எமது பழநி மலையின்
எழுந்தருளிய பெருமாளே.


* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி
என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.430  pg 1.431  pg 1.432  pg 1.433  pg 1.434  pg 1.435 
 WIKI_urai Song number: 179 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 162 - gnAnangkoL (pazhani)

gnAnangkoL poRigaL kUdi vAnindhu kadhiri lAdha
     nAdaNdi nama sivAya ...... varaiyERi

nAvinba rasama dhAna Anandha aruvi pAya
     nAdhanga Loduku lAvi ...... viLaiyAdi

Unanga LuyirgaL mOga nAnenba dhaRivi lAmal
     Omangi uruva mAgi ...... iruvOrum

Orandha maruvi nyAna mAvinjai mudhugi nERi
     lOkangaL valama dhAda ...... aruLthAray

thEnankoL idhazhi thAgi thArindhu salila vENi
     seerangan enadhu thAdhai ...... orumAdhu

sErpanja vadivi mOgi yOgankoL mavuna jOthi
     sErpangin amala nAthan ...... aruLbAla

kAnangaL varaikaL theevu OdhangaL podiya neela
     kAdandha mayilil Eru ...... murugOnE

kAmankai malargaL nANa vEdampeN amaLi sErvai
     kANengaL pazhani mEvu ...... perumALE.

......... Meaning .........

gnAnangkoL poRigaL kUdi: All my organs that perceive knowledge must converge.

vAnindhu kadhiri lAdha nAdaNdi: They should reach the cosmos that is bright without a sun or a moon.

nama sivAya varaiyERi: Then they should climb to the top of the Mount NamasivAya.

nAvinba rasama dhAna Anandha aruvi pAya: The waterfall of bliss should flow sweetening my tongue.

nAdhanga Loduku lAvi viLaiyAdi: In that Siva-yogic trance, they should mingle with several sounds and play around.

Unanga LuyirgaL mOga nAnenba dhaRivi lAmal: Consciousness about my body, that lusted over flesh and skin, should be gone.

Omangi uruva mAgi: It should take the form of the effulgent PraNava ManthrA "OM", and

iruvOrum Orandha maruvi: both of us, namely myself (JeevAthma) and You (ParamAthma), should merge as one!

nyAna mAvinjai mudhuginERi: Then I should mount on the horseback of True Knowledge

lOkangaL valama dhAda aruLthAray: and majestically go around all the world by Your Grace!

thEnankoL idhazhi thAgi thArindhu salila vENi: On His tresses, He wears beautiful kondRai (Indian laburnum) flowers oozing with honey, garland of Aththi (mountain ebony) flowers, the crescent moon and River GangA;

seerangan enadhu thAdhai: He has a fine body; He is my Father;

orumAdhu sErpanja vadivi mOgi: She is the unique mother; She is a pretty combination of Five MahA Sakthis*; She is the beloved of SivA;

yOgankoL mavuna jOthi: She is the Light seen by the silent Yogis deeply immersed in Siva-yOgA;

sErpangin amala nAthan aruLbAla: and She has shared half of His body; and He is the purest Leader, Lord SivA. You are the Son of that SivA!

kAnangaL varaikaL theevu OdhangaL podiya: Forests, mountains, islands and seas were all shattered when

neela kAdandha mayilil Eru murugOnE: Your blue, fierce and beautiful Peacock flew around with You mounted on it!

kAmankai malargaL nANa: Manmathan (Love God) sent out his flowery arrows which were put to shame

vEdampeN amaLi sErvai kAN: when You joined VaLLi, the damsel of the hunters, in the flowery bed

engaL pazhani mEvu perumALE.: at our favourite place Pazhani, which is Your abode, Oh Great One!


* Goddess PArvathi takes five Sakthi forms, namely, Adhisakthi, parAsakthi, ichchAsakthi, kriyAsakthi and gnAnasakthi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 162 gnAnangkoL - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]