பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 25 அனகன் (பாவமிலான் - து.ாயன்) என்னும் பெயர் (வாய்ந்தவனும்), நின்று உருண்டு ரியும் திரி (முப்)புரங்களையும் வெல்லும்படி இன்ப நிலையில் (இருந்தே) தி வெளிப்படச் சிரித்த திறல் கொண்டவரு மான (சிவனின்) புதல்வனே! வலிமையுடன் முழங்குகின்ற பறை டுடுடுண்டென ஒலிக்க, அதிர்ந்த அண்டங்கள் நெரிந்து போமாறு வந்த் சூரர் (தம்) - மனத்தில் எரி பாயவும் , அப்போது அவர் உடலும் குடலும் கிழிபடவும் மயில் முதுகினில் (ஏறி) வந்தருளிய பெருமை வாய்ந்த பெரியோ ன்ே! திங்களும் ஞாயிறும் (சந்திரனும் சூரியனும்) தடவிச் செல்லும் அளவுக்கு உயர்ந்துள்ள சோலைகள் பொருந்தியுள்ள வளம் பொருந்திய (திருப்) பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே! (என் பாவம் ஒழிய வந்தருள் புரிதி) 3 போராடுங் கருத்துடன் வந்து மன்மதன் நிற்க, நிலவு(ம்) சுடுகின்ற தீயைக் கொள்ள (தியை வீச) மங்கையர்களின் கண்களில் வசப்பட்டு, மலைச் சாரலில்) உள்ள மணம் பொருந்திய பொழிலிற் பயின்றுவரும் தென்றற் காற்று (அங்குள்ள) அகன்ற அழகிய சுனை (நீரிற்) படிந்து வலிவுடனே எழ, இரவும் பகலும் அந்தி வேளையும் உள்ள குயில் வந்து இசையைத் தெந்தன" எனப் பாட, (எனது) இரண்டு கண்களும் துயிலுதல் இன்றிக், களைத்துப்ப்ோய், இங்கே நெஞ்சு பதை பதைக்க (மங்கையர்பால்) மயல் கொண்டு வருந்திய வஞ்சகனாகிய (நான்) இனி உனது மலர்ந்து விளங்கும் திருவடியை அடைவேனோ!