பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 63 . 20 கொங்கையின் பருமையுடனும் (பருத்த கொங்கையுடனும்) செம்பொன் நிறைவுடன் (நிறைந்த செம்பொன் அணி கலன்களுடனும்) மேகம் போன்ற கூந்தலுடனும் கொடிதான - வலிமையுடன் தைக்கின்ற அம்புக்கு ஒப்பான அந்தக் கயல் மீன் போன்ற கண்களுடனும் கொஞ்சுகின்ற கிளி போன்ற (அதன் பேச்சுக்கு) உறவான - சங்கு போன்ற கண்டத் தொனியுடனும் (தொண்டைக் குரலுடனும்) வந்து வீட்டின் (வெளிப் புறத்தில் (தம்மாட்டு வருபவர்களைச்) சந்திப்பவர்களாம் பொதுமகளிருடன் கொஞ்சிக் குலவாமல், (பேரின்பச்) சுகநிலையை (நான் உற (அடைய) எனது தலையில் ( உனது) அழகிய திருவடியை வைத்து அருள் வாயே; அங்குத் (தமது) சேனையை விட்டு நீங்கி, அப்பொழுதே நீர்நிலையாம் (செந்திலுக்கும், சூரன் தலைநகராம் மகேந்திரபுரிக்கும் இடைச்) சந்தியாக உள்ள கடலை விரைவாக ஒடி (த் தாண்டி), அந்தப் பூமியாகிய (மகேந்திரத்தில்) தூதராக நுழைந்து சென்று (அவுணர்கள்) அஞ்சப்பொருது, அவர்களுக்கு (அஞ்சி) நீங்காமல், சிவந்த கிரணங்களுடைய ஞாயிற்றை சூரியனைப்) போலப் பொருந்தி அக் கடல் (கடந்து) போய் வந்தவரான (வீரவாகு தேவரின்) ஆவிப் பொருளானவனே! ஆன்மார்த்த நாயகன் ஆனவனே! சிந்தையின் கனிவு (அன்பு) வைத்து அழகிய பொழில் சூழ்ந்த திருச்செந்தூர்க் குமரப் பெருமாளே! (சந்தப் தர்காவதி, தருள்வயே )