பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) o திருப்புகழ் உரை 115 பெரிய போரிற் (பகைவரை) மாய்க்கும் மாயக்காரனே! பெரும் போரிற் சூரனைச் சூறையாடியவனே! (சூறைக் காற்று போல அடித்துத் தள்ளியவனே) திருச்செந்தூர் நகரில் வாழும் ஆட்சித் திறனுள்ள பெருமாளே! (செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே!) 42 குளிர்ந்த தேனை உண்டு வண்டுகள் ஆசையுடன் மொய்க்கும் குளிர் மாலையை அணிந்த மேக்ம் போன்ற கூந்தலை உடைய மாதர்கள் - இடத்தில் அன்பு ழிக்க நெஞ்சங் கொண்டு, நிகழ்ச்சிகளை எல்லாம் பேசுகின்ற அடிமை நாயேனாகிய (நான்); மண், நீர், தி, மெல்லிய காற்று, விண் (ஆகிய பஞ்சபூதங்கள்) தோய்ந்துள்ள வளங்கொண்ட ப்ொய் உடல் நீங்கி (அதாவது உடலினின்றும் உயிர் நீங்கி) - கொடுங்கானம் (சுடுகாட்டுக்குப்) போய் நெருங்கும் முன்பே வந்து உனது அழகிய திருவடிய்ைத் தந்த்ருளுக தன்னைக் கொண்டாடுவோர்கள் எல்லாம்(அசுரர் கூட்டங்களெல்லாம்) தன் பேரைக் கொண்டாடின சூரனைக் கொன்றவனே! வெற்றிக் குமரேசனே! பூந்தாதுக்களில் நிறைந்துள்ள (அல்லது தேனை நாடுகின்ற) வண்டுகள் பண்ணைப் பாடும் சீர் குறையாத திரு மண் மேலையாம் வள்ளி மலையோனே!அல்லது ந்றுமணங் கொண்ட மலைகளுக்கு உரியவனே! கற்கண்டு போன்ற (உமை தி லப்) பாலை உண்டவனே! பகைவர்களைக் காயும் வீரனே! மணம் தங்கிய (திருப்) புயங்களை உடையவனே! கம்பத்துக்கு இணையான வலிமை பொருந்திய அழகிய தோள்கள்ை உடைய வீரனே! கந்த சுவாம்யே! திருச்செந்தூர்ப் பெருமாளே! (வந்தே நின் பொற்கழல் தாராய்) 1. சம்பாவம். சம்பவம். 2. மன்றல் கிரி. முருகவேள் வள்ளியை மணஞ் செய்துகொண்ட மலை வரை மன்றற் பைம்புனத்தாள்' பூத வேதாள வகுப்பு.