திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 18 மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்) Thiruppugazh 18 mandRalangkondhumisai (thirupparangkundRam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன ...... தனதான ......... பாடல் ......... மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தியென் கின்றமடு ...... விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய் பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மன்றல் அங் கொந்துமிசை ... வாசனைபொருந்திய அழகிய பூங்கொத்துக்களின் மீது தெந்தனத் தெந்தனென ... தெந்தனம் தெந்தனம் என்று ரீங்காரம் செய்து கொண்டு வண்டினங் கண்டுதொடர் ... வண்டுக் கூட்டங்கள் தேனை உண்ணப்பார்த்து தொடரும்படியான குழல்மாதர் ... கூந்தலையுடைய பெண்களது மண்டிடும் தொண்டை ... நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி போன்ற அமுது உண்டுகொண்டு ... இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, அன்புமிக வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்ற ... ஆசை மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த, அம்பு ஒன்றுவிழி கன்ற ... அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக, அங்கங்குழைய ... சரீரம் மோகவசத்தால் குழைந்து போக, உந்தியென்கின்ற மடு விழுவேனை ... வயிறு என்னும் மடுவில் விழுகின்ற அடியேனை சிலம்புங் கனக தண்டையுங் கிண்கிணியும் ... சிலம்பும், பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும், ஒண்கடம் பும்புனையும் உன் அடிசேராய் ... அழகிய கடப்ப மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய். பன்றியங் கொம்பு கமடம் புயங்கம் ... பன்றியின் அழகிய கொம்பையும்*, ஆமை ஓட்டையும்**, பாம்பையும், சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர்சேயே ... தேவர்களது பழைய எலும்புகளையும் தரிக்கும்*** சிவபிரானின் பாலனே, பஞ்சரங் கொஞ்சுகிளி ... கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப்பிள்ளைகள் வந்துவந்து ... கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து ஐந்துகர பண்டிதன் தம்பியெனும் வயலூரா ... ஐங்கரன் விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற, வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே, சென்றுமுன் குன்றவர்கள் தந்த ... குன்றுகளில் வசிப்பவர்களாகிய வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த பெண் கொண்டு ... வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு வளர் செண்பகம் பைம்பொன்மலர் ... வளர்ந்து ஓங்கிய செண்பக மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள் செறிசோலை ... மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும், திங்களும செங்கதிரும் அங்குலும் தங்குமுயர் ... சந்திரனும், செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும் தென்பரங் குன்றிலுறை பெருமாளே. ... ஆகிய அழகிய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே. |
* விஷ்ணு வராக அவதாரம் செய்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றபின் தருக்குற்றுத் திரியும்போது, முருகன் வராகத்தை அடக்கி கொம்பைப் பறித்து சிவனிடம் தர, அவர் அதனை மார்பில் அணிந்தார் - வராக புராணம். |
** கூர்மாவதாரம் செய்து மந்தரமலையைத் தாங்கி விஷ்ணு அமிர்தத்தை மோகினியாக வந்து தேவர்களுக்கு விநியோகித்த பின், ஹரிஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார். பின்னர் கூர்மம் செருக்குற்று உலகத்தையே அழிக்கப் புக, சிவபிரானின் ஆணையால் ஐயப்பன் கூர்மத்தை அடக்கி அதன் ஓட்டைப் பெயர்த்து சிவனிடம் வைக்க அதனை தம் மார்பில் தரித்தார் - கூர்ம புராணம். |
*** பிரளய காலத்தில் சிவபிரான் ஸர்வ ஸம்ஹாரம் செய்தபின் தன் பக்தர்களாகிய பிரம்மாதி தேவர்களின் எலும்புகளையும் எலும்புக் கூட்டையும் 'கங்காளம்' மாலையாக அன்புடன் தரித்தார் - கந்த புராணம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.64 pg 1.65 WIKI_urai Song number: 14 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 18 - mandRalang kondhumisai (thirupparangkundRam) manRalang konthumisai thenthanath thenthanena vaNdinang kaNduthodar ...... kuzhalmAthar maNdidun thoNdaiyamu thuNdukoN danpumika vampidung kumpakana ...... thanamArpil onRaam ponRuvizhi kanRaang kangkuzhaiya unthiyen kinRamadu ...... vizhuvEnai unsilam pungkanaka thaNdaiyung kiNkiNiyum oNkadam pumpunaiyum ...... adisErAy panRiyang kompukama dampuyang kanjurarkaL paNdaiyen pangkamaNi ...... pavarsEyE panjarang konjukiLi vanthuvan thainthukara paNdithan thampiyenum ...... vayalUrA senRumun kunRavarkaL thanthapeN koNduvaLar seNpakam paimponmalar ...... seRisOlai thingaLum sengkathiru mangkulun thangkumuyar thenparang kunRiluRai ...... perumALE. ......... Meaning ......... manRalang konthumisai thenthanath thenthanena vaNdinang kaNduthodar kuzhalmAthar: The women with beautiful hair are wearing fragrant flowers around which the beetles hum seeking honey. maNdidun thoNdaiyamuthuNdu koNdu: I think of savouring the lovely juicy lips of those women; anpumika vampidung kumpakana thanamArpil onRa: I also think of passionately cojoining their large bosoms with my chest; amponRuvizhi kanRa ang kangkuzhaiya: I want to see their arrow-like eyes droop in ecstacy and limbs melt; unthiyen kinRamadu vizhuvEnai: and I drown myself in the pond of their navel. You have to redeem me and unsilam pungkanaka thaNdaiyung kiNkiNiyum oNkadam pumpunaiyum adisErAy: lead me to Your Lotus Feet adorned with anklets, golden chain with jingling beads and beautiful kadappa flowers! panRiyang kompu kamadam puyangkam: (He wears on His chest) the horn of boar*, tortoise shell**, snakes, surarkaL paNdai yenp angkamaNi pavarsEyE: DEvAs' old bones*** and skeletons; He is SivA and You are His Son! panjarang konjukiLi vanthuvanthu: The talking parrots in the golden cages come out repeatedly and say ainthukara paNdithan thampiyenum vayalUrA: "You are the younger brother of VinAyagA, the Wizard of Knowledge"; and You belong to VayalUr! senRumun kunRavarkaL thanthapeN koNdu: Once, You wedded VaLLi, the damsel of the hunting KuRavAs who lived in the hillside and offered their daughter in marriage to You! vaLar seNpakam paimponmalar seRisOlai: There is a dense grove around this hill, with tall sheNbaga (champak) trees showering golden yellow flowers; thingaLum sengkathiru mangkulun thangkumuyar: and this hill is so tall that the sun, the moon and the clouds hover around its peaks at thenparang kunRiluRai perumALE.: beautiful ThiruparankundRam which is Your abode, Oh Great One! |
* Vishnu took the VarAha avathAram -Boar- to destroy Demon HiranyAkshA and to redeem Mother Earth. Then, the raging Boar became uncontrollably wild. It was conquered by Murugan who gave the horn of the boar as a souvenir to Lord SivA - VarAha PurANam. |
** In KUrmAvathAram, Vishnu came as a tortoise to support Mount Manthara for churning the milky ocean. After Vishnu took the form of Mohini to distribute Amirtham -Divine Nectar-, Hariharaputhran -Ayyappan- was born. The tortoise became so conceited that it created a havoc in the universe. Upon SivA's command, Ayyappan defeated the wild tortoise and presented its shell as a souvenir to SivA for display on His chest - KUrma PurANam. |
*** When the entire universe faced extinction during PraLayA, SivA performed Sarva SamhAram - total destruction. However, He kindly took the bones and skeletons of DEvAs and wore them on His chest - Kandha PurANam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |