திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 26 அவனி பெறுந்தோடு (திருச்செந்தூர்) Thiruppugazh 26 avanipeRunthOdu (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா ......... பாடல் ......... அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும் பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ தவநெறி குன்றாப் பண்பிற் றுறவின ருந்தோற் றஞ்சத் தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி தமிழினி தென்காற் கன்றிற் றிரிதரு கஞ்சாக் கன்றைத் தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச் சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும் தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட் டிஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அவனி பெறுந்தோடு ... இந்த பூமியின் விலைக்கு சமமான மதிப்புள்ள தோடு விளங்கும் அம்பொற் குழையடர் அம்பாற் புண்பட்டு ... மிக அழகிய காதை நெருங்கிவரும் கண் என்ற அம்பினால் மனம் புண்பட்டு, அரிவையர் தம்பாற் கொங்கைக்கு இடையேசென்று ... மாதர்களின் மார்பகங்களுக்கு இடையே சென்று அணைதரு பண்டு ஆட் டங்கற்று ... அணைகின்ற பழைய விளையாட்டுக்களைக் கற்று, உருகிய கொண்டாட் டம்பெற்று ... உருகிய பெரும் சந்தோஷத்தைப் பெற்று, பின்பு அழிதரு திண்டாட் டஞ்சற்று ஒழியாதே ... அழிவைத்தரும் திண்டாட்டம் கொஞ்சம் ஒழியக் கூடாதா? பவமற நெஞ்சாற் சிந்தித்து ... பிறவி நீங்க வேண்டி நெஞ்சால் சிந்தித்து, இலகு கடம்பார்த் தண்டைப் பதயுகளம் போற்றும் கொற்றமு ... விளங்குகின்ற கடப்பமலர் நிறைந்த, தண்டை சூழ்ந்த உன் பாதங்கள் இரண்டையும் போற்றுகின்ற வீரமும், நாளும் பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும்போய் ... தினமும் உன்னை நாடிப் பதறுகின்ற ஆசைப்பாடும், பக்தியும், அறிவும் இல்லாது போய் சங்கைப் படுதுயர் கண்பார்த்து அன்புற்று அருளாயோ ... அச்சமுறும் துயரில் நான் விழுவதை நீ கண்பார்த்து அன்பு கொண்டு அருளமாட்டாயோ? தவநெறி குன்றாப் பண்பிற் துறவினருந் தோற்றஞ்ச ... தவநெறி குறையாத குணத்துத் துறவிகளும் தோற்று அஞ்சும்படி, தனிமலர் அஞ்சார்ப் புங்கத்து அமராடி ... தனது ஒப்பற்ற மலர் அம்புகள் ஐந்தின் கொத்துக்களுடன் போர் செய்து, தமிழினி தென்காற் கன்றில் திரிதரு கஞ்சாக் கன்றை* ... தமிழ்போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, தழலெழ வென்றார்க்கு அன்று அற்புதமாக ... நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு அன்று அற்புதமாக சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர ... பேரின்ப உண்மையாம் மங்களப்பொருளைக் காட்டிய சற்குருபரனே, தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் கரைமோதும் ... தெற்குத் திசையில் கடற்கரையிலே சங்கின் குவியல்கள் மணிகளைச் சிந்தி மோதுகின்றதும், தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட்டு இஞ்சி ... சூரியனின் தேரில் பூட்டியுள்ள வலிய குதிரைகளுக்கு கால்கள் இடறும்படியாக உயர்ந்துள்ள சிகரங்களை உடைய மதில் சூழ்ந்துள்ளதுமான திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே. ... செல்வம் கொழிக்கும் திருச்செந்தூரில் உள்ள கந்தப் பெருமாளே. |
* 'கஞ்சா' என்பது தாமரையில் அமர்ந்த லக்ஷ்மியையும், 'கன்று' என்பது அவள் மகன் 'மன்மதனை'யும் குறிப்பன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.86 pg 1.87 pg 1.88 pg 1.89 WIKI_urai Song number: 24 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'தருமபுரம்' திரு சுவாமிநாதன் Dharmapuram SwAminAthan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 26 - avani peRunthOdu (thiruchchendhUr) avanipe RunthOt tampoR kuzhaiyada rambAR puNpat Rarivaiyar thampAR kongaik ...... kidaiyEsendR(u) aNaitharu paNdAt tangkat Rurugiya koNdAt tampet Razhitharu thiNdAt tamsat ...... RozhiyAdhE bavamaRa nenjAR chindhith thilaguka dambAr thaNdai padhayuga LampOt Rumkot ...... RamunALum padhaRiya angAp pumbath thiyumaRi vumpOyc changaip paduthuyar kaNpArth thanbut ...... RaruLAyO thavaneRi kundrA paNbit RuRavina runthOt Ranjath thanimalar anjAr pungath ...... thamarAdi thamizhini thenkAR kandRit Riritharu kanjAk kandRaith thazhalezha vendRArk kandRaR ...... pudhamAkac sivavadi vamkAt tumsaR gurupara thenpAR changath thiraLmaNi sindhAc chindhuk ...... karaimOdhum dhinakara thiNdEr sandap pariyida RunkOt tinjith thiruvaLar sendhUrk kandhap ...... perumALE. ......... Meaning ......... avani peRun thOttu: The studs in their ears are worth the price of the world; ampoRkuzhaiyada rambAR puNpattu: their arrow-like eyes extend up to their ears tormenting my heart; arivaiyar thampAR kongaikku idaiyE sendru: I wandered amidst the bosoms of those harlots aNaitharu paNdAtang katr: and hugged them indulging in the old erotic games, urugiya koNdAttam petru: melting in ecstatic pleasures, azhitharu thiNdAttam satrozhiyAdhE: eventually destroying myself. Will this misery not stop for a little while? bavamaRa nenjAR chindhiththu: Contemplating with my whole heart to get rid of birth; ilagu kadambAr thaNdai padha yugaLam pOtrum kotramum: offering obeisance with dauntless spirit to Your hallowed feet adorned with kadappa flowers and thandais (anklets); nALum padhaRiya angAppum: yearning everyday excitedly to attain Your feet; bakththiyum aRivum pOy: such devotion and intellect have abandoned me. sangai paduthuyar kaNpArth anbutru aruLAyO: I have fallen into a terrible misery. Can You not see my condition and kindly confer on me Your blessing? thavaneRi kundrA paNbil thuRavina runthOtranja: Even the ascetics, who never deviate from the righteous path of penance, were defeated and frightened thanimalar anjAr pungaththu amarAdi: when Manmathan (the God of Love) intruded by hurling arrows of unique bunches of five species of flowers; thamizhini thenkAR kandril: he rides through the southerly breeze which is pleasant like Tamil language; thiritharu kanjA kandrai*: such a roaming son of Lakshmi (namely Manmathan) thazhalezha vendrArkku: was conquered and burnt down by the fiery eye of Lord SivA. To that SivA, andr aRbudhamAga siva vadivam kAttum saRgurupara: one day, You showed wonderfully the significance of the blissful True Knowledge, Oh Great Master! thenpAR sangath thiraLmaNi sindhAc chindhuk karaimOdhum: Lashing on these southern shores are heaps of conch shells, pouring precious gems; dhinakara thiNdEr sandap pariyida RunkOt tinji: over the top of the tall fortress walls around this place, the strong horses of the Sun's chariot trip their legs; thiruvaLar sendhUrk kandhap perumALE.: and this is the prosperous town of ThiruchchendhUr, which is Your abode, Oh KandhA, the Great One! |
* kanjA means lotus denoting Lakshmi who is seated thereon; kandru means son, denoting Lakshmi's son, Manmathan. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |