பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 61 19 அம்பு போன்ற கண்களையுடைய பெண்கள் பேசும் கலகச் சொல்லாகிய அலர் மொழிக்கு (புறங்கூறம் மொழிக்கு அஞ்சிக், காமன் எய்த தாமரைப் பூ அம்பினாலும் - 1அன்றில் (என்னும்) பறவைக்கும், தீயை வீசும் தென்றற் காற்றுக்கும் இளைத்து அந்திப் பொழுதில் (வந்துள்ள) நிலவாலும் - எமது பொற்கொடி போன்ற (மகள்) தரித்திருக்கின்ற துன்பத்தைச் செய்யும் அணிகலன்களை அறவே விடுத்து இன்பக் கலவியின் (நினைவாகவே) துயரங் கொண்டுள்ளாள். எதைப் பெற்று(ச் சுகம் உண்டு) பெண்ணைப் பெற்றவருக்கு! (உண்மை) இன்பத்தைப் புல்லி (அடைந்து) இருத்தல் வாய்க்குமோ! கொம்பையுடைய யானை (கணபதி) எதிர் தோன்ற அஞ்சின அந்தத் தாமரை யரும்பு (போன்ற) கொங்ைைகயை உடைய குறத்திக்கு (வள்ளிக்கு) இனியோனே! கொன்றை சூடிய சடையற்கு (சிவனுக்கு) (ஒப்பற்ற அந்த) ஒரு பொருளைத் தெரியும்படி கொஞ்சித் தமிழிற் கூறியவனே! செம்பொன் சிகரங்களை “D ORTOL – ILI பசிய பொன்கிரி (கிரெளஞ்சம்) குலைந்தழியும்படி கோபித்துப் பொருத வேலனே! செஞ்சொற் புலவர்கள்பால் அன்பு கொண்ட திருச்செந். து.ார்க் குமரப் பெருமாளே! - (இன்பப் புலியுற் றிடலாமோ) 1. அன்றிற் பறவை, தென்றல், நிலவு இவை காமத்தை வளர்ப்பன. 2. சிவபிராற்கு மூலப்பொருளைத் தமிழில் முருகவேள் பகர்ந்தனர் என்கின்றனர். அது, சம்பந்தராய்த் தேவாரம் பாடினதையுங் குறிக்கலாம்: 77ஆம் பாடலையும் பார்க்க 3. குருகுபெயர் பெற்ற கன வட சிகளி (கனம் பொன்) வேடிச்சி காவலன் வகுப்பு: வேல்ெடுத்துப். பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எங்கோன்' . கந்தரலங்காரம், 89,