திருப்புகழ் 61 தண் தேனுண்டே  (திருச்செந்தூர்)
Thiruppugazh 61 thaNthEnuNdE  (thiruchchendhUr)
Thiruppugazh - 61 thaNthEnuNdE - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான

......... பாடல் .........

தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
     தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார்

தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
     சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன்

மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
     வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய்

வன்கா னம்போ யண்டா முன்பே
     வந்தே நின்பொற் ...... கழல்தாராய்

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
     கொன்றாய் வென்றிக் ...... குமரேசா

கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
     குன்றா மன்றற் ...... கிரியோனே

கண்டா கும்பா லுண்டா யண்டார்
     கண்டா கந்தப் ...... புயவேளே

கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
     கந்தா செந்திற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தண் தேனுண்டே ... குளிர்ந்த தேனைப் பருகி

வண்டார் வஞ்சேர் ... வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற

தண் தார் மஞ்சுக் குழல்மானார் தம்பால் ... தண்மையான
மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில்

அன்பார் நெஞ்சே கொண்டே ... அன்பு நிறைந்த மனத்தைக்
கொண்டு சல்லாபித்து

சம்பாவஞ் சொற்று அடிநாயேன் ... சம்பாஷணைகளைச் செய்கின்ற
நாயினும் கீழான அடியேன்,

மண் தோயம் தீ மென்கால் விண்தோய் ... மண், நீர், தீ,
மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான

வண்காயம் பொய்க்குடில் வேறாய் ... வளமிக்க இந்த சரீரமாகிய
பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி,

வன்கானம்போய் அண்டா முன்பே ... கொடும் சுடுகாட்டுக்கு
அருகில் நெருங்குவதற்கு முன்பாக

வந்தே நின்பொற்கழல்தாராய் ... என்முன் தோன்றி உன் அழகிய
திருவடிகளைத் தந்தருள்வாயாக.

கொண்டாடும்பேர் கொண்டாடுஞ்சூர் ... தன்னைக் கொண்டாடிப்
புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை

கொன்றாய் வென்றிக் குமரேசா ... கொன்றவனே, வெற்றியை
உடைய குமரேசனே,

கொங்கார் வண்டு ஆர் பண்பாடும் ... பூக்களின் மகரந்தங்களில்
நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும்

சீர்குன்றா மன்றற்கிரியோனே ... சிறப்பு குறையாத வள்ளிமலையில்*
வாழ்பவனே,

கண்டாகும் பாலுண்டாய் ... கற்கண்டு போன்று இனிக்கும்
உமையின் திருமுலைப்பால் உண்டவனே,

அண்டார் கண்டா கந்தப் புயவேளே ... பகைவர்களைக் கண்டித்தவனே,
மணம் கமழும் புயத்தை உடையவனே

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா ... கம்பம் போன்ற
வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா,

கந்தா செந்திற் பெருமாளே. ... கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில்
வாழும் பெருமாளே.


* மன்றல் கிரி என்பது வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம்
நிகழ்ந்த வள்ளிமலை ஆகும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.130  pg 1.131 
 WIKI_urai Song number: 42 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 61 - thaN thEnuNdE (thiruchchendhUr)

thaNdE nuNdE vaNdAr vanjEr
     thaNdAr manjuk ...... kuzhalmAnAr

thmpAl anbAr nenjE koNdE
     sambA vanchot ...... RadinAyEn

maNdO yanthee menkAl viNdOy
     vaNkA yampoyk ...... kudilvERAy

vankA nampOy aNdA munbE
     vandhE ninpoR ...... kazhalthArAy

koNdA dumpEr koNdA dumsUr
     kondrAy vendrik ...... kumarEsA

kongAr vaNdAr paNpA dumseer
     kundRA mandRaR ...... giriyOnE

kaNdA gumpA luNdA aNdAr
     kaNdA kandhap ...... buyavELE

kandhA maindha ranthOL maindhA
     kandhA sendhiR ...... perumALE.

......... Meaning .........

thaNdEn uNdE vaNdAr vanjEr: The beetles are humming with pleasure, sucking cool honey

thaNdAr manjuk kuzhalmAnAr: from the flowers donning the hair (like black cloud) of women.

thmpAl anbAr nenjE koNdE: I am flirting with those women openly,

sambAvan sotr tradinAyEn: chatting with them; and am I not baser than a dog?

maNdOyan thee menkAl viNdOy vaN kAyam: This so-called healthy body of mine is made of five elements, namely, earth, water, fire, air and sky;

poyk kudil vERAy: and before my life departs this mythical hut of my body

vankAnam pOy aNdA munbE: for its final journey to the cremation ground,

vandhE nin poR kazhal thArAy: please come to me and grant Your lotus feet!

koNdAdum pEr koNdAdum sUr: SUran, who enjoyed the company of those flattering him,

kondrAy vendrik kumarEsA: was killed by You, Oh Victorious KumaresA!

kongAr vaNdAr paNpAdum: At this hill, the beetles make great music around the flowers,

seerkundrA mandraR giriyOnE: and it is a very famous mount called 'Mandral giri' - VaLLimalai*, where You belong!

kaNdAgum pAluNdA: You imbibed the sacred milk of PArvathi, which was sweet as jaggery.

aNdAr kaNdA kandhap buyavELE: You punish all Your enemies, Oh KandhA, the strong shouldered!

kandhu Am maindhu Ar amthOL maindhA: Oh KumarA, Your shoulders are solid as a pillar and are also terrific!

kandhA sendhiR perumALE.: Oh, KandhA, Your abode is ThiruchchendhUr, Oh Great One!


* VaLLimalai is the place where VaLLi and Murugan were formally married.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 61 thaN thEnuNdE - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]