திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 127 கடலை பொரியவரை (பழநி) Thiruppugazh 127 kadalaiporiyavarai (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதனன தனன தனதனன தனன தனதனன ...... தனதான ......... பாடல் ......... கடலை பொரியவரை பலக னிகழைநுகர் கடின குடவுதர ...... விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது ...... துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத ...... மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித ...... மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரக ரசரவண ...... பவலோலா படல வுடுபதியை யிதழி யணிசடில பசுப திவரநதி ...... அழகான பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கடலை பொரியவரை பலகனி கழை ... கடலை, பொரி, அவரை, பலவிதமான பழங்கள், கரும்பு நுகர் கடின குட உதர ... இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம் போன்ற வயிற்றையும், விபரீத கரட தட மு(ம்)மத ... அதிசயமான மதம் பாய்ந்த அடையாளத்தையும், மும்மதத்தையும்* நளின சிறுநயன ... தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும் கொண்ட கரிணி முகவரது துணைவோனே ... யானைமுகத்தோருக்கு இளையவனே, வடவரையின் முகடு அதிர ... வடமலையாகிய மகாமேருவின் சிகரங்களும் அதிரும்படி, ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா ... ஒரே நொடியில் உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே, மகபதி தருசுதை குறமினொடு ... தேவேந்திரனின் திருமகள் தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும், இருவரு மருவு சரசவித மணவாளா ... இருவரையும் ஒருங்கே தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே, அடல் அசுரர்கள்குல முழுது மடிய ... வலிமை பொருந்திய அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும், உயர்அமரர் சிறையைவிட ... உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும், எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரும் அயிலை ... அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை விடும் அரகர சரவண பவலோலா ... செலுத்திய ஹரஹர சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே, படல வுடுபதியை ... கூட்டமாக உள்ள நக்ஷத்திரங்களின் தலைவனாம் சந்திரனையும் இதழி யணிசடில ... கொன்றைமலரையும் தரித்திருக்கின்ற ஜடாமுடியுடைய பசுபதி வரநதி ... பசுபதியாகிய சிவபெருமானும், ஜீவநதியாகிய கங்காதேவியும், அழகான பழ நிமலை அருள்செய ... அழகிய பழமையான நிர்மலையாகிய உமாதேவியும் பெற்றருளிய மழலை மொழிமதலை ... மழலைச் சொல் பேசும் குழந்தையே, பழநி மலையில்வரு பெருமாளே. ... பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. |
* மும்மதங்கள்: இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.404 pg 1.405 pg 1.406 pg 1.407 WIKI_urai Song number: 168 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
'பழநி' திரு சண்முக சுந்தரம் 'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 127 - kadalai poriyavarai (pazhani) kadalai poriyavarai palaka nikazhainugar kadina kudaudhara ...... vipareetha karada thadamumadha naLina siRunayana kariNi mukavaradhu ...... thuNaivOnE vadava raiyinmugadu adhira orunodiyil valamva rumarakatha ...... mayilveerA magapa thitharusuthai kuRami nodiruvaru maruvu sarasavidha ...... maNavALA adala surargaLkula muzhudhu madiyauyar amarar siRaiyaivida ...... ezhilmeeRum aruNa kiraNaoLi oLirum ayilaividum araha rasaravaNa ...... bavalOlA padala udupathiyai idhazhi aNisadila pasupa thivaranadhi ...... azhagAna pazhani malaiaruLsey mazhalai mozhimadhalai pazhani malaiyilvaru ...... perumALE. ......... Meaning ......... kadalai pori avarai palakani kazhai nugar: Nuts, fried rice, beans, a variety of fruits and sugarcane are consumed kadina kuda udhara: in His tough pot-belly; vipareetha karada thada mumadha: He has strange track-marks of tears of fury due to three kinds of rage;* naLina siRu nayana: His eyes are small like the petals of lotus; and kariNi mukavaradhu thuNaivOnE: He is the elephant-faced VinAyagA, with You as His younger brother. vadavaraiyin mugadu adhira: The peaks of the northern mountain MEru were vibrating oru nodiyil valamvaru marakatha mayil veerA: when You flew around the world in a second, mounting Your emerald-green peacock! magapathi tharu suthai: DEvayAnai, the daughter of DEvEndrA, and kuRaminod iruvaru maruvu: VaLLi, the lightning-like damsel of the KuRavAs, are both flanking You, sarasavidha maNavALA: and You tease them romantically as their Consort! adal asurargaL kula muzhudhu madiya: Dynasties of the strong demons (asuras) were completely destroyed; and uyar amarar siRaiyai vida: the great DEvAs were liberated from their imprisonment; ezhilmeeRum aruNa kiraNa oLi oLirum ayilai vidum: when You wielded the exceedingly elegant Spear that sparkles like the Sun's rays! arahara saravaNa bavalOlA: Oh Hara Hara, SaravaNabhavA, the Playful One! padala udupathiyai idhazhi aNisadila: He, who adorns His tresses with the Moon, the Master of the vast multitude of stars, and with kondRai (Indian laburnum) flowers, - pasupathi vara nadhi: that Pasupathi (Leader of the souls) SivA, the eternal river GangA, azhagAna pazha nimalai aruLsey mazhalai mozhi madhalai: and the pretty, ancient and pure Mother UmAdEvi have together delivered You as their babbling baby! pazhani malaiyil varu perumALE.: You have Your abode at Mount Pazhani, Oh Great One! |
* Three kinds of rage: 'icchA sakthi' (Powerful Desire), 'kriyA sakthi' (Creative Power) and 'gnAna sakthi' (Power of Knowledge). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |