திருப்புகழ் 68 தொந்தி சரிய  (திருச்செந்தூர்)
Thiruppugazh 68 thondhisariya  (thiruchchendhUr)
Thiruppugazh - 68 thondhisariya - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தனன தனனா தனனதன
     தந்த தனன தனனா தனனதன
          தந்த தனன தனனா தனனதன ...... தனதான

......... பாடல் .........

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தொந்தி சரிய மயிரே வெளிற ... பெருத்த வயிறு சரியவும், முடி
நரைக்கவும்,

நிரை தந்தம் அசைய ... வரிசையாயிருந்த பற்கள் ஆடவும்,

முதுகே வளைய இதழ் தொங்க ... முதுகில் கூன் விழவும், உதடு
தொங்கிப்போகவும்,

ஒருகை தடிமேல் வர ... (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது
வரவும்,

மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென ... பெண்கள்
கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும்,

இருமல் கிண்கிணென முன் ... முன்னே இருமல் கிண்கிண் என்று
ஒலிக்கவும்,

உரையே குழற ... பின்னே பேச்சு குழறவும்,

விழிதுஞ்சு குருடு படவே ... கண்கள் மங்கி குருட்டுத்தன்மை
அடையவும்,

செவிடுபடு செவியாகி ... செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும்,

வந்த பிணியும் அதிலே மிடையும் ... வந்த நோய்களும், அவற்றின்
இடையிலே புகுந்த

ஒரு பண்டிதனும் ... ஒரு வைத்தியனும்,

மெயுறு வேதனையும் ... உடல் படும் வேதனையும்,

இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக ... சிறு பிள்ளைகள்
சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத்
தொளைக்கவும்,

துயர்மேவி மங்கை யழுது விழவே ... மிக்க துயரம் கொண்டு மனைவி
அழுது விழவும்,

யமபடர்கள்நின்று சருவ ... யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர
போராடவும்,

மலமே யொழுக ... மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும்,

உயிர் மங்கு பொழுது ... உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில்

கடிதே மயிலின்மிசை வரவேணும் ... முருகா, நீ விரைவில்
மயில்மேல் வரவேண்டும்.

எந்தை வருக ரகுநா யகவருக ... என் அப்பனே வா,
ரகுநாயகனே வா,

மைந்த வருக மகனே யினிவருக ... குழந்தாய் வா, மகனே
இதோ வா,

என்கண் வருக எனதா ருயிர்வருக ... என் கண்ணே வா, என்
ஆருயிரே வா,

அபிராம இங்கு வருக அரசே வருக ... அழகிய ராமனே வா, இங்கே
வா, அரசே வா,

முலையுண்க வருக மலர்சூ டிடவருக ... பால் குடிக்க வா, பூ
முடிக்க வா,

என்று பரிவி னொடுகோ சலைபுகல ... என்றெல்லாம் அன்போடு
கோசலை கூறி அழைக்க

வருமாயன் சிந்தை மகிழு மருகா ... வந்த மாயன் திருமால் மனம்
மகிழும் மருமகனே,

குறவரிள வஞ்சி மருவும் அழகா ... குறவர் குல இளங்கொடியான
வள்ளி அணையும் அழகா,

அமரர்சிறை சிந்த ... தேவர்களின் சிறைவாசம் ஒழிய,

அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா ... அசுரக் கூட்டம்
வேரோடு மடிய அழித்த தீரனே,

திங்கள் அரவு நதிசூ டியபரமர் ... நிலவும், பாம்பும், நதியும்
சூடிய பரமர்

தந்த குமர ... தந்தருளிய குமரனே,

அலையே கரைபொருத செந்தி னகரில் ... அலை கரையில்
மோதும் திருச்செந்தூரில்

இனிதே மருவிவளர் பெருமாளே. ... இன்பமாய் வீற்றியருளும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.188  pg 1.189  pg 1.190  pg 1.191 
 WIKI_urai Song number: 74 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 68 - thondhi sariya (thiruchchendhUr)

thondhi sariya mayirE veLiRanirai
     dhantham asaiya mudhugE vaLaiyaidhazh
          thonga orukai thadimEl varamagaLir ...... nagaiyAdi

thoNdu kizhavan ivanAr enairumal
     giNgiN enamun uraiyE kuzharavizhi
          thunju kurudu padavE sevidupadu ...... seviyAgi

vandha piNiyum adhilE midaiyumoru
     pandi thanume yuRuvE dhanaiyumiLa
          maindhar udaimai kadanE dhenamuduga ...... thuyarmEvi

mangai azhudhu vizhavE yamapadargaL
     nindru saruva malamE ozhugauyir
          mangu pozhudhu kadidhE mayilinmisai ...... varavENum

endhai varuga ragunA yakavaruga
     maindha varuga maganE inivaruga
          enkaN varuga enadhA ruyirvaruga ...... abirAma

ingu varuga arasE varugamulai
     uNga varuga malarsU didavaruga
          endru parivi nodukO salaipugala ...... varumAyan

chindhai magizhu marugA kuRavariLa
     vanji maruvum azhagA amararsiRai
          sindha asurar kiLaivE rodumadiya ...... adudheerA

thingaL aravu nadhisU diyaparamar
     thandha kumara alaiyE karaiporudha
          sendhi nagaril inidhE maruvivaLar ...... perumALE.

......... Meaning .........

thondhi sariya mayirE veLiRa: With my paunch sagging, my hair graying,

nirai dhantham asaiya: erstwhile perfect teeth shaking,

mudhugE vaLaiya: my back hunched,

idhazh thonga: my lips drooping, and

orukai thadimEl vara: one hand resting on a supporting cane, (I will be moving).

magaLir nagaiyAdi thoNdu kizhavan ivan yArena: The girls will be giggling and wondering who this old man is!

irumal giN giNena mun uraiyE kuzhara: With metallic sound in my cough and incoherent speech,

vizhi thunju kurudu padavE sevidupadu seviyAgi: my eyes dimmed due to blindness and ears deafening,

vandha piNiyum adhilE midaiyum oru pandithanum: I will be afflicted by all diseases, and, to add to my woe, will be this native doctor intruding!

meyuRu vEdhanaiyum: I will suffer so much pain all over my body.

iLa maindhar udaimai kadanE dhenamuduga: Young sons pestering me for details of my assets and liabilities,

thuyar mEvi mangai azhudhu vizhavE: overcome by grief, my wife will cry and faint.

yamapadargaL nindru saruva: Messengers of Death-God (Yama) will be standing there waiting to snatch my life away.

malamE ozhuga: Faeces will be getting excreted without my control.

uyir mangu pozhudhu: At that very last minute of my life's fading away,

kadidhE mayilinmisai varavENum: You, MurugA, must come to me fast on Your Peacock!

endhai varuga ragunAyaka varuga: "Come to me, Oh Lord, come to me, the jewel of Raghu Dynasty,

maindha varuga maganE ini varuga: come, my son, come fast, my darling child,

enkaN varuga enadhAruyir varuga: Come, my eye, come to me, my life,

abirAma ingu varuga arasE varuga: Oh handsome Rama, come here, my king,

mulai uNga varuga malarsUdida varuga: come to drink milk, and come to be adorned with flowers",

endru parivinodu kOsalai pugala: so beseeched Kousalya with love inviting Rama to come;

varu mAyan chindhai magizhu marugA: and that mystic Rama (Vishnu) came along, whose favourite nephew You are, Oh MurugA!

kuRavar iLa vanji maruvum azhagA: You, handsome one, embrace VaLLi, the young damsel of KuRavas, who is like a vanji (rattan reed) creeper.

amarar siRai sindha asurar kiLaivErodu madiya adudheerA: You liberated the DEvAs and killed the entire dynasties of demons (asuras), Oh Brave One!

thingaL aravu nadhi sUdiya paramar thandha kumara: You are the son of SivA, who wears the moon, the serpent and Ganga river on his tresses.

alaiyE karai porudha sendhi nagaril: On the shores of ThiruchchendhUr lashed by waves,

inidhE maruvi vaLar perumALE.: You happily reside, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 68 thondhi sariya - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]