திருப்புகழ் 64 தரிக்குங்கலை  (திருச்செந்தூர்)
Thiruppugazh 64 tharikkungkalai  (thiruchchendhUr)
Thiruppugazh - 64 tharikkungkalai - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தந்தன தனத்தந்தன
     தனத்தந்தன ...... தனதானத்

......... பாடல் .........

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
     தவிக்குங்கொடி ...... மதனேவிற்

றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
     தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்

றெரிக்கும்பிறை யெனப்புண்படு
     மெனப்புன்கவி ...... சிலபாடி

இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
     யுரைத்துய்ந்திட ...... அறியாரே

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
     மனுக்குந்தெரி ...... வரிதான

அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
     மரற்கும்புரி ...... தவபாரக்

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
     வரிக்குங்குரு ...... பரவாழ்வே

கிளைக்குந்திற லரக்கன்கிளை
     கெடக்கன்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தரிக்குங்கலை நெகிழ்க்கும் ... உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது,

பரதவிக்கும் ... விரக வேதனையால் தவிக்கின்றேன்,

கொடி மதனேவில் தகைக்கும் ... கொடி போன்ற யான் மன்மதனது
பாணத்தால் தடை படுகின்றேன்,

தனி திகைக்கும் ... தனிமையில் நின்று திகைக்கின்றேன்,

சிறு தமிழ்த்தென்றலினுடனே ... மெல்லிய இனிய தென்றல்
காற்றினுடன் வந்து

நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும் ... சந்திரன் நின்று
கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன்,

எனப்புன்கவி சிலபாடி ... என்றெல்லாம் புன்மையான கவிதைகள்
சிலவற்றை மனிதர்கள் மீது பாடி

இருக்குஞ்சிலர் ... சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.

திருச்செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே ... திருச்செந்தூரில்
எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ?

அரிக்குஞ் சதுர் மறைக்கும் ... திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும்,

பிரமனுக்குந் தெரிவரிதான அடி ... பிரமனுக்கும் காண்பதற்கு
முடியாத திருவடியையும்

செஞ்சடை முடிக்கொண்டிடும் அரற்கும் ... சிவந்த ஜடாமுடியையும்
உடைய சிவ பிரானுக்கும்,

புரி தவபாரக் கிரிக் கும்ப* நன் முநிக்கும் ... செய்தவம்
நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும்,

க்ருபை வரிக்கும் குருபரவாழ்வே ... கருணை புரிந்து உபதேசித்த
மேலான குருமூர்த்தியே,

கிளைக்குந்திற லரக்கன் ... சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த
அரக்கன் சூரன்

கிளை கெடக்கன்றிய பெருமாளே. ... தன் குலத்தோடு
அழியும்படிக் கோபித்த பெருமாளே.


* குடத்தில் தோன்றியதால் அகஸ்தியருக்கு கும்பமுநி எனப் பெயர்.
முருகனிடம் ப்ரணவ மந்திர உபதேசம் பெற்றவர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.182  pg 1.183  pg 1.184  pg 1.185 
 WIKI_urai Song number: 71 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Dharmapuram Thiru SwAminAthan
'தருமபுரம்' திரு சுவாமிநாதன்

Dharmapuram SwAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 64 - tharikkungkalai (thiruchchendhUr)

tharikkungkalai negizhkkumpara
     thavikkungkodi ...... madhanEvit

Ragaikkunthani thigaikkunjchiRu
     thamizhththendralin ...... udanEnin

RerikkumpiRai yenappuNpadu
     menappunkavi ...... silapAdi

irukkumchilar thiruchchendhilai
     uraiththuyndhida ...... aRiyArE

arikkunjchathur maRaikkumpira
     manukkuntheri ...... varidhAna

adicchenjadai mudikkoNdidu
     maraRkumpuri ...... thavabAra

girikkumbanan munikkumkrupai
     varikkunguru ...... paravAzhvE

kiLaikkunthiRal arakkankiLai
     kedakkandRiya ...... perumALE.

......... Meaning .........

tharikkungkalai negizhkkum: "The saree worn by me is getting loosened;

parathavikkum: I am suffering from the pangs of separation;

kodi madhanE vil thagaikkum: I am like a creeper, tormented by the flowery arrows of Manmathan (Love God);

thani thigaikkum: I am lonely and stunned; and

chiRu thamizhth thendralin udanE: travelling through the gentle and sweet southerly breeze,

nindrerikkum piRai yenappuNpadum: the crescent moon firmly burns my heart" -

enappun kavi silapAdi: these are a few silly verses that were composed and dedicated to a few men by

irukkum chilar: some so-called poets!

thiru chendhilai uraith thuyndhida aRiyArE: They do not know to describe You, residing in the great place ThiruchchendhUr and to find the road to salvation!

arikkunjchathur maRaikkumpiramanukkuntheri varidhAna: Vishnu, the four VEdAs, and BrahmA could never fathom

adichenjadai mudikkoNdidumaraRkkum: the feet (of SivA); to that Lord Hara, with red tresses,

puri thavabAra girikkumbanan munikkum: and to the holy sage Agasthya, who lives in Pothigai Hill, who has done a lot of penance and whose birth was from an earthen pot*,

krupai varikkung guru para vAzhvE: You kindly preached the VEdAs, Oh Great Master!

kiLaikkunthiRal arakkankiLai: The demon SUran came to the war with his entire kin; and he was annihilated completely

kedakkandriya perumALE.: by Your fierce rage, Oh Great One!


* Agasthya was born from an earthen pot - kumba, and was called Kumbamuni. He obtained the preaching of PraNava ManthrA from Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 64 tharikkungkalai - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]