திருப்புகழ் 116 இரவி என  (பழநி)
Thiruppugazh 116 iraviena  (pazhani)
Thiruppugazh - 116 iraviena - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தானான தனதனன
     தனதனன தனதனன தானான தனதனன
          தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான

......... பாடல் .........

இரவியென வடவையென ஆலால விடமதென
     உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
          இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ

எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
     யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
          இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச

அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
     அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
          அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள்

அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
     அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
          யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே

நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
     பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
          நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே

நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
     கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
          நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா

பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
     படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
          பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா

பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
     வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
          பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரவி என வடவை என ஆலால விடம் அது என ... சூரியன்
என்று கூறும்படியும், வடவைமுகாத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால
விஷம் என்று சொல்லும்படியும்

உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர ... கொடிய
வடிவை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தின் மேலே செல்லும் சந்திரனும் வர,

இரதி பதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ ...
ரதி தேவியின் கணவனாகிய மன்மதன் முதல் நாலு மலர்ப்பாணங்களைச்
செலுத்த, அவனது வெற்றிச் சின்னமான (எக்காளமாகிய) குயில் கூவ,

எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி
இசை குறுகி இரு செவியில் நாராசம் உறுவது என இகல்
புரிய
... ஏழு கடலாகிய, அவனுடைய முரச வாத்தியத்தின் இசையும்,
புல்லாங் குழலின் ஓசையும், மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகளின்
ஓசையும் நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும்
பாய்ந்து போராடவும்,

மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச ... காம
வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை
மொழிகளைப் பேசி நகையாடவும்,

அரஹர என வநிதை படு பாடு ஓத அரிது அரிது ... அரகர
என்று இப்பெண் படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது
மிக மிகக் கடினம்.

அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள் ...
அமுதமும் மயிலும் போன்று எப்போதும் இருக்கும் என் மகள் இந்த நிலை
எல்லாம் கருதி எல்லோரிடமும் பகைமைப் போர் செய்கின்றாள்.

அவசம் உற அவசம் உற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு
ஆனாள்
... மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும்,
மிகவும் மெலிந்து போனாள்.

அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது
அடிமை கொள உனது பரம்
... இப்பெண் திக்கற்றவள். இவள்
தலை விதி இங்ஙனம் இருந்த போதிலும் உன்னை விட்டு நீங்குதல்
என்பது முடியாது. இவளை அடிமை கொள்ளுவது உன்னுடைய
பொறுப்பேயாகும்.

ஆறாத ஒரு தனிமை அவளை அணை தர இனிதின்
ஓகார பரியின் மிசை வருவாயே
... காதல் தணியாத, தன்னந்
தனியளாகிய அந்தப் பெண்ணை அணைந்து ஆட்கொள்ளுமாறு,
இனிமையுடன் ஓங்கார வடிவத்தோடு கூடிய மயிலின் மேல்
(முருகா) நீ வந்து அருளுக.

நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு
சகடு உதை அது செய்து
... மலையில் பசுக் கூட்டங்கள் எல்லாம்
துதி செய்து தம்மைச் சூழந்து வர, ஒப்பற்ற மருத மரத்தையும், போர்
புரிந்து கொல்வதற்காக வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும்
உதைத்துக் கொன்று,

ஆ மாய மழை சொரிதல் நிலை குலைய மலை
குடையதாவே கொள் கரகமலன் மருகோனே
... பசுக்கள்
அழியுமாறு மழை பெய்வது தடைபட, கோவர்த்தன மலையைக்
குடையாகப் பிடித்த, தாமரை போன்ற கரங்களை உடைய
கோபாலனின் மருகனே,

நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி ... மாசு
இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச
எழுந்தருளும் குமரி,

கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி ... கெளரி, காளி,
பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும்
தலைவி,

நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை
அருள்பாலா
... நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய
மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே,

பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடு பொடி பட
அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத
... கடலும், மலையும்,
அசுரர் கூட்டமாகிய பெரிய படையும் தவிடு பொடியாகவும், தேவர்கள்
துன்பம் நீங்கவும், வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த

பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில்வீரா ...
தாமரை மலர் போன்ற திருக் கரங்களை உடையவனே, முருகனே,
நான்கு வேதங்களிலும் வல்ல ஞான ஒளியினருக்கு அணிகலமாக
விளங்குபவனே, மயில் வீரனே,

பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குற
மகள் மகிழும் லீலா
... பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம்
இவைகளின் கலவைச் சேறு நிரம்பி வளர்கின்ற மார்பகங்களை
உடைய மங்கை, குறப் பெண்ணாகிய வள்ளி மகிழும் இன்பத்
திருவிளையாடல்களைச் செய்தவனே,

விதுர மதுர பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர்
பெருமாளே.
... வாக்கு வல்லமை நிறைந்த, சுவை நிரம்பிய நூலாகிய
தேவாரத்தை (திருஞான சம்பந்தராக வந்து) உலகுக்குத்
தந்தருளியவனே, பழனிப் பதியில் எழுந்தருளியுள்ள
கோலாகலமானவனே, தேவர்களின் பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்
கூறுவதுபோல அமைந்தது. சந்திரன், குயில், மன்மதன், மலர்ப் பாணங்கள்,
கடல் ஓசை, குழல் ஓசை, மாடுகளின் மணி ஓசை, மகளிர் வசைப் பேச்சு
முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.350  pg 1.351  pg 1.352  pg 1.353  pg 1.354  pg 1.355 
 WIKI_urai Song number: 145 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 116 - iraviyena (pazhani)

iraviyena vadavaiyena AlAla vidamathena
     uruvukodu kakanamisai meethEki mathiyumvara
          irathipathi kaNaikaLoru nAlEva viruthukuyi ...... lathukUva

ezhukadalin murasinisai vEyOsai vidaiyinmaNi
     yisaikuRuki yiruseviyi nArAsa muRuvathena
          ikalpuriya mathanakuru vOrAtha anaiyarkodu ...... vasaipEsa

araharena vanithaipadu pAdOtha aritharithu
     amuthamayi lathukaruthi yArOdu mikalpurivaL
          avasamuRa avasamuRa ArOmal tharavumika ...... melivAnAL

akuthiyivaL thalaiyilvithi yAnAlum vilakarithu
     adimaikoLa vunathuparam ARAtha voruthanimai
          yavaLaiyaNai tharainithi nOkAra pariyinmisai ...... varuvAyE

niraiparavi varavaraiyu LOrseetha maruthinodu
     porusakadu vuthaiyathusey thAmAya mazhaisorithal
          nilaikulaiya malaikudaiya thAvEkoL karakamalan ...... marukOnE

nirumaliya thirinayani vALveesa varukumari
     kavuripayi raviyarava pUNAri thiripuvani
          nipudamalai yarasanaruL vAzhvAna puraNavumai ...... yaruLbAlA

paravaikiri yasurarthiraL mAsEnai thavidupodi
     padAmarar thuyarakala vElEvi yamarporutha
          pathumakara thalamuruka nAlvEtha kararaNika ...... mayilveerA

paLithamruka mathakaLapa sERAra vaLarumulai
     vanithaikuRa makaLmakizhum leelAvi tharamathura
          panuvaltharu pazhanivaru kOlAka lavavamarar ...... perumALE.

......... Meaning .........

iravi ena vadavai ena AlAla vidam athu ena: It can be compared to the sun, or the inferno coming from the north at the end of the aeon or the terrible poison (AlakAlam);

uruvu kodu kakanam misai meethu Eki mathiyum vara: such is the hideous form of the moon that transits the sky;

irathi pathi kaNaikaL oru nAlu Eva viruthu kuyil athu kUva: Manmathan (God of Love), the consort of Rathi DEvi, keeps on shooting the arrows of four flowers; like His trumpet (ekkAlam), the cuckoo keeps cooing;

ezhu kadalin murasin isai vEy Osai vidaiyin maNi isai kuRuki iru seviyil nArAsam uRuvathu ena ikal puriya: His drums are roaring like the seven seas; the jarring sound of the flute and the bells tied to the bulls is piercing the ears like warring arrows;

mathana kuru OrAtha a(n)naiyar kodu vasai pEsa: not realising her torment of passion, the women-folk heckle her, spreading evil gossip;

arahara ena vanithai padu pAdu Otha arithu arithu: uttering Your name as "Hara Hara", my girl suffers immeasurable grief that is beyond description;

amutham mayil athu karuthi ArOdum ikal purivaL: my daughter, who is normally sweet like nectar and beautiful like peacock, is hostile to everyone because of her situation;

avasam uRa avasam uRa Ar Omal tharavum mika melivu AnAL: she swoons again and again and has become very weak and thin due to the build-up of scandal in the town;

akuthi ivaL thalaiyil vithi AnAlum vilaka arithu adimai koLa unathu param: she is destitute and directionless; even if she is destined to suffer, there is no question of her leaving Your presence; it is Your responsibility to take charge of her;

ARAtha oru thanimai avaLai aNai thara inithin OkAra pariyin misai varuvAyE: her love is unabated, and to embrace this lonesome girl, kindly mount the OM-shaped peacock and come to her rescue, Oh MurugA!

nirai paravi vara varaiyuL Or seetha maruthinodu poru sakadu uthai athu seythu: In the mountain, herds of cow came around Him in worship; He knocked down the unique marutha tree and kicked the demon (SakatAsuran) to his death, when he came charging in the disguise of a cart-wheel to kill Him;

A mAya mazhai sorithal nilai kulaiya malai kudaiyathAvE koL karakamalan marukOnE: To ward off the torrential rain that came down hard to kill the cattle, He lifted the mount GOvardhan like an umbrella; You are the nephew of that Lord GopAlan with lotus-like hand.

nirumaliya thiri nayani vAL veesa varu kumari: She is absolutely without blemish; She has three eyes; She is Kumari who radiates light as She moves about;

kavuri payiravi arava pUNAri thiri puvani: She is Gowri and KALi, wearing the serpent as jewel; She is presiding over the three worlds;

nipuda malai arasan aruL vAzhvAna puraNa umai aruLbAlA: She is the daughter reared by HimavAn, the Mountain-King of the closely packed Mount HimAlayAs; and She is the Omnipresent Goddess, UmA; You are Her Son!

paravai kiri asurar thiraL mA sEnai thavidu podi pada amarar thuyar akala vEl Evi amar porutha: You fought in the war by wielding the spear and shattered the seas, mountains and large armies of the demons, thereby removing the misery of the celestials;

pathuma karathala muruka nAl vEthakarar aNika mayilveerA: Your hands are like lotus, Oh MurugA! You are like the jewel in the crown of knowledge of the enlightened ones who are well-versed in the four vEdAs, Oh Warrior, mounting the Peacock!

paLitha mrukamatha kaLapa sERu Ara vaLaru mulai vanithai kuRa makaL makizhum leelA: She is the damsel of the KuRavAs, with blooming bosom splattered with the paste of sandal mixed with camphor and musk; Your flirtatious sports with that VaLLi elated her, Oh Lord!

vithura mathura panuval tharu pazhani varu kOlAkala amarar perumALE.: The great text of hymns (ThEvAram), full of powerful diction and sweet meaning, was dedicated by You (coming as ThirugnAna Sambandhar) to this world, Oh Lord! You are seated, with joy, in Pazhani as Your abode, and You are the Lord of the celestials, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan.
The moonlight, the cuckoo, the God of Love Manmathan, His flowery arrows, the roaring sea, the sounds of flute and bells tied to the bulls and the scandal-mongering women are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 116 iravi ena - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]