திருப்புகழ் 11 கனகந்திரள்கின்ற  (திருப்பரங்குன்றம்)
Thiruppugazh 11 kanagandhiraLgindRa  (thirupparangkundRam)
Thiruppugazh - 11 kanagandhiraLgindRa - thirupparangkundRamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதந்தன தந்தன தந்தன
     தனதந்தன தந்தன தந்தன
          தனதந்தன தந்தன தந்தன ...... தனதான

......... பாடல் .........

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
     தனில்வந்துத கன்தகன் என்றிடு
          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே

கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
          கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே

பனகந்துயில் கின்றதி றம்புனை
     கடல்முன்புக டைந்தப ரம்பரர்
          படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே

பலதுன்பம்உழன்றுக லங்கிய
     சிறியன்புலை யன்கொலை யன்புரி
          பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
     புரமுந்திரி வென்றிட இன்புடன்
          அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே

அடல்வந்துமு ழங்கியி டும்பறை
     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்

மனமுந்தழல் சென்றிட அன்றவர்
     உடலுங்குட லுங்கிழி கொண்டிட
          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே

மதியுங்கதி ருந்தட வும்படி
     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கனகந்திரள்கின்ற பெருங்கிரி ... தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய
மேரு மலையை

தனில்வந்து தகன்தகன் என்றிடு ... அடைந்து அதன் மேல் தக தக
என்று மின்னுகின்ற

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு ... ஒளிவீசும் செண்டாயுதத்தை
(பொற்பிரம்பை)* எறிந்திட்ட

கதியோனே ... புகலிடமானவனே,

கடமிஞ்சி அநந்தவிதம் புணர் ... மிக்க மதம் கொண்டு, பலவித
பக்ஷணங்களைப் புசித்து,

கவளந்தனை உண்டு வளர்ந்திடு ... அனைத்தையும் கவள அளவாக
உண்டு வளர்ந்த

கரியின்றுணை என்றுபிறந்திடு முருகோனே ... யானைமுகனுக்கு
இளையவனாகப் பிறந்த முருகனே,

பனகந்துயில்கின்ற திறம்புனை ... ஆதிசேஷன் மீது அறிதுயில்
கொள்ளும் வல்லமை உடையவரும்,

கடல்முன்பு கடைந்த பரம்பரர் ... பாற்கடலை முன்பு
(கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும்,

படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே ... வானில்
படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே,

பலதுன்பம் உழன்று கலங்கிய ... பல துன்பங்களால் மனம் சுழன்று
கலக்கமுற்ற

சிறியன்புலையன் கொலையன் ... அற்பனும், புலால் உண்பவனும்,
கொலைகாரனுமான நான்

புரி பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே ... செய்கின்ற
பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி
திருவருள் புரியவேண்டும்.

அனகன்பெயர் நின்று ... பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து
நின்று,

உருளுந்திரி புரமுந்திரி வென்றிட ... எப்போதும் சுழன்று திரியும்
திரிபுரத்தையும் வெற்றி கொள்ள,

இன்புடன் அழலுந்த ... அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக்
கொள்ளும்படியாக

நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே ... சிரித்தே எரித்த
திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே,

அடல்வந்து முழங்கியிடும்பறை ... வலிமையோடு வந்து முழங்கும்
பறை வாத்தியங்கள்

டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென ... (அதே ஒலியோடு)

அதிர்கின்றிட அண்டநெரிந்திட ... உலகம் அதிர, அண்டங்கள்
கூட்டமிகுதியால் நெரிய,

வருசூரர் மனமும் தழல் சென்றிட ... போருக்கு வந்த சூரர்களின்
மனத்தில் சென்று அக்கினி சுடும்படி,

அன்றவர் உடலுங் குடலுங் கிழி கொண்டிட ... அந்த நாள்
அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி,

மயில்வென்றனில் வந்தருளும் ... மயிலின் முதுகின் மேல் வந்தருளிய

கன பெரியோனே ... மதிப்பும் பெருமையும் உடையவனே,

மதியுங்கதிருந் தடவும்படி ... சந்திரனும் சூரியனும் தடவிச்
செல்லும்படியான

உயர்கின்ற வனங்கள் பொருந்திய ... உயரமான மரங்கள் உள்ள
சோலைகள் நிறைந்த

வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே. ... வளமிக்க
திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே.


* முருகனது அம்சமான உக்கிர பாண்டியன் ஆட்சியின் போது நாட்டில் வறுமை
மிக, பாண்டியன் கனவில் சிவபெருமான் தோன்றி பொன்மலை மேருவைச்
செண்டால் அடித்தால் பொன்னாகக் கொட்டும் என, பாண்டியன் மேருவைச்
செண்டால் அடித்து பொன் பெற்ற திருவிளையாடல் இங்கு கூறப்படுகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.38  pg 1.39  pg 1.40  pg 1.41 
 WIKI_urai Song number: 2 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 11 - kanagandhiraLgindRa (thirupparangkundRam)

kanakanthiraL kindRape rungiri
     thanilvandhutha ganthagan endRidu
          kadhirminjiya cheNdaie Rindhidu ...... gathiyOnE

kadaminjia nanthavi dhampuNar
     kavaLanthanai unduva Larndhidu
          kariyindRuNai endrupi Randhidu ...... murugOnE

panaganthuyil kindrathi Rampunai
     kadalmunbuka daindhapa ramparar
          padarumpuyal endravar anbukoL ...... marugOnE

palathunbamu zhandruka langiya
     chiRiyanpulai yankolai yanpuri
          bavamindruka zhindhida vandharuL ...... purivAyE

anaganpeyar nindRuru Lunthiri
     puramunthiri vendRida inbudan
          azhalunthana kunthiRal koNdavar ...... pudhalvOnE

adalvandhumu zhangiyi dumpaRai
     dududuNdudu duNdudu duNdena
          adhirgindRida aNdane rindhida ...... varusUrar

manamunthazhal chendRida andRavar
     udalungkuda lungkizhi koNdida
          mayilvendRanil vandharu Lungana ...... periyOnE

madhiyumkadhi rumthada vumpadi
     uyargindRava nangaLpo rundhiya
          vaLamondRupa rangiri vandharuL ...... perumALE.

......... Meaning .........

kanakan thiraLkindra perungiri: There is plenty of gold accumulated at Mount MEru (KailAsh);

thanilvandhu thagan thagan endridu kadhirminjiya cheNdai eRindhidu: You came there and threw the shining golden cane (CheNdAyutham) that was glittering and glowing*.

gathiyOnE: You are the ultimate refuge for all!

kadaminji anantha vidham puNar: He is easily excitable and devours a variety of eatables;

kavaLanthanai undu vaLarndhidu: He takes His food scoop by scoop (with His trunk); and

kariyin thuNai endrupi Randhidu murugOnE: He is elephant-faced. You are His younger brother, Oh Muruga.

panaganthuyil kindra thiRampunai: He lays on the serpent, AdhisEshan, half-asleep and half-awake;

kadalmunbu kadaindha parampar: He, the Supreme One, churned the milky ocean all by Himself (in KUrmAvathAram);

padarumpuyal endravar anbukoL marugOnE: and He has the complexion of dark cloud. You are His nephew!

palathunbam uzhandru kalangiya: My mind is reeling under a multitude of miseries.

chiRiyan pulaiyan kolaiyan: I am a base creature, a lousy meat-eater and a murderer.

puri bavamindru kazhindhida vandharuL purivAyE: To destroy all the sins I have committed till now, please come and save me by showering Your grace.

anagan peyar nindru: His name is the Purest for ever;

uruLunthiri puramunthiri vendrida: In order to conquer Thiripuram, which is constantly in rotation

inbudan azhaluntha nakunthiRal: He cast His benign smile, and the whole place was burnt down;

koNdavar pudhalvOnE: such was His power. You are that SivA's son!

adalvandhu muzhangi idum paRai: Strongly came the procession of drums in the battlefield

dududuNdudu duNdudu duNdena: and made a noise like "dududuNdudu duNdudu duNd";

adhirgindrida aNda nerindhida varusUrar: the earth trembled as the demons (asuras) marched on, and there was stampede all over the world.

manamunthazhal chendRida andRavar: Their hearts were burnt down by fire, and on that day,

udalung kudalung kizhi koNdida: their bodies and intestines were torn to shreds

mayilvendRanil vandharu Lungana periyOnE: as You fought mounting Your peacock, Oh Revered One!

madhiyum kadhirum thadavumpadi: The Sun and the Moon are almost brushing

uyargindRa vanangaL porundhiya: the tall trees in the groves abounding in

vaLamondRu parangiri vandharuL perumALE.: the fertile town of ThirupparangkundRam which You have chosen as Your residence to radiate Your grace, Oh Great One!


* MurugA incarnated as PANdiya King, Uggira PANdiyan. During PANdiya's rule, there was so much poverty that Lord SivA appeared in his dream directing him to go to Mount MEru and slash it with his golden cane. PANdiya did so, and Mount MEru showered solid gold with which PANdiya was able to get rid of the poverty of his country - ThiruviLaiyAdal PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 11 kanagandhiraLgindRa - thirupparangkundRam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]