திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 24 அம்பொத்த விழி (திருச்செந்தூர்) Thiruppugazh 24 amboththavizhi (thiruchchendhUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தத் தனனத் தந்தத் தனனத் தந்தத் தனனத் ...... தனதானா ......... பாடல் ......... அம்பொத் தவிழித் தந்தக் கலகத் தஞ்சிக் கமலக் ...... கணையாலே அன்றிற் குமனற் றென்றற் குமிளைத் தந்திப் பொழுதிற் ...... பிறையாலே எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற் றின்பக் கலவித் ...... துயரானாள் என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக் கின்பப் புலியுற் ...... றிடலாமோ கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக் கொங்கைக் குறவிக் ...... கினியோனே கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச் சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச் செந்திற் குமரப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அம்பு ஒத்த விழித் தந்தக் கலகத்து அஞ்சிக் கமலக் கணையாலே ... அம்பு போன்ற கண்களை உடைய பெண்கள் பேசும் அவதூறு மொழிக்கு அஞ்சியும், காமன் எய்த தாமரைப் பூ அம்பினாலும், அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்திப் பொழுதில் பிறையாலே ... அன்றில் என்னும் பறவைக்கும், தீயை வீசும் தென்றல் காற்றுக்கும் இளைத்து, மாலை நேரத்தில் வந்துள்ள பிறைச் சந்திரனாலே, எம் பொன் கொடி மன் துன்பக் கலன் அற்று இன்பக் கலவித் துயர் ஆனாள் ... எமது கொடி போன்ற மகள் அணிந்திருக்கும் துன்பத்தைச் செய்யும் ஆபரணங்களை அகற்றி, இன்பத்தைத் தரும் உன்னுடன் கலப்பதையே நினைவாகத் துயரம் கொண்டுள்ளாள். என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்பப் பு(ல்)லி உற்றிடலாமோ ... எதை வைத்துக்கொண்டு இப்பூமியில் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இன்பத்தை அடைந்து இருத்தல் வாய்க்குமோ? கொம்பக் கரி பட்டு அஞ்சப் பதுமக் கொங்கைக் குறவிக்கு இனியோனே ... தந்தங்கள் உள்ள யானை (விநாயகர்) எதிரில் தோன்றினதால் அஞ்சிய, தாமரை அரும்பு போன்ற மார்பகத்தை உடைய, குறப் பெண்ணாகிய வள்ளிக்கு இனியோனே, கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே ... கொன்றை மலர் அணிந்த சடையுடைய சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத் தெரியும்படி கொஞ்சித் தமிழில் கூறியவனே, செம் பொன் சிகரப் பைம்பொன் கிரியைச் சிந்தக் கறுவிப் பொரும் வேலா ... செம் பொன் சிகரங்களை உடைய, பசுமையும் அழகும் பெற்ற கிரெளஞ்ச மலை குலைந்து அழியும்படி, சினம் கொண்டு சண்டை செய்த வேலனே, செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திருச்செந்திற் குமரப் பெருமாளே. ... செம்மையான சொல்லுடைய புலவர்கள் பால் அன்பு கொண்ட, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் நற்றாய் பாடுவதுபோல அமைந்தது. வசை பேசும் பெண்கள், மன்மதன், மலர் அம்புகள், அன்றில், தென்றல், சந்திரன் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.76 pg 1.77 WIKI_urai Song number: 19 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 24 - amboththa vizhi (thiruchchendhUr) ampoth thavizhith thanthak kalakath thanjik kamalak ...... kaNaiyAlE anRiR kumanat RenRaR kumiLaith thanthip pozhuthiR ...... piRaiyAlE empoR kodimat Runpak kalanat Rinpak kalavith ...... thuyarAnAL enpet RulakiR peNpet Ravaruk kinpap puliyut ...... RidalAmO kompuk karipat tanjap pathumak kongaik kuRavik ...... kiniyOnE konRaic chadaiyaR konRaith theriyak konjith thamizhaip ...... pakarvOnE sempoR sikarap paimpoR kiriyaic chinthak kaRuvip ...... porumvElA senjoR pulavark kanput Rathiruc chenthiR kumarap ...... perumALE. ......... Meaning ......... ampu oththa vizhith thanthak kalakaththu anjik kamalak kaNaiyAlE: Because of her fear for the scandal-mongering women with arrow-like eyes, because of the lotus shot as an arrow by Manmathan (God of Love), anRiRkum anal thenRaRkum iLaiththu anthip pozhuthil piRaiyAlE: because of the weakening caused by the bird, andRil, and the southerly wind that spews fire, and because of the crescent moon that rises at the dusk, em pon kodi man thunpak kalan aRRu inpak kalavith thuyar AnAL: our dear creeper-like daughter has shed all her ornaments causing anguish to her, feeling miserable with the sole thought of union with You; en petRu ulakil peN petRavarukku inpap pu(l)li utRidalAmO: with what hope can mothers of such girls seek to attain happiness in this world? kompak kari pattu anjap pathumak kongaik kuRavikku iniyOnE: When the tusked elephant (Lord VinAyagar) appeared in front of her, VaLLi, endowed with bosom like the lotus bud, became scared; You are very dear to that damsel of the KuRavAs, Oh Lord! konRaic chadaiyaRku onRaith theriyak konjith thamizhaip pakarvOnE: To Lord SivA, wearing the kondRai (Indian laburnum) flower on His matted hair, You preached the PraNava ManthrA, explaining its significance in the lilting language of Tamil! sem pon sikarap paimpon kiriyaic chinthak kaRuvip porum vElA: The fertile and lovely Mount Krouncha, with reddish and golden peaks, was shattered and destroyed when You fought fiercely with rage, Oh Lord with the spear! sem sol pulavarkku anputRa thiruchchenthiR kumarap perumALE.: You are very fond of those poets renowned for their great words, and You have Your abode in ThiruchchendhUr, Oh Great One! |
This song has been written in the Nayaka-Nayaki BhAva, where the poet has assumed the role of the heroine's mother, portraying the pangs of separation of her daughter from Lord Murugan. The scandal-mongering women, the Love-God, the flowery arrows, the bird andRil, southerly wind and the moon are some of the sources which aggravate the agony of separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |