திருப்புகழ் 117 இருகனக மாமேரு  (பழநி)
Thiruppugazh 117 irukanagamAmEru  (pazhani)
Thiruppugazh - 117 irukanagamAmEru - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தானான தானதன தந்த
     தனதனன தானான தானதன தந்த
          தனதனன தானான தானதன தந்த ...... தனதான

......... பாடல் .........

இருகனக மாமேரு வோகளப துங்க
     கடகடின பாடீர வாரமுத கும்ப
          மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ

இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
     னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
          இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல்

பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
     தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
          பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப்

பிணியினக மேயான பாழுடலை நம்பி
     உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
          பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ

கருணையுமை மாதேவி காரணிய நந்த
     சயனகளி கூராரி சோதரிபு ரந்த
          கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலா

கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு
     மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
          கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே

பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
     கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
          பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா

பலமலர்க ளேதூவி யாரணந வின்று
     பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
          பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார்
அமுத கும்பம் இணை சொல் இளநீரோ
... இரண்டு பொன்
மயமான பெரிய மேரு மலையோ? கலவைச் சந்தனம் அணிந்த,
பரிசுத்தமான, பச்சைக் கற்பூரம் அணிந்த, கச்சை அணிந்த அமுத
கலசத்துக்கு சமானமென்று கூறப்படும் இளநீரோ?

கர அசல இரண்டு குவடேயோ இலகு மலரே வாளியாகிய
அநங்கன் அணி மகுடமோ தான்
... துதிக்கையை உடைய மலை
எனப்படும் யானை போன்ற இரண்டு குன்றுகளோ? சிறந்த
மலர்களையே கணைகளாகக் கொண்ட மன்மதனுடைய அழகிய
கிரீடம்தானோ?

எனா மிக வளர்ந்த இள முலை மி(ன்)னார் மோக மாயையில்
விழுந்து தணியாமல்
... என்று ஒப்பிட்டுச் சொல்லும்படி மிக
வளர்ந்துள்ள இள மார்பகங்களையுடைய மின்னலைப் போன்ற பொது
மகளிரின் காம வலையில் அகப்பட்டு, அந்த மோகம் குறைவு படாமல்,

பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே
ஆகவே எதிர் புகழ்ந்து பெரிய தமிழே பாடி
... தாராள மனத்துடன்
ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்*
நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப்
பாக்களையே பாடி,

நாள் தொறும் இரந்து நிலை காணாப் பிணியின் அகமே
ஆன பாழ் உடலை நம்பி
... தினமும் (இங்ஙனம்) இரந்து நிலை
காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி,

உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு பிறவி தனிலே
போக மீளவும் உழன்று திரிவேனோ
... உயிரைப் பயனிலதாக
நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும்
அலைந்து திரிவேனோ?

கருணை உமை மாதேவி காரணி அநந்த சயன களி கூர்
அரி சோதரி புர அந்த(க்) கடவுளுடன் வாதாடு காளி மலை
மங்கை அருள்பாலா
... கருணை நிறைந்த பார்வதி, எல்லாவற்றுக்கும்
காரணமானவள், ஆதிசேஷன் மேல் துயில் மகிழ்ச்சியுடன் கொள்ளும்
திருமாலின் சகோதரியானவள், திரிபுரம் எரித்த சிவபெருமானுடன்
(நடனத்தில்) போட்டியிட்ட காளி, (இமய) மலை அரசின் குமாரி
பெற்ற குழந்தையே,

கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா
மாட மேடைகள் துலங்கு கலிசை வரு காவேரி சேவகனொடு
அன்பு புரிவோனே
... கருடனோடு போட்டியிடுவது போல
உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும் பெரிய
மாட மேடைகளும் துலங்குகின்ற கலிசை என்னும் ஊரில் உள்ள
காவேரி சேவகன்** என்ற மன்னனிடத்தில் அன்பு பூண்டவனே,

பரவை இடையே பாதக அசுரர் விழுந்து கதறி இடவே
பாதசாதனன் உ(ள்) நெஞ்சு பலிதம் எனவே ஏகவே மயிலில்
வந்த குமரேசா
... கடலிடையே பாதக அசுரர்கள் விழுந்து கதறவும்,
இந்திரனுடைய உள்ளத்து எண்ணம் பலித்தது என்று அவன் மகிழ்ந்து
(தேவலோகத்துக்குச்) செல்ல, மயில் மீது எழுந்தருளி வந்த குமரேசனே,

பல மலர்களே தூவி ஆரண(ம்) நவின்று பரவி இமையோர்
சூழ நாள் தோறும் இசைந்து
... பல விதமான மலர்களைத் தூவி,
வேதங்களை ஓதித் துதி செய்து தேவர்கள் சூழ நின்று நாள் தோறும்
மகிழ்ந்து நிற்க,

பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே. ...
பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும்
பெருமாளே.


* ஐந்து தேவ தருக்கள்:

சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.


** கலிசை என்னும் ஊரில் அக்காலத்துத் தலைவனாக இருந்த ஒரு அன்பன்.
அருணகிரிநாதரின் நண்பன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.354  pg 1.355  pg 1.356  pg 1.357 
 WIKI_urai Song number: 146 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 117 - irukanaga mAmEru (pazhani)

irukanaka mAmEru vOkaLapa thunga
     kadakadina pAdeera vAramutha kumpa
          miNaisoliLa neerOka rAsalai raNdu ...... kuvadEyO

ilakumala rEvALi yAkiyaa nanga
     naNimakuda mOthAne nAmikava Larntha
          iLamulaimi nArmOka mAyaiyilvi zhunthu ...... thaNiyAmal

perukiyoru kAsEko dAthavarai yainthu
     tharuvainika rEyAka vEyethirpu kazhnthu
          periyathami zhEpAdi nAdoRumi ranthu ...... nilaikANAp

piNiyinaka mEyAna pAzhudalai nampi
     uyiraiyava mAynAdi yEpavani rampu
          piRavithani lEpOka meeLavumu zhanRu ...... thirivEnO

karuNaiyumai mAthEvi kAraNiya nantha
     sayanakaLi kUrAri sOtharipu rantha
          kadavuLudan vAthAdu kALimalai mangai ...... yaruLbAlA

karudanudan veeRAna kEthanamvi Langu
     mathilinodu mAmAda mEdaikaLthu langu
          kalisaivaru kAvEri sEvakano danpu ...... purivOnE

paravaiyidai yEpAtha kAsurarvi zhunthu
     kathaRiyida vEpAka sAthananu nenju
          palithamena vEyEka vEmayilil vantha ...... kumarEsA

palamalarka LEthUvi yAraNana vinRu
     paraviyimai yOrcUzha nAdoRumi sainthu
          pazhanimalai meethOrpa rAparani Rainju ...... perumALE.

......... Meaning .........

iru kanaka mA mEruvO kaLapa thunga kadi kadina pAdeera vAr amutha kumpam iNai sol iLaneerO: "Are these two, huge MEru mountains made of gold? Are these tender coconuts that look like pots of pure nectar, smeared with sandalwood paste, with the fragrance of camphor and clothed in a blouse?

kara asala iraNdu kuvadEyO ilaku malarE vALiyAkiya anangan aNi makudamO thAn: Are these two, hills shaped like elephants with trunks? Are these the beautiful crown of Manmathan (God of Love) who wields great flowers as arrows?" -

enA mika vaLarntha iLa mulai mi(n)nAr mOka mAyaiyil vizhunthu thaNiyAmal: such comparisons arise looking at the bulging and youthful breasts of the lightning-like whores; falling a victim to their net of passion and with unabated fervour,

peruki oru kAsE kodAthavarai ainthu tharuvai nikarE AkavE ethir pukazhnthu periya thamizhE pAdi: I have been flattering misers, who have never opened their heart to give even a coin by way of alms, and comparing them to the five wish-yielding divine trees*; I have even composed Tamil songs in praise of them;

nAL thoRum iranthu nilai kANAp piNiyin akamE Ana pAzh udalai nampi: I have been begging like this everyday, trusting my mortal body that is subject to unidentifiable diseases;

uyirai avamAy nAdiyE pava(m) nirampu piRavi thanilE pOka meeLavum uzhanRu thirivEnO: having concluded that my life is useless, am I destined to roam about like this eventually to take a rebirth in this world filled with sinful deeds?

karuNai umai mAthEvi kAraNi anantha sayana kaLi kUr ari sOthari pura antha(ka) kadavuLudan vAthAdu kALi malai mangai aruLbAlA: She is Goddess PArvathi full of compassion; She is the primary cause for everything; She is the sister of Lord VishNu who slumbers with relish on the serpent-bed, namely, AdhisEshan; She came as Goddess KALi challenging Lord SivA (in dance), who burnt down Thiripuram; She is the daughter of Mount HimavAn; and She graciously delivered You, Oh Lord!

karudanudan veeRu Ana kEthanam viLangu mathilinodu mA mAda mEdaikaL thulangu kalisai varu kAvEri sEvakanodu anpu purivOnE: In the town of Kalisai, flags on top of the fortress walls and large terraces fly so high on the sky that they seem to compete with white-beaked eagles (garudan); You have a special affection for KAvEri SEvakan**, the King of Kalisai, Oh Lord!

paravai idaiyE pAthaka asurar vizhunthu kathaRi idavE pAthasAthanan u(L) nenju palitham enavE EkavE mayilil vantha kumarEsA: The evil demons fell into the sea and screamed loudly and IndrA left (for the celestial land) happily, having witnessed the fulfilment of his desire, as You came mounting the peacock, Oh Lord KumarA!

pala malarkaLE thUvi AraNa(m) navinRu paravi imaiyOr cUzha nAL thORum isainthu: Surrounding this mountain with relish everyday, the celestials chant the vEdAs in worship, showering a variety of flowers;

pazhani malai meethu Or parAparan iRainju perumALE.: on this Mount Pazhani, You are seated, being worshipped by the matchless Lord SivA, Oh Great One!


* * The five wish-yielding Divine trees are:

santhAnam, aricchanthanam, manthAram, pArijAtham and kaRpagam.


** He was the leader in a town called Kalisai.
He was a close friend of AruNagirinAthar.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 117 irukanaga mAmEru - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]