திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 69 தோலொடு மூடிய (திருச்செந்தூர்) Thiruppugazh 69 thOlodumUdiya (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானன தானன தானன தந்தத் தானன தானன தானன தந்தத் தானன தானன தானன தந்தத் ...... தனதான ......... பாடல் ......... தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக் கோவையு லாமடல் கூறிய ழுந்தித் தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை மானமி லாவழி நெஞ்சக் காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக் காரண காரிய லோகப்ர பஞ்சச் சோகமெ லாமற வாழ்வுற நம்பிற் காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ பாலன மீதும னான்முக செம்பொற் பாலனை மோதப ராதன பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப் பாவியி ராவண னார்தலை சிந்திச் சீரிய வீடணர் வாழ்வுற மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே சீலமு லாவிய நாரதர் வந்துற் றீதவள் வாழ்புன மாமென முந்தித் தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய் சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித் தாறுகொள் பூகம ளாவிய இன்பச் சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தோலொடு மூடிய கூரையை நம்பி ... தோல் கொண்டு மூடப்பட்ட இந்த உடலை நம்பி, பாவையர் தோதக லீலைநி ரம்பி ... மாதர்களுடைய வஞ்சக லீலைகள் நிரம்புவதால், சூழ்பொருள் தேடிட ஓடிவ ருந்தி ... அவர்களுக்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டி ஓடியும், வருந்தியும், புதிதான தூதொடு நான்மணி மாலைப்ரபந்த ... புதுவிதமான நூல்களாக தூது, நான்மணிமாலை, பிரபந்தங்கள், கோவையு லாமடல் கூறியழுந்தி ... கோவை, உலா, மடல்* முதலியவற்றைப் பாடி, அவற்றிலேயே ஈடுபட்டு, தோமுறு காளையர் வாசல்தொ றும்புக்கு அலமாரும் ... குற்றம் நிறைந்த இளைஞர்களின் வாசல் தோறும் புகுந்து வருந்துகின்ற காலனை வீணனை நீதிகெ டும்பொய்க் கோளனை ... கால்களைக் கொண்டவனை, வீணனை, நீதி தவறிய பொய்யைக் கொண்டவனை, மானமிலா அழி நெஞ்சக் காதக லோபவ்ருதாவனை ... மானமில்லாது அழிந்திடும் நெஞ்சனை, பிறரை வருத்தும் லோபியை, பயனற்றவனை, நிந்தைப் புலையேனை ... நிந்திக்கப்படும் கீழ்மகனாகிய என்னை, காரண காரிய லோகப்ரபஞ்சச் சோகமெலாம் அற ... காரண, காரியத் தொடர்போடு வரும் இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் நீங்கவும், வாழ்வுற நம்பிற் காசறு வாரி ... நல்வாழ்வு சேரவும், விருப்பமுடன் குற்றமற்ற செல்வமாகிய மெய்ஞ் ஞான தவஞ்சற்றருளாதோ ... உண்மை ஞானமான தவநிலை வந்தடைய சிறிதாவது அருளக்கூடாதோ? பால் அ(ன்)ன மீதுமன் நான்முக ... பால் போன்ற வெண்மையான அன்னத்தின் மீது வீற்றிருந்து, நான்கு முகங்களும் செம்பொற் பாலனை மோது அபராதன ... பொன்னிறமும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரமனை, முன்பு தலைகளில் குட்டி, தண்டனை விதித்தவனே, பண்டப் பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்று அமராடி ... முன்பு, அந்தப் பெரிய அநுமானின் தோளிலே வீற்றிருந்து போர் செய்து, பாவியி ராவணனார்தலை சிந்தி ... பாவியாம் ராவணனுடைய தலைகள் சிதறவும், சீரிய வீடணர் வாழ்வுற ... உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறவும் செய்து, மன்றற் பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே ... மணந்த பாவையாம் சீதையின் தோளைத் தழுவிய மாமனாம் (ராமனின்) திருமாலின் சிந்தைக்கு இனியவனே, சீலமு லாவிய நாரதர் வந்துற்று ... நல்ல குணங்கள் நிறைந்த நாரத முநிவர் உன்னிடம் வந்து, ஈதவள் வாழ்புன மாமென முந்தி ... இதுதான் அவ்வள்ளி வாழும் தினைப்புனமாகும் என்று குறிப்பிட்டுக் காட்ட, உடனே நீ முடுகிச் சென்று, தேமொழி பாளித கோமள இன்பக்கிரிதோய்வாய் ... தேன் போன்ற மொழியாளாகிய வள்ளியின் பச்சைக்கற்பூர கலவையை அணிந்த, அழகிய, இன்பம் நல்கும் மலையொத்த மார்பினைத் தழுவியவனே, சேலொடு வாளைவரால்கள் கிளம்பி ... சேல், வாளை, வரால் மீன்கள் யாவும் கிளம்பித் துள்ளிப் பாய்ந்து, தாறுகொள் பூகம் அளாவிய இன்ப ... குலைசாய்த்திருக்கும் பாக்கு மரங்களில் குலாவும் இன்பகரமான சீரலை வாய்நகர் மேவிய கந்தப் பெருமாளே. ... திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. |
* இங்கு கூறியுள்ள நூல்கள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் 96 வகைகளில் சில. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.190 pg 1.191 pg 1.192 pg 1.193 WIKI_urai Song number: 75 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 69 - thOlodu mUdiya (thiruchchendhUr) thOlodu mUdiya kUraiyai nambip pAvaiyar thOdhaka leelaini rambic chUzhporuL thEdida Odiva rundhip ...... pudhidhAna thUdhodu nAnmaNi mAlaipra bandhak kOvaiyu lAmadal kURiya zhundhith thOmuRu kALaiyar vAsaltho Rumpuk ...... kalamArum kAlanai veeNanai needhike dumpoyk kOLanai mAnami lAvazhi nenjak kAdhaka lObavru dhAvanai nindhaip ...... pulaiyEnai kAraNa kAriya lOkapra panjac sOkame lAmaRa vAzhvuRa nambiR kAsaRu vArimey nynAnatha vanchat ...... RaruLAdhO pAlana meedhuma nAnmuga sempoR pAlanai mOdhapa rAdhana paNdap pAriya mAruthi thOLmisai koNdut ...... RamarAdip pAviyi rAvaNa nArthalai sindhic cheeriya veedaNar vAzhvuRa mandRaR pAvaiyar thOLpuNar mAthular chindhaikku ...... iniyOnE seelamu lAviya nAradhar vandhut ReedhavaL vAzhpuna mAmena mundhith thEmozhi pALitha kOmaLa inbak ...... girithOyvAy sElodu vALaiva rAlkaLki Lambith thARukoL pUgama LAviya inbac cheeralai vAynagar mEviya kandhap ...... perumALE. ......... Meaning ......... thOlodu mUdiya kUraiyai nambi: The harlots depend upon this body which is but a shell covered by skin; pAvaiyar thOdhaka leelai nirambi: the games played by these women are replete with deceit; chUzhporuL thEdida Odi varundhi: in order to shower them with riches, people run around and are at pains pudhidhAna thUdhodu nAnmaNi mAlai prabandha: to compose newer versions of ThUthu, NAn maNi mAlai, Prabandham, kOvayu lAmadal kURiya zhundhi: Kovai, UlA and Madal*, becoming totally obsessed with them. thOmuRu kALaiyar vAsaltho Rumpuk kalamArum kAlanai: My legs hurt after walking door to door of these wicked youth. veeNanai needhi kedumpoy kOLanai: I am a vain fellow and an immoral liar; mAnami lAvazhi nenjak kAdhaka lOba vrudhAvanai: I am a shameless person with a degenerating mind; I am a miser, abusing others; I am utterly useless; and nindhaip pulaiyEnai: I am a disreputable lowly person. kAraNa kAriya lOka prapanja sOkamelAm aRa: For the removal of all miseries arising in this world due to the phenomenon of cause and effect, vAzhvuRa nambiR kAsaRu vAri meynynAna thavanchatru aruLAdhO: and for the sake of good life, will You not willingly grant me a little of the true wisdom that is the flawless treasure? pAlana meedhu manAnmuga: He is seated on the swan, white as milk, and has four faces; sempoR pAlanai mOdha parAdhana: He has a reddish-golden complexion and His job is creation; That BrahmA was once punished by You by knocking His heads with Your knuckles! paNda pAriya mAruthi thOLmisai koNdutru amarAdi: Once, He sat on the shoulders of mighty HanumAn and fought in the battlefield; pAviyi rAvaNa nArthalai sindhi: He knocked off the heads of the sinner, RAvaNan; seeriya veedaNar vAzhvuRa: He blessed virtuous Vibhishana with prosperous life; mandraR pAvaiyar thOLpuNar mAthular chindhaikku iniyOnE: and He hugged the shoulders of His consort, Seetha; that RAmA (Vishnu) is Your uncle, and You are very dear to His heart! seelamu lAviya nAradhar vandhutru: The sage Naradha, renowned for his upright character, came to You eedhavaL vAzhpuna mAmena mundhith: and showed You the millet-field where VaLLi was living; You then rushed over there thEmozhi pALitha kOmaLa inba girithOyvAy: to the honey-tongued VaLLi and embraced her beautiful mountainous bosoms, fragrant with the aroma of camphor! sElodu vALai varAlkaL kiLambi: The various fish of the variety of sEl, vALai and varAl vault so high thARukoL pUgama LAviya inba: as to caress the bunches of betelnuts in the PUgam trees in this joyful seeralai vAynagar mEviya kandha perumALE.: town of ThiruchchendhUr, which is Your abode, Oh KandhA, the Great One! |
* The names of the works mentioned here are some of the 96 miniliteratures in Tamil. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |