பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முருகவேள் திருமுறை (1 திருமுறை 14. திருவடிபெற மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஒன்றஅம் பொன்று விழி கன்ற அங் கங்குழைய உந்தியென் கின்றமடு விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் அடிசேராய், பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி பவர்சேயே! பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் வயலுTரா! சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தெண்பரங்குன்றிலுறை பெருமாளே ! (14) 15. திருவடி பெற வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டை யாலும் 'அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ் சிந்தை மாதர் வசமாகி எரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும் இேனற்படுந் தொந்த வாரி கரையேற ா 2. அனைவோரும் வடுப்படுந் தொண்டை- பலராலும் வடுப்படுத் தப்படும் கொவ்வைக்கனி யொத்த இதழ். 2. இனற்படுந் தொந்த வாரி.துன்பப்படுகின்ற வினைத் தொடர்புள்ள பிறவிக் கடல்.