பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 முருகவேள் திருமுறை (3- திருமுறை 1.நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நோதங்க ளொடுகு லாவி விளையாடி ஊேனங்க ளுயிர்கள் மோக நாணென்ப தறிவி லாம 'லோமங்கி யுருவ மாகி யிருவோரும். ஒரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட அருள்தாராய்; தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி 7சீரங்க னெனது தாதை ஒரு மாது. சேர் பேஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி சேர்பங்கி னமல நாத னருள்பாலா; 1. அருவிபாய இன்னமுதம் ஊற திருப்புகழ் 3ெ7. 2. நாதங்கள் . தச நாதங்கள்: கிண்கிணி, சிலம்பு, மணிசங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில் - இவை யோகிகளால் உணரப்படுவன. திருப்புகழ் 439 இன் குறிப்புரையைப் பார்க்க -- கோ என முழங்கு சங்கொலி - திருப்புகழ் 647. ஞான சதாசிவம் அதின் மேவிப் பாடுந்தொனி நாதம் திருப்புகழ் 190. விந்து நாதம் ஒல மென்று பலதாள சந்தமிடு சேவை திருப்புகழ் 766. 3. ஊனங்கள் - ஊன்கள் - செய்யுள் விகாரம் - நன்னூல் சூ. 155. 4. ஓம் - அங்கி உருவம் - ஒம் என்னும் அங்கத்தை (அடையாளத்தை) உடைய உருவம் அங்கி உருவம் - அக்கினி சொரூபம் (வடிவம்) எனவும் கூறுவர். 5. ஞான மா - சிவஞானக் கடாக் களிறு" . கந்தர் கலிவெண்பா." திருஞான வேழ வகுப்பு" என்னும் திருவகுப்பையும் பார்க்க 6. தாகி - தாதகி - ஆத்தி - இடைக்குறை - நன்னூல் சூ.156. 7. சிரங்கன் - சீரிய அங்கத்தை உடையவன். 8. பஞ்சவடிவி - அம்பிகை பஞ்ச வர்ணங்களை உடையவள். பிங்கலை - நீலி - செய்யாள் - வெளியாள் - பசும் - பெண்கொடியே" - அபிராமி அந்தாதி 21.* 14