பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்' திருப்புகழ் உரை 2O7 88 மாய வாசனைகள் பூசப்பட்ட கொங்கைகளை மூடுகின்ற புடைவையைத் திறக்கும் நாணம் அற்றவர்கள், (பலர் வீட்டு) வாசல்கள்தோறும் நடந்து சினுக்கம் (முக்கால் அழுகை) கொள்பவர்கள், பழைய நேசர்கள் மீதுபாலியத்தில் தாம் வைத்த நேசத்தை நினைத்து அழுகின்ற வம்புக்காரிகள், ஆசை நோயைத் தரக்கூடிய மருந்தைக் (கலந்து) என்ற கொடிய்ோர்கள், வருகின்ற பேர்வழிகளிடம் உள்ள பொருளைக் கண்டு விருப்பம் கொள்பவர்கள், யாரா யிருந்தாலும், நேசத்தைப் பாடல் மூலமாய்ப் (பாடிச்) சொல்கின்ற திண்ணிய மனத்தினர், காசு இல்லாதவர்களை இரக்கம் இல்லாமல் நீதியுடன் பேசுவதுபோலப் பேசி நழுவவிட்டு விலக்கும் மோசக்காரிகள் , அவர்களுடைய தாய்மார் - நீலி நாடகம் நடிக்கின்ற (பொய் வேடம் போடுகின்ற) வேசைகள் , தென்னம் பாளையில் ஊறும் கள்ளை உண்னும் தேவடியாள்கள், இழிந்தவர்களோடும் கூடுகின்ற கெட்ட வர்கள் - (இத்தன்மையருடைய) உறவு ஆமோ? (ஆகாது என்றபடி). பாய்கின்ற மிக்க மதங்கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையைக் கனங்கொண்ட் மேருமலையில் அந்நாள் எழுதின. வருமான (கணபதிக்கு) இளையவனே! பதுமை போன்றவளாம் குறமங்கை (வள்ளியின்) செழுவிய கொங்கைப் பாரத்தின்மேலே அணைந்து தழுவினதால் (தனது பங்காகக் கிடைத்த) சந்தன குங்குமங்கள் உள்ள அழகிய மார்பனே! க சிங்கத்தின் உருவத்தைப் பூண்டு வந்து அசுரர் தலைவனாம் இரணியனுடைய மார்பைப் பிளந்து பசிய குடலை ஒருசேர வாரி அணிந்துகொண்ட நெடிய மேகம் போன்ற திருமாலின் மருகனே!