பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 329 பரவை நாச்சியாரின் மனைவாசலில் அன்று ஒரு காலத்தில் தூது நடந்த பரமன் திருவருளால் வளர்ந்த குமரேசனே! பகையாய் நின்ற அசுரர்களுடைய சேனைகளை மடிவித்துத் தேவர்கள் சிறையினின்றும் மீளும்படி வென்று பழநிமலை மீதில் (வந்து) நீரே பெருமாளே! (நாணமின்றி அழிவேனோ) 141 சுருண்ட கூந்தற் பாரத்தையும் கொங்கையையும் கொண்ட மகளிர் வ்சமாக மன்ம் ஒருப்பட்டு, காம் லீலைகளை விளக்கும் காம சாஸ்திரத்ன்த்யே வேதமெனப் (பாராட்டி) நினைத்து, அறிவில்லாதவர் களோடு இணங்கும் செய்கைகளை உடைய நானும் இங்கு உன் அடியார் போல - அரிய வேதங்களையே (உண்மையாக). நினைத்து, மநுதர்ம சாஸ்திர வழியிலேயே நடந்து, அறிவு இன்னது என்பதை அறிவு கொண்டு, அறிந்து, பூரணமாய், சகல புவனங்கள் ஆதிய தலங்கள் எங்கும் வெளிப்பட்டு விளக்கம் உற மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஒய்வின்றிப் பருக அருள்வாயாக. சூரியன் மதனான சுக்கிரீவனுடைய அரண்மனை வாயில் மந்திரியாகிய அநுமனுதவியுடன் வந்து தன்னை நேராகப் பணிந்து தான்.அன்புடன் அழைக்கு முன்னமே பத்தியுடனே - (தன்னைப்) போற்றின வீபிஷணன் பொன் மகுடம் முடியிற் சூட, பகைத்து நின்ற சேனையுடன் இராவணனும் அவன் உறவினர்களும் - எரிபட்டு அழிய, (அன்பு) மாறுதல் இல்லாத தேவர்கள் (தமது பொன்னுலகிற்) குடிபுக் - ம்ாறு (பகைமை) பூண்ட ரகுபதி (ரகு குலத்தில் வந்த தன்லவன்) இராமச்சந்திர மூர்த்தியினுடைய மருகனே! இளைய குறமகள் வள்ளியின் பங்கனே பழநிமலை நாதனே'கந்தனே! இமையவள் (பார்வதி) மகிழ்கின்ற பெருமாளே! (ஞான அமுதை அருந்த அருள்வாயே)