திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 45 கன்றிலுறு மானை (திருச்செந்தூர்) Thiruppugazh 45 kandRiluRumAnai (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான ......... பாடல் ......... கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு ...... முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு ...... மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி நம்பவிடு மாத ...... ருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாக நைந்துவிடு வேனை ...... யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை கொன்றகும ரேச ...... குருநாதா மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை வண்டுபடு வாவி ...... புடைசூழ மந்திநட மாடு செந்தினகர் மேவு மைந்தஅம ரேசர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே ... மான் கன்றை வெல்லும் கண்களாலும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே ... கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் மணமுள்ள மலர் சூடும் அந்த வகையினாலும், நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய் ... நல்லபடியே கைப் பொருள் முழுதும் வரும்படி வெற்றியுடன் விலை கூறி (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, விஷத்தை உடைய பாம்பு உண்ணும் தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற என்னை அருட்கண் பார்த்தருள்க. குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி* கொண்ட படம் வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா ... குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே, குரு நாதனே, மன்றல் கமழ் பூக(ம்) தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ மந்தி நடமாடு(ம்) செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே. ... மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, தேவர்கள் பெருமாளே. |
* போகி = பாம்பு. |
வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு: தந்ததன தான தந்ததன தான தந்ததன தான ...... தனதான ......... பாடல் ......... கன்றிவரு நீல குங்குமப டீர கஞ்சமலர் மேவு ...... முலைகாட்டி கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை கண்கள்கடை காட்டி ...... விலைகாட்டி நன்றுபொரு டீது வென்றுவிலை பேசி நம்பிவிடு மாத ...... ருடனாட்ட நஞ்சுபுரி தேரை யங்கமது வாக நைந்துவிடு மெற்கொன் ...... றருள்வாயே குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங் கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச் சென்றவடி வேலைக் ...... கொடுபோர்செய் மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை வண்டுபடு வாவி ...... புடைசூழ மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும் அந்தசுர காலப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவு(ம்) முலைகாட்டி ... கன்றிப் போய் நீலம் பாய்ந்த, குங்குமமும் சந்தனமும் கலந்த, தாமரை மலரைப் போன்ற தங்கள் மார்பகத்தைக் காட்டி, கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலைகாட்டி ... கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் இறுக்கி முடித்து, கடைக்கண்களால் ஜாடை காட்டி, தங்களது விலையையும் குறிப்பாகக் காட்டி, நன்றுபொருள் தீதுவென்று விலை பேசி நம்பி விடு மாதருடன் ஆட்ட(ம்) ... வந்தவர் தரும் பொருள் ஏற்புடைத்து அல்லது ஏற்காது என்று பேரம் பேசி, (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே ... பாம்பின் விஷம் பாய்ந்த தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற எனக்கு ஒரு நல்வாக்கு அருள்வாயாக. குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங் கொண்ட படம் வீசு(ம்) மணிகூர்வாய் கொண்ட மயில் ஏறி ... குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, குன்று இடிய மோதிச் சென்றவடி வேலைக் கொ(ண்)டு போர்செய் ... கிரெளஞ்ச மலை இடிந்து நொறுங்கும்படியாக மோதிய கூர்மையான வேலைக் கரத்தில் கொண்டு போர் செய்தவனே, மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை வண்டு படு வாவி புடைசூழ மந்தி நடமாடுஞ் செந்தில்நகர் மேவும் அந்த அசுர காலப் பெருமாளே. ... மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, அந்த அசுரர் குலத்துக்கு யமனாக அமைந்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.166 pg 1.167 pg 1.168 pg 1.169 WIKI_urai Song number: 62 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'தருமபுரம்' திரு சுவாமிநாதன் Dharmapuram SwAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 45 - kandRiluRu mAnai (thiruchchendhUr) kanRiluRu mAnai venRavizhi yAlE kanjamukai mEvu ...... mulaiyAlE kangulseRi kEsa mangulkulai yAmai kanthamalar cUdu ...... mathanAlE nanRuporuL theera venRuvilai pEsi nampavidu mAtha ...... rudanAdi nanjupusi thErai yangamathu vAka nainthuvidu vEnai ...... yaruLpArAy kunRimaNi pOlva sengaNvari pOki koNdapadam veesu ...... maNikUrvAy koNdamayi lERi anRasurar sEnai konRakuma rEsa ...... gurunAthA manRalkamazh pUka thenguthiraL sOlai vaNdupadu vAvi ...... pudaicUzha manthinada mAdu senthinakar mEvu mainthaama rEsar ...... perumALE. ......... Meaning ......... kanRil uRu mAnai venRa vizhiyAlE kanja mukai mEvum mulaiyAlE: With their eyes excelling the beauty of those of the deer's calf, with their bosom that looks like the lotus bud, kangul seRi kEsa mangul kulaiyAmai kantha malar cUdum athanAlE: with their hair like the dense and dark cloud and with the artful manner of their adorning with flowers without dishevelling the hair, nanRu poruL theera venRu vilai pEsi nampavidu mAtharudan Adi nanju pusi thErai angam athuvAka nainthu viduvEnai aruL pArAy: they successfully bargain a price so that the suitors' entire belongings are grabbed; they make themselves totally trustworthy; indulging with such whores, my body has deteriorated to such an extent that I have become like a toad caught as a prey in the mouth of a venomous snake; kindly bless me with Your gracious look, Oh Lord! kunRi maNi pOlva sengaN vari pOki* koNda padam veesu maNi kUrvAy koNda mayilERi anRu asurar sEnai konRa kumarEsa gurunAthA: The eyes of the striped serpent are like red beads; making the serpent raise its hood, Your peacock has clasped it within its beautiful and sharp beak; mounting that peacock, You killed the entire army of demons, Oh Lord KumarA! Oh Great Master! manRal kamazh pUka(m) thengu thiraL sOlai vaNdu padu vAvi pudai cUzha manthi nadamAdu(m) senthi nakar mEvu maintha amarEsar perumALE.: Many fragrant trees of betelnut and densely-planted coconut trees seen abundantly in the groves and many ponds with humming beetles surround this town ThiruchchendhUr where monkeys dance around; and You are seated here, Oh Valorous One! You are the Lord of the celestials, Oh Great One! |
* pOki = serpent. |
Another version of same song (found in old texts). Song 45 - kandRiluRu mAnai (thiruchchendhUr) kanRivaru neela kungumapa deera kanjamalar mEvu ...... mulaikAtti kangulseRi kEsa ninRukulai yAmai kaNkaLkadai kAtti ...... vilaikAtti nanRuporu deethu venRuvilai pEsi nampividu mAtha ...... rudanAtta nanjupuri thErai yangamathu vAka nainthuvidu meRkon ...... RaruLvAyE kunRimaNi pOlac chengaNvari nAkang koNdapadam veesu ...... maNikUrvAy koNdamayi lERik kunRidiya mOthic chenRavadi vElaik ...... kodupOrsey manRalkamazh pUkan thenguthiraL sOlai vaNdupadu vAvi ...... pudaicUzha manthinada mAdunj senthilnakar mEvum anthasura kAlap ...... perumALE. ......... Meaning ......... (version 2) kanRivaru neela kunguma padeera kanja malar mEvu(m) mulaikAtti: Baring their sunburnt, bluish, and lotus-like bosom smeared with a paste of vermillion and sandalwood powder, kangul seRi kEsa ninRu kulaiyAmai kaNkaL kadai kAtti vilaikAtti: with their hair like the dense and dark cloud tied up neatly into a knot, they gesture from the corner of their eyes indicating their price; nanRuporuL theethuvenRu vilai pEsi nampi vidu mAtharudan Atta(m): clearly specifying whether the offered price is good or unacceptable, they set out to bargain; they make themselves so trustworthy that I indulge playfully in carnal pleasure with them; nanju puri thErai angam athuvAka nainthuvidum eRku onRu aruLvAyE: my body has deteriorated to such an extent that I have become like a toad attacked by a venomous snake; kindly bless me with one of Your gracious preachings, Oh Lord! kunRimaNi pOlac chengaNvari nAkang koNda padam veesu(m) maNikUrvAy koNda mayil ERi: The eyes of the striped serpent are like red beads; making the serpent raise its hood, Your peacock has clasped it within its beautiful and sharp beak; mounting that peacock, kunRu idiya mOthic chenRavadi vElaik ko(N)du pOrsey: You attacked the Mount Krouncha with Your sharp spear and shattered it to pieces, Oh Valorous One! manRalkamazh pUkan thenguthiraL sOlai vaNdu padu vAvi pudaicUzha manthi nadamAdunj senthilnakar mEvum antha asura kAlap perumALE.: Many fragrant trees of betelnut and densely-planted coconut trees seen abundantly in the groves and many ponds with humming beetles surround this town ThiruchchendhUr where monkeys dance around; and You are seated here, Oh Lord! You are the God of Death to all those demons, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |