திருப்புகழ் 37 ஓராது ஒன்றை  (திருச்செந்தூர்)
Thiruppugazh 37 OrAdhuondRai  (thiruchchendhUr)
Thiruppugazh - 37 OrAdhuondRai - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தந்தத் தானா தந்தத்
     தானா தந்தத் ...... தனதானா

......... பாடல் .........

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
     தோடே வந்திட் ...... டுயிர்சோர

ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
     டாமால் தந்திட் ...... டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
     கோயா நின்றுட் ...... குலையாதே

கோடார் செம்பொற் றோளா நின்சொற்
     கோடா தென்கைக் ...... கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
     றோளா குன்றைத் ...... தொளையாடீ

சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
     சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
     சேவே றெந்தைக் ...... கினியோனே

தேனே யன்பர்க் கேயா மின்சொற்
     சேயே செந்திற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஓராது ஒன்றை ... உண்மை என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும்,

பாராது ... அந்த உண்மையைப் பார்க்காமலும்,

அந்தத்தோடே வந்திட்டு ... அலங்காரம் செய்துகொண்டு வந்து,

உயிர்சோர ஊடா ... ஆண்களின் உயிர் சோர்ந்து போகும்படி ஊடல்
செய்து,

நன்றற் றார்போல் நின்று ... தங்களுக்கு நல்லது ஏதும்
இல்லாதவர்கள் போல நின்று,

எட்டாமால் தந்திட்டு ... அளவற்ற காம மயக்கத்தைத் தந்து,

உழல்மாதர் ... திரிகின்ற பெண்களின்

கூரா அன்பிற் சோரா நின்று ... விருப்பமற்ற வெளிவேஷ அன்பில்
சோர்வடைந்து,

அக்கு ஓயா நின்று உட்குலையாதே ... எலும்போடு கூடிய என்
சரீரம் ஓய்ந்துபோய் உள்ளம் குலைந்து போகாதபடியாக,

கோடு ஆர் செம்பொற் றோளா ... மலைபோன்ற செவ்விய அழகிய
தோளை உடையவனே,

நின்சொற் கோடாது ... உனது திருப்புகழ் நேராக நின்று உதவும்

என்கைக்கு அருள்தாராய் ... என்று உலகத்தார் கூறும்வண்ணம்
திருவருள் தந்தருள்க.

தோரா வென்றிப் போரா ... தோல்வியே தெரியாத வெற்றிப்
போர் வீரா,

மன்றற் றோளா ... மணம் வீசும் (மாலைகள் அணிந்த) தோளை
உடையவனே,

குன்றைத் தொளையாடீ ... கிரெளஞ்ச மலையைத் தொளைத்தவனே,

சூதாய் எண் திக்கு ஏயா ... சூழ்ச்சி செய்து எட்டுத் திக்கும்
பொருந்தி நின்ற

வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா ... வஞ்சகச் சூரனாம் மாமரம்
அஞ்சப் போரிட்ட வேலனே,

சீரார் கொன்றைத்தார் மார்பொன்ற ... சிறப்பு மிகுந்த
கொன்றைமாலை மார்பில் திகழ

சேவேறு எந்தைக்கு இனியோனே ... ரிஷபத்தில் ஏறும் எம் தந்தை
சிவனாருக்கு இனியவனே,

தேனே ... தேன் போல் இனிப்பவனே,

அன்பர்க்கேயாம் இன்சொற் சேயே ... அன்பர்க்கென்றே இனிய
சொற்கள் கொண்ட சேயே,

செந்தில் பெருமாளே. ... திருச்செந்தூரில் மேவிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.158  pg 1.159 
 WIKI_urai Song number: 57 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 37 - OrAdhu ondRai (thiruchchendhUr)

OrA thonRaip parA thanthath
     thOdE vanthit ...... tuyirchOra

UdA nanRaR RArpOl ninRet
     tAmAl thanthit ...... tuzhalmAthar

kUrA vanpiR chOrA ninRak
     kOyA ninRut ...... kulaiyAthE

kOdAr chempot RoLA ninchoR
     kOdA thenkaik ...... karuLthArAy

thOrA venRip pOrA manRat
     ROLA kunRaith ...... thoLaiyAdee

chUthA yendik kEyA vanchach
     chUrmA anchap ...... porumvElA

CheerAr konRaith thArmAr ponRach
     chEvE Renthaik ...... kiniyOnE

thEnE yanpark kEyA minchoR
     chEyE chenthiR ...... perumALE.

......... Meaning .........

OrA thonRaip parAthu: Without thinking about or seeing the truth,

anthaththOdE vanthittu: (these women) adorn themselves and come out

uyirchOra UdA nanRaR RArpOl ninRu: to tease the life out of me, pretending that they are very poor;

ettAmAl thanthitt uhalmAthar: these roaming women tantalize me so much

kUrA vanpiR chOrA ninRu: that I fall for their false love and feel miserable;

akkOyA ninRut kulaiyAthE: and my body is exhausted to the bone, with my inner peace shattered. To avoid all this misery,

kOdAr chempot RoLA: You, with Your mountain-like and golden shoulders,

ninchoR kOdA thenkaik karuLthArAy: must gracefully make the world say that Your Song of Glory (Thiruppugazh) has reformed me!

thOrA venRip pOrA: You do not know what defeat is, Oh Victorious Warrior!

manRat ROLA kunRaith thoLaiyAdee: Your shoulders are adorned by fragrant garlands! You pierced with Your spear the Mount of Krouncha!

chUthA yendik kEyA vanchach chUrmA: When the cunning asura, SUran, fought clandestinely from all directions taking the disguise of a mango tree,

anchap porumvElA: You scared him away fighting with Your mighty spear!

CheerAr konRaith thArmAr ponRa: To SivA, who wears kondRai (Indian laburnum) garland on His chest,

chEvE Renthaik kiniyOnE: and who mounts the sacred bull Nandi, You are His dearest!

thEnE yanpark kEyA minchoR chEyE: Oh Honey, You always have sweet words for Your devotees!

chenthiR perumALE.: Your abode is ThiruchchendhUr, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 37 OrAdhu ondRai - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]