பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 73 தமிழ்போல இனிய இளந்தென்றற் காற்றில் உலவுகின்ற இலக்குமி குமரனை (மன்மதனை) நெருப்பை எழுப்பி வென்ற சிவபிராற்கு அன்று அற்புதமான வகையில், சிவ வடிவத்தை (பேரின்ப உண்மை மங்களப் பொருளை)க் காட்டிய சற்குருபரனே! தெற்குப் பக்கத்திலே சங்கின் கூட்டங்கள் மணிகளைச் சிந்தும் கடலானது கரையில் மோதுகின்றதும் - * சூரியனுடைய வலிய தேரிற் (பூட்டியுள்ள) வலிய குதிரைக்குக் (கால்) இடறும் (படியாக உயர்ந்துள்ள) சிகரங்களை உடைய மதில் சூழ்ந்துள்ளதுமான செல்வம் (லட்சுமீகரம்) வளர்கின்ற (திருச்) செந்துார்க் கந்தப் பெருமாளே! (கண் பார்த்து அன்புற்று அருளாயோ) 25 தொடர்ந்து வரும் யமன் போலக் (காமனது) வெற்றிப்படைகளை வளைத்துச் செலுத்தும் துட்டர்க்கு (துவத்ட மாதர்க்கு), தழைத்த தோள் (tதும்) கொங்கை (மீதும்) இட்டுள்ள (அணிந்துள்ள) மாய - ஆடை விழவும் (அதை எடுத்து) உடலிற் சேர்த்鷺 த்ெ வருத்தந்தரக்கூடிய தந்திர சூழ்ச்சிகளுடன் நெருங் துன்பம் விளைவிக்கும் புதிய இன்பத்துடன் படுக்கை - இடத்தே கொண்டு சென் று (அதனாற்) சேர்க்கும் பொன் அணிகளை உடைய மாதர்க்கு, மெதுவாகத் தெளிவு கற்று விட்டாயோ (அடைந்து விட்டாயோ) எனக் கூறி, இன்றே ஒடிப்போ என்று (வெருட்டி) அன்பு சுருங்கும் மாதர்க்கு;