திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி) Thiruppugazh 114 ARumugamARumugam (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தந்ததான ......... பாடல் ......... ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ... 'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை ஆகம் அணி மாதவர்கள் ... உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர் சூடும் அடியார்கள் ... பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் பதமே துணைய தென்று ... திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், நாளும் ஏறுமயில் வாகன ... தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே', குகா சரவணா எனது ஈச ... 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய ஈசனே', எனமானம் உனதென்றும் ஓதும் ... 'என் பெருமை உனது பெருமை' என்று கூறியும் ஏழைகள் வியாகுலம் ... ஏழையடியார்களின் மனத்துயர் இதேதென வினாவில்உனை ... ஏன் எப்படி வந்தது என்று முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை யேவர் புகழ்வார் ... யார்தாம் புகழ்வார்கள்? மறையும் என்சொலாதோ ... வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? நீறுபடு மாழைபொரு மேனியவ ... திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய் வேல, அணி நீலமயில் வாக ... வேலனே அழகிய நீலமயில் வாகனனே உமை தந்தவேளே ... உமையாள் பெற்ற முருகவேளே நீசர்கள் த(ம்)மோடு ... அசுரர்கள் அனைவருடனும் (எ)னது தீவினையெலா மடிய ... என்னுடைய தீவினையாவும் மடிந்தொழிய நீடு தனி வேல் விடு ... நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய மடங்கல்வேலா ... வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே சீறிவரு மாறவுணன் ... கோபித்து வந்த பெரும் அசுரன் (கஜமுகாசுரன்) ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா ... உயிரை உண்ட ஆனைமுகத் தேவரின் தம்பியே சிகரி அண்டகூடஞ்சேரும் ... மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும் அழகார் பழனி வாழ் குமரனே ... அழகு நிறைந்த பழநிவாழும் குமரனே பிரம தேவர் வரதா ... பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே முருக தம்பிரானே. ... முருகனே, தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.388 pg 1.389 pg 1.390 pg 1.391 WIKI_urai Song number: 161 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'பழநி' திரு சண்முக சுந்தரம் 'Pazhani' Thiru ShaNmugasundara DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு L. வசந்த குமார் Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'கரிவலம்' திரு முருக சுந்தர் Thiru M. Sundhar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு அருண் சந்தானம் (அட்லாண்டா) Thiru Arun Santhanam (Atlanta) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுகந்திஸ்ரீ Ms Sughandhisri K. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 114 - ARumugam ARumugam (pazhani) ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam ...... enRupUthi AkamaNi mAdhavarkaL pAthamalar sUdumadi yArkaL pathamE thuNaiya ...... thenRu nALum ERumayil vAkana kukA saravaNA enathu eesaena mAnamuna ...... thenRu mOthum EzhaikaLvi yAkulam ithEthena vinAvilunai yEvar pukazvAr maRaiyum ...... ensolAthO neeRupadu mAzhaiporu mEniyava vEla aNi neelamayil vAka umai ...... thanthavELE neesar kada mOdenathu theevinaiyelA madiya needu thani vEl vidu ...... madangkal vElA seeRivaru mARavuNan AviyuNum Anaimuka thEvar thuNaivA sikari ...... aNdakUdanj sErum azhakAr pazhani vAz kumaranE pirama thEvar varathA muruka ...... thambirAnE. ......... Meaning ......... ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam enRupUthi: After saying ARumukam six times, they take the Holy Ash (VibUthi) Akam aNi mAdhavarkaL: and apply it on their bodies, the great sages; pAthamalar sUdum adiyArkaL: their devotees prostrate before the sages' lotus feet; pathamE thuNaiya thenRu: such devotees' feet are the only solace to us. nALum ERumayil vAkana: Every day, (we pray to You saying) "You, the great peacock rider! kukA saravaNA enathu eesa: GuhA! SaravaNA! my God! enamAnam unathenRum Othum: My dignity is entirely Yours" and we ask EzhaikaL viyAkulam: "The mental anguish of ours, the poor souls - ithEthena vinAvilunai: why is it like this?" - Even then (if You are silent) yEvar pukazvAr: who will praise You? maRaiyum ensolAthO: What will the VEdAs speak about You? neeRupadu mAzhaiporu mEniyava: Adorned with the holy ash on Your golden body, vEla, aNi neelamayil vAka: Oh VElA! The rider of the beautiful blue peacock! umai thanthavELE: Oh MurugavEL, the son of UmAdEvi! neesarkaL tha(m)mOdu: Along with the Asuras, (e)nathu theevinaiyelA madiya: destroy my evil Karma too; needu thani vEl vidu: for that You fling Your long and unique Spear! madangkal vElA: Oh, VElA, whose Spear is fierce like VatavAgni (the Cosmic Fire which destroyed the Universe once). seeRivaru mARavuNan: The giant asura (GajamukAsuran) came furiously AviyuNum Anaimuka thEvar thuNaivA: (before) the elephant-headed VinAyagA, who took the Asura's life - You are the younger brother of that VinAyagA! sikari aNdakUdanj sErum: With mountain peaks reaching the roof of the sky, azhakAr pazhani vAz kumaranE: is beautiful Pazhani, which is Your abode, Oh KumarA! pirama thEvar varathA: You gave a boon to BrahmA! muruka thambirAnE.: MurugA! Oh Lord of Lords! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |