திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 51 கொங்கைப் பணை (திருச்செந்தூர்) Thiruppugazh 51 kongkaippaNai (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தத் தனனத் தந்தத் தனனத் தந்தத் தனனத் ...... தனதானா ......... பாடல் ......... கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழலிற் ...... கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற் சந்திப் பவரைச் ...... சருவாதே சந்தப் படியுற் றென்றற் றலையிற் சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே அங்கப் படைவிட் டன்றைப் படுகைக் கந்திக் கடலிற் ...... கடிதோடா அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற் றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற் சென்றுற் றவர்தற் ...... பொருளானாய் சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற் செந்திற் குமரப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கொங்கைப் பணையில் செம் பொன் செறிவில் ... பருமையான மார்பிலும், செம்பொன்னாலான அணிகலன்களிலும், கொண்டல் குழலில் கொடிதான கொன் தைக் கணை ஒப்ப அந்தக் கயலில் ... மேகம் போன்ற கரிய கூந்தலிலும், கொடிய வலிமையுடன் தைக்கின்ற அம்புக்கு ஒப்பான அந்தக் கயல் மீன் போன்ற கண்களிலும், கொஞ்சுக் கிளி உற்று உறவான சங்கத் தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரைச் சருவாதே ... கொஞ்சுகின்ற கிளி போன்ற பேச்சுக்கு உறவான சங்கு போன்ற கண்டத்தின் குரலிலும் ஈர்க்ப்பட்டுச் சென்று, வீட்டின் வெளிப்புறத்தில் தம்மிடம் வருவோரைச் சந்திப்பவர்களாகிய விலைமாதர்களுடன் கொஞ்சிக் குலவாமல், சந்தப் படி உற்று என்றன் தலையில் சந்தப் பதம் வைத்து அருள்வாயே ... பேரின்ப சுக நிலையை நான் அடைய, எனது தலையில் உனது அழகிய திருவடியை வைத்து அருள் புரிவாயாக. அங்கு அப் படை விட்டு அன்றைப் படுகைக்கு அந்திக் கடலில் கடிது ஓடா ... அங்கு தனது சேனையை விட்டு நீங்கி, அப்பொழுதே நீர் நிலையாகிய (செந்திலுக்கும் சூரனுடைய தலைநகரான மகேந்திரபுரத்துக்கும் இடையே) சந்தியாக உள்ள கடலை விரைவாகத் தாண்டி, அந்தப் பொழிலில் சந்துத் தலை உற்று அஞ்சப் பொருது உற்று ஒழியாதே ... அந்தப் பூமியாகிய மகேந்திரபுரத்தில் (முருகனின்) தூதாகச் சென்று, அசுரர்கள் பயப்படும்படி போர் செய்து, அவர்களுக்கு அஞ்சி நீங்காமல், செம் கைக் கதிர் உற்று ஒன்றி அக் கடலில் சென்று உற்றவர் தற் பொருள் ஆனாய் ... சிவந்த கிரணங்களை உடைய சூரியனைப் போலப் பொருந்தி, அக் கடல் கடந்து போய் வெற்றியுடன் வந்தவரான வீரபாகு தேவரின் ஆவிப் பொருள் ஆனவனே, சிந்தைக் கனிவைத் தந்து அப் பொழிலில் செந்தில் குமரப் பெருமாளே. ... சிந்தையின் அன்பு வைத்து, அழகிய பொழில் சூழ்ந்த திருச்செந்தூரில் தங்கும் குமரப் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.78 pg 1.79 WIKI_urai Song number: 20 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 51 - kongkaip paNai (thiruchchendhUr) kongaip paNaiyiR sempoR cheRiviR koNdaR kuzhaliR ...... kodithAna konRaik kaNaiyop panthak kayaliR konjuk kiLiyut ...... RuRavAna sangath thoniyiR chenRiR kadaiyiR santhip pavaraic ...... charuvAthE santhap padiyut RenRat RalaiyiR santhap pathamvaith ...... tharuLvAyE angap padaivit tanRaip padukaik kanthik kadaliR ...... kadithOdA anthap pozhiliR chanthuth thalaiyut Ranjap poruthut ...... RozhiyAthE sengaik kathirut RonRak kadaliR chenRut RavarthaR ...... poruLAnAy sinthaik kanivaith thanthap pozhiliR senthiR kumarap ...... perumALE. ......... Meaning ......... kongaip paNaiyil sem pon seRivil: In their heavy bosom, in their ornaments made out of reddish gold, koNdal kuzhalil kodithAna kon thaik kaNai oppa anthak kayalil: in their cloud-like dark hair, in their kayal-fish-like eyes that attack with the ferocious strength of arrows, konjuk kiLi utRu uRavAna sangath thoniyil senRu il kadaiyil santhippavaraic charuvAthE: and in their voice, akin to that of a flirting parrot, emanating from their throat comparable to conch-shell, I have been fascinated, driving me to the houses of the whores; they meet their suitors outside their homes; I do not wish to make merry enjoying their company; santhap padi utRu enRan thalaiyil santhap patham vaiththu aruLvAyE: kindly place Your hallowed feet on my head and bless me so that I could experience heavenly bliss! angu ap padai vittu anRaip padukaikku anthik kadalil kadithu OdA: Leaving His army behind, He quickly crossed the body of sea-water (between ThiruchchendhUr and MahEndrapuram, the capital of the demon, SUran); anthap pozhilil santhuth thalai utRu anjap poruthu utRu ozhiyAthE: He went as the messenger (of Murugan) to that region (of MahEndrapuram) and fought there scaring the demons; not fleeing from them; sem kaik kathir utRu onRi ak kadalil senRu utRavar thaR poruL AnAy: He returned successfully after crossing the sea again, shining like the sun with its radiant red rays; You are the soul and substance of that great VeerabAgu, Oh Lord! sinthaik kanivaith thanthu ap pozhilil senthil kumarap perumALE.: With utmost compassion and love, You are seated in ThiruchchendhUr, surrounded by beautiful groves, Oh Great KumarA! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |