திருப்புகழ் 161 சுருளளக பார  (பழநி)
Thiruppugazh 161 suruLaLagabara  (pazhani)
Thiruppugazh - 161 suruLaLagabara - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
     சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே

சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
     தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல்

அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
     அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி

அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
     அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே

பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
     பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே

பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
     படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே

எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
     ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே

இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
     இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து ...
சுருண்டுள்ள கூந்தல் கொண்டையையும், பெருத்த மார்பகங்களையும்
உடைய விலைமாதர்களின் வசமாக மனம் ஈடுபட்டு,

சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே ... காம லீலைகளை
எல்லாம் விளக்கும் மன்மத சாத்திரத்தையே

சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு
தொழிலுடைய யானும்
... வேதம் என்று எண்ணி, அறிவில்லாதவருடன்
நட்புக் கொள்ளும் செய்கைகளை உடைய நானும்,

இங்கு உன் அடியார் போல் அரு மறைகள் ஓதி நினைந்து
மநு நெறியிலே நடந்து
... இங்கு உன்னுடைய அடியார்களைப் போல்
அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம
சாஸ்திர வழியிலே நடந்து,

அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி ... அறிவு இன்னது
என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று,

அகில புவன(ம்) ஆதி எங்கும் வெளி உற ... எல்லா உலகங்களிலும்
உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு,

மெய் ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே ...
மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக.

பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து ...
சூரியனுடைய மகனான சுக்ரீவனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய
அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து

பரி(வு) தக அழையா முன் வந்து பரிவாலே பரவிய
விபீஷணன்
... (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும்
அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று,
பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன்

பொன் மகுட முடி சூட நின்று ... பொன் மகுடம் முடியில்
சூட்டப்பட்டு நிற்க,

படைஞரொடு இராவணன் தன் உறவோடே எரி புகுத ...
இராவணன் தன் உறவினர்களுடனும் படைகளுடனும் இறந்து
நெருப்பிற்கு இரையாகி மடிய,

மாறு இல் அண்டர் குடி புகுத ... பக்தி மாறுதல் சிறிதும் இல்லாத
தேவர்கள் இந்திர லோகத்தில் குடி புகுந்து
மீண்டும் வாழவும்,

மாறு கொண்ட ரகுபதி இராம சந்த்ரன் மருகோனே ...
இராவணனிடம் பகை கொண்ட, ரகு குலத்தில் வந்த தலைவனான
இராமச் சந்திர மூர்த்தியின் மருகனே,

இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த ... இளைய
குறப் பெண்ணாகிய வள்ளியின் பங்கனே, பழநிமலை நாதனே, கந்தனே,

இமையவள் த(ன்)னால் மகிழ்ந்த பெருமாளே. ... இமவான்
மகளான பார்வதி மகிழ்கின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.344  pg 1.345 
 WIKI_urai Song number: 141 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 161 - suruLaLaga bara (pazhani)

suruLaLaka pAra kongai makaLirvasa mAyi sainthu
     surathakriyai yAlvi Langu ...... mathanUlE

suruthiyena vEni nainthu aRivilika LOdi Nangu
     thozhiludaiya yAnu mingu ...... nadiyArpOl

arumaRaika LEni nainthu manuneRiyi lEna danthu
     aRivaiyaRi vAla Rinthu ...... niRaivAki

akilapuva nAthi yengum veLiyuRameynj njAna inpa
     amuthaiyozhi yAtha runtha ...... aruLvAyE

paruthimakan vAsal manthri anumanodu nErpa Ninthu
     parithakazhai yAmun vanthu ...... parivAlE

paraviyavi peesha Nanpon makudamudi cUda ninRa
     padainjarodi rAva NanRa ...... nuRavOdE

eripukutha mARi laNdar kudipukutha mARu koNda
     ragupathiyi rAma chandhran ...... marukOnE

iLaiyakuRa mAthu panga pazhanimalai nAtha kantha
     imaiyavaLtha nAlma kizhntha ...... perumALE.

......... Meaning .........

suruL aLaka pAra kongai makaLir vasamAy isainthu: Losing my heart to whores with curly coiffure and plump bosom,

suratha kriyaiyAl viLangum mathan nUlE suruthi enavE ninainthu: considering the erotic texts describing the act of love as the scriptures,

aRivilikaLOdu iNangu thozhiludaiya yAnum: I was occupied in befriending stupid people;

ingu un adiyAr pOl aru maRaikaL Othi ninainthu manu neRiyilE nadanthu: I wish to emulate Your devotees who consider the rare scriptures as the true text and follow the righteous path as stipulated in Manu's Sastra (Code of Conduct by Manu);

aRivai aRivAl aRinthu niRaivAki: I wish to be enlightened through the understanding of the inner knowledge by my intellect,

akila puvana(m) Athi engum veLi uRa: witnessing pure cosmic effulgence in all places in this world,

mey njAna inpa amuthai ozhiyAthu aruntha aruLvAyE: and drinking the sweet nectar of true spiritual knowledge without rest; kindly bless me accordingly.

paruthi makan vAsal manthri anumanodu nEr paNinthu: He went to surrender himself with the help of HanumAn, the minister guarding the palace of Sugreevan, Son of the Sun;

pari(vu) thaka azhaiyA mun vanthu parivAlE paraviya vipeeshaNan: even before he was called (by Sri Rama) with love and compassion, he, VibheeshaNan, reverently sought His refuge prostrating at His feet;

pon makuda mudi chUda ninRu: he was vested with the golden crown,

padainjarodu irAvaNan than uRavOdE eri pukutha: while RavaNa, with his clan and armies, was dead and consumed by fire;

mARu il aNdar kudi pukutha: the celestials who have unswerving devotion were resettled in their golden kingdom;

mARu koNda rakupathi irAma chandhran marukOnE: there was enmity between RAvaNA and RAmachandrA, a great descendant of the Raghu dynasty; You are the nephew of that Rama!

iLaiya kuRa mAthu panga pazhani malai nAtha kantha: You are the consort of the young damsel, VaLLi, of the KuRavAs! You are the Lord of Mount Pazhani, Oh Kandha!

imaiyavaL tha(n)nAl makizhntha perumALE.: You are exhilarated by PArvathi, the daughter of Mount HimavAn, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 161 suruLaLaga bara - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]