திருப்புகழ் 88 மாய வாடை  (திருச்செந்தூர்)
Thiruppugazh 88 mAyavAdai  (thiruchchendhUr)
Thiruppugazh - 88 mAyavAdai - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானன தந்தன தந்தன
     தான தானன தந்தன தந்தன
          தான தானன தந்தன தந்தன ...... தனதானா

......... பாடல் .........

மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
     மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்
          வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல்

வால நேசநி னைந்தழு வம்பிகள்
     ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
          வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும்

நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
     காசி லாதவர் தங்களை யன்பற
          நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ...... ளவர்தாய்மார்

நீலி நாடக மும்பயில் மண்டைகள்
     பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
          நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ

பாயு மாமத தந்திமு கம்பெறு
     மாதி பாரத மென்றபெ ருங்கதை
          பார மேருவி லன்றுவ ரைந்தவ ...... னிளையோனே

பாவை யாள்குற மங்கைசெ ழுந்தன
     பார மீதில ணைந்துமு யங்கிய
          பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா

சீய மாயுரு வங்கொடு வந்தசு
     ரேசன் மார்பையி டந்துப சுங்குடர்
          சேர வாரிய ணிந்தநெ டும்புயன் ...... மருகோனே

தேனு லாவுக டம்பம ணிந்தகி
     ரீட சேகர சங்கரர் தந்தருள்
          தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த
மழுங்கிகள் வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள்
... மாய
வாசனைகள் பூசப்பட்ட மார்பகங்களை மறைக்கின்ற புடைவையைத்
திறந்து காட்டும், நாணம் அற்றவர்கள். (பலர் வீட்டு) வாசல்கள் தோறும்
நடந்து மூக்கால் அழுகை கொள்பவர்கள்.

பழையோர் மேல் வால நேச(ம்) நினைந்து அழு(ம்) வம்பிகள்
ஆசை நோய் கொள் மருந்து இடு(ம்) சண்டிகள்
... பழைய
வாடிக்கையாளர்கள் மீது வாலிபத்தில் தாம் வைத்த நேசத்தை நினைத்து
அழும் வம்புக்காரிகள். ஆசை நோயைத் தரக் கூடிய மருந்தைக் கலந்து
இடுகின்ற கொடியோர்கள்.

வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும் நேயமே
கவி கொண்டு சொல் மிண்டிகள்
... வருகின்ற பேர்வழிகளிடம்
உள்ள பொருளைப் பார்த்து விருப்பம் கொள்ளுபவர்கள். யாராயிருந்தாலும்
நேசத்தை பாடல் மூலமாகச் சொல்லுகின்ற திண்ணிய மனத்தினர்.

காசு இலாதவர் தங்களை அன்பு அற நீதி போல நெகிழ்ந்த
பறம்பிகள் அவர் தாய்மார் நீலி நாடகமும் பயில்
மண்டைகள்
... பொருள் இல்லாதவர்களை இரக்கம் இல்லாமல்,
நீதியுடன் பேசுவதைப் போலப் பேசி, நழுவ விட்டு விலக்கும்
மோசக்காரிகள். அவர்களுடைய தாய்மார்கள் நீலி நாடகம் நடிக்கின்ற
வேசைகள்.

பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள் நீசரோடும்
இணங்கு(ம்) கடம்பிகள் உறவாமோ
... தென்னம் பாளையில் ஊறும்
கள்ளைக் குடிக்கும் விலைமாதர்கள். இழிந்தவர்களோடும் கூடுகின்ற
கெட்டவர்கள் ஆகிய இத்தகையருடைய நட்பு நன்றாகுமோ?

பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும்
கதை பார மேருவில் அன்று வரைந்தவன் இளையோனே
...
மிகுந்து பாய்கின்ற மதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட
முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையை பாரமான மேரு மலையில்
அந்நாள் (தன் ஒடிந்த தந்தத்தால்) எழுதியவருமான கணபதிக்கு தம்பியே,

பாவையாள் குற மங்கை செழும் தன பார(ம்) மீதில்
அணைந்து முயங்கிய பாகமாகிய சந்தன குங்கும மணி
மார்பா
... பதுமை போன்றவளும், குறப் பெண்ணுமாகிய வள்ளியின்
செழுவிய தன பாரத்தின் மேல் அணைந்து தழுவினதால், தனது
பங்காகக் கிடைத்த சந்தன குங்குமங்கள் உள்ள அழகிய மார்பனே,

சீயமாய் உருவம் கொ(ண்)டு வந்து அசுரேசன் மார்பை
இடந்து பசும் குடர் சேர வாரி அணிந்த நெடும் புயன்
மருகோனே
... சிங்கத்தின் உருவத்தைப் பூண்டு வந்து, அசுரர்
தலைவனாகிய இரணியனுடைய மார்பைப் பிளந்து பசிய குடலை
ஒரு சேர வாரி மாலையாக அணிந்து கொண்ட நெடிய மேகம்
போன்ற திருமாலின் மருகனே,

தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து
அருள் தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே.
...
தேன் ஒழுகும் கடம்ப மாலை அணிந்த கீரிடத்தை முடி மீது
கொண்டவனே, சங்கரர் தந்தருளிய தேவ நாயகனே, திருச்செந்தூரில்
மகிழ்ந்து வீற்றருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.222  pg 1.223  pg 1.224  pg 1.225 
 WIKI_urai Song number: 88 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 88 - mAya vAdai (thiruchchendhUr)

mAya vAdaithi mirnthidu kongaiyil
     mUdu seelaithi Ranthama zhungikaL
          vAsal thORuna danthusi NungikaL ...... pazhaiyOrmEl

vAla nEsani nainthazhu vampikaL
     Asai nOykoLma runthidu chaNdikaL
          vARa pErporuL kaNduvi rumpika ...... LevarEnum

nEya mEkavi koNdusol miNdikaL
     kAsi lAthavar thangaLai yanpaRa
          neethi pOlane kizhnthapa Rampika ...... LavarthAymAr

neeli nAdaka mumpayil maNdaikaL
     pALai yURuka LuNdidu thoNdikaL
          neesa rOdumi Nanguka dampika ...... LuRavAmO

pAyu mAmatha thanthimu kampeRu
     mAthi pAratha menRape rungathai
          pAra mEruvi lanRuva rainthava ...... niLaiyOnE

pAvai yALkuRa mangaiche zhunthana
     pAra meethila Nainthumu yangiya
          pAka mAkiya santhana kunguma ...... maNimArpA

seeya mAyuru vangodu vanthasu
     rEsan mArpaiyi danthupa sungudar
          sEra vAriya Ninthane dumpuyan ...... marukOnE

thEnu lAvuka dampama Ninthaki
     reeda sEkara sangarar thantharuL
          thEva nAyaka senthilu kantharuL ...... perumALE.

......... Meaning .........

mAya vAdai thimirnthidu kongaiyil mUdu seelai thiRantha mazhungikaL vAsal thORum nadanthu chiNungikaL: They are such shameless women that they deliberately open their saree and expose their bosom smeared with many mystic perfumes. They walk up to the doorsteps of many people and bicker about, whining a lot.

pazhaiyOr mEl vAla nEsa(m) ninainthu azhu(m) vampikaL Asai nOy koL marunthu idu(m) chaNdikaL: They recall their liaison with old suitors in the prime of their youth and cry aloud in vain. They are such evil-minded women that they add potions of subjugative medicine to the food (that they serve their suitors).

vARa pEr poruL kaNdu virumpikaL evarEnum nEyamE kavi koNdu sol miNdikaL: They show their desire in proportion to the amount of money brought by the incoming suitors. They have such a determined mind that they could convey their desire to anyone by singing love songs.

kAsu ilAthavar thangaLai anpu aRa neethi pOla nekizhntha paRampikaL avar thAymAr neeli nAdakamum payil maNdaikaL: These treacherous women do not show any mercy on suitors without money and send them away tactfully after giving them a lecture on justice. Their mothers are the worst whores who emote melodramatically.

pALai URu kaL uNdidu thoNdikaL neesarOdum iNangu(m) kadampikaL uRavAmO: They drink the toddy fermented in the spathe of the coconut trees. They are so wicked that they make love even to debased people. How can a liaison with such whores do me any good?

pAyu mA matha thanthi mukam peRum Athi pAratham enRa perum kathai pAra mEruvil anRu varainthavan iLaiyOnE: He is the Primeval God with the face of an elephant from whose jaws bilious juice of frenzy gushes profusely; He scribed the long epic story of BhAratham on the massive mount MEru (using His broken tusk); and You are the younger brother of that Lord GaNapathi!

pAvaiyAL kuRa mangai chezhum thana pAra(m) meethil aNainthu muyangiya pAkamAkiya santhana kunguma maNi mArpA: She is like an idol; She is the damsel of the KuRavAs; as You hugged the robust bosom of that VaLLi tightly, You got on Your chest Your share of the sandalwood paste and vermillion smeared on her breasts, Oh Lord!

seeyamAy uruvam ko(N)du vanthu asurEsan mArpai idanthu pasum kudar sEra vAri aNintha nedum puyan marukOnE: He came as a lion, split the chest of HiraNyan, the leader of the demons, and picked up his fresh intestines in their entirety to wear them as a garland; He is the tall Lord VishNu of the hue of a black cloud, and You are His nephew!

thEn ulAvu kadampam aNintha kireeda sEkara sangarar thanthu aruL thEva nAyaka senthil ukanthu aruL perumALE.: You wear the crown adorned with the kadappa garland from which honey oozes! You are the Leader of the celestials delivered to us by Lord Sankara (SivA), and You are seated with relish in ThiruchchendhUr, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 88 mAya vAdai - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]