திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 144 கார் அணிந்த (பழநி) Thiruppugazh 144 kAraNindha (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தந்ததனத் தான தந்ததனத் தான தந்ததனத் ...... தனதான ......... பாடல் ......... கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக் காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக் கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க் காய மொன்றுபொறுத் ...... தடியேனும் தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச் சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம் தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத் தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான் சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத் தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச் சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற் றால முண்டவருக் ...... குரியோனே ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற் றாவி னன்குடியிற் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கார் அணிந்த வரைப் பார் அடர்ந்து ... மேகங்களை அணிந்த மலைகளுடன் கூடிய இப் பூமியில் பிறந்து, வினைக் காதல் நெஞ்சு அயரத் தடுமாறி ... வினைகளைப் பெருக்கும் காதலினால் உள்ளம் சோர்ந்து, தடுமாற்றம் கொண்டு, கால் நரம்பு உதிரத் தோல் வழும்பு உறு பொய்க் காயம் ஒன்று பொறுத்து அடியேனும் ... வாயு, நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளோடு கூடிய பொய்யான உடல் ஒன்றினைச் சுமந்து அடியேனாகிய நான், தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழிச் சாபம் ஒன்று நுதல் கொடியார் தம் ... மாலை சேர்ந்த கூந்தலையும், கூர்மையான கண்களையும், வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடைய கொடி போன்ற பொதுமகளிருடைய தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிகத் தாழ்வு அடைந்து உலையத் தகுமோ தான் ... பாதங்களை வணங்கி, அவர்களுடைய அழகிய தோள்களின் மேல் ஆசைப்பட்டு, மிகவும் கீழான நிலையை அடைந்து, அழிந்து போகத் தக்கதாமோ? சூரன் அங்கம் விழத் தேவர் நின்று தொழத் தோயமும் சுவறப் பொரும் வேலா ... சூரனுடைய உடல் அழிந்து போக, தேவர்கள் நின்று போற்ற, கடலும் வற்றிப்போக, சண்டை செய்யும் வேலனே, தூய்மை கொண்ட குறத் தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே ... பரிசுத்தம் கொண்ட மயில் போன்ற வள்ளி நின்ற, தினைப் புனங்கள் சூழ்ந்த வள்ளிமலையில் திரிகின்றவனே, ஆரணன் கருடக் கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே ... பிரமன், கருடக் கொடியையுடைய திருமால் இருவரும் வணங்க, ஆலகால விஷம் முழுவதையும் உண்ட சிவபெருமானுக்கு உரியவனே, ஆலையும் பழனச் சோலையும் புடை சுற்று ஆவினன்குடியிற் பெருமாளே. ... கரும்பு ஆலைகளும், வயல்களும், சோலைகளும் பக்கங்களில் சூழ்ந்துள்ள திருவாவினன்குடியில் (பழநியில்) வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.272 pg 1.273 WIKI_urai Song number: 108 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 144 - kAr aNindha (pazhani) kAra Ninthavaraip pAra darnthuvinaik kAthal nenjayarath ...... thadumARik kAna ramputhirath thOlva zhumpuRupoyk kAya monRupoRuth ...... thadiyEnum thAri NangukuzhaR kUra Ninthavizhic cApa monRunuthaR ...... kodiyArtham thALpa Ninthavarpot ROLvi rumpimikath thAzhva dainthulaiyath ...... thakumOthAn cUra nangamvizhath thEvar ninRuthozhath thOya munjuvaRap ...... porumvElA thUymai koNdakuRath thOkai ninRapunach chUzhpe rungiriyit ...... RirivOnE Ara Nangarudak kEtha nanthozhamut RAla muNdavaruk ...... kuriyOnE Alai yumpazhanac cOlai yumpudaisut RAvi nankudiyiR ...... perumALE. ......... Meaning ......... kAr aNintha varaip pAr adarnthu: Having been born in this world containing mountains over which clouds hover, vinaik kAthal nenju ayarath thadumARi: being depressed by love, the cause of unabated deeds, and losing balance, kAl narampu uthirath thOl vazhumpu uRu poyk kAyam onRu poRuththu adiyEnum: I have been carrying this burdensome myth of a body made up of air, veins, blood, skin and flesh; thAr iNangu kuzhal kUr aNintha vizhic cApam onRu nuthal kodiyAr tham: these creeper-like whores wear garlands on their hair and possess sharp eyes and bow-shaped foreheads; thAL paNinthu avar pon thOL virumpi mikath thAzhvu adainthu ulaiyath thakumO thAn: falling at their feet and being enamoured of their beautiful shoulders, is it worthy of me to degrade myself to such a base level that destroys me? cUran angam vizhath thEvar ninRu thozhath thOyamum suvaRap porum vElA: As You fought with Your spear destroying the body of SUran, the celestials stood awestruck worshipping You and the seas dried up, Oh Lord! thUymai koNda kuRath thOkai ninRa punam sUzh perum giriyil thirivOnE: You roamed about on the Mount VaLLimalai surrounded by millet fields where VaLLi, the unblemished damsel looking like a peacock, stood! AraNan garudak kEthanan thozha mutRu Alam uNdavarukku uriyOnE: You belong to Lord SivA, who imbibed the entire poison AlakAlam as BrahmA and Lord VishNu, wielding a staff of the Great Eagle Garuda, worshipped! Alaiyum pazhanac cOlaiyum pudai sutRu AvinankudiyiR perumALE.: Many sugar mills, green fields and groves surround this place, ThiruvAvinankudi (Pazhani), which is Your abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |