முருகனுக்கான Poems for |
---|
திருச்செந்திலாண்டவன் ஆனந்தக் களிப்பு Aanandhak kaLippu |
கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் Poet Nadesa Gounder | English | பட்டியல் தேடல் list search |
நல்ல மணியிது கண்டீர் - செந்தில் நாயக மாம்சுப் பிரமணி கண்டீர் - (நல்ல) அல்லல் அறுக்கும் மணியாம் - பர மானந்த வெள்ளத் தழுத்தும் மணியாம் கல்வி யளிக்கும் மணியாம் - துன்பக் கடலி லிருந்தெம்மைக் காக்கும் மணியாம் - (நல்ல) ... 1 ஓங்கிய பொன்மலை மேலே - வளர் ஒள்ளிய பச்சைக் கொடிவெள்ளி வெற்பின் பாங்கமர் செந்துகிர்க் குன்றைத் - தழீஇப் பண்ணவர்க் காவருள் ஒண்மணி கண்டீர் - (நல்ல) ... 2 அன்னமும் ஏனமுங் காணா - முடி அடியுடைச் செங்கரும் பிங்கண் மணியாம் தென்னர் குலத்தி லுதித்தே - எட்டுத் திசையும்வெல் பச்சைக் கரும்பின் மணியாம் - (நல்ல) ... 3 எல்லையி லின்பக் கடலில் - விளைந் தெல்லையி லாருயிர்க் கின்ப மளிக்க எல்லையில் பேரருளாலே - எழுந் தெல்லையில் பேரொளி யீயும்மணியாம் - (நல்ல) ... 4 இல்லொடு பொன்முத லான - விருப் பெல்லாந் துறந்தோ ரிதயத் திருந்தே அல்லும் பகலும் விடாமல் - அவர் ஆருயிர்க் கோருயிர் ஆனமணியாம் - (நல்ல) ... 5 வேய்மணி ஈன்ற மணியாம் - சாம வேதத்தி னுள்ளே விளங்கும் மணியாம் ஆயெனப் பொன்வரை யீன்ற - எங்கள் அம்மணி தன்னை அழைக்கும் மணியாம் - (நல்ல) ... 6 மாயன்பொன் மார்பில் வயங்கும் - ஒளி மாமணி யோடுசிந் தாமணி தம்மை ஏயென வெள்ளப் பல்கோடி - ரவி என்ன இலங்கொளி துன்னும் மணியாம் - (நல்ல) ... 7 கங்கை யெனும்நதி மங்கை - ஒளிர் கார்த்திகை யாரெனும் சீர்த்திகொள் மாதர் தங்கள் தலையினில் மார்பில் - வைத்துத் தாங்கிய பேரொளி ஓங்கு மணியாம் - (நல்ல) ... 8 சரவணத் தேவரு மணியாம் - ஒளிர் பிரணவத் துள்ளே பிறங்கும் மணியாம் முரகரி புரகரி பிரமன் - புரந் தர னமரர்கள்முடி தனிலமர் மணியாம் - (நல்ல) ... 9 கரிமுகத் துங்க மணியின் - ஒரு சரிசம னாகிய தம்பி மணியாம் புரிகுழற் குஞ்சரி வள்ளி - யெனும் பொற்கொடி யாரைப் பொருந்து மணியாம் - (நல்ல) ... 10 காந்த மெனுந் துங்க நூலில் - ஒளி காந்த நுழைந்து கவின்ற மணியாம் வேந்தர் புகழ்தமிழ்ச் சங்கந் - தனில் வீற்றிருந் தின்னூல் விரிக்கும் மணியாம் - (நல்ல) ... 11 ஆதி வராகத்தின் கொம்பை - யொடித் தன்றுவில் வேடனைக் கொன்றவர்க் கீந்தே மாதிவ ராகத்தர் மார்பின் - என்று மன்னி யிருந்தவிர் நன்மணி கண்டீர் - (நல்ல) ... 12 நஞ்சொடு வந்த மணியும் - பொய்யன் கஞ்சத்தும் வன்கலின் நெஞ்சத்தும் - மாரன் வெஞ்சி லையிங்கணும் வந்த - மணி மேன்மையி லவிது போல்கில கண்டீர் - (நல்ல) ... 13 கூட னகர்மணி விற்ற - விளங் கோவுந் தவத்திற் பெறுமணி கண்டீர் கோடொரு கைவைத்த தேவர் - தினங் கொண்டாடு கின்ற குலமணி கண்டீர் - (நல்ல) ... 14 வாரிதி நீருண் முனிவன் - இசை மகதி தழீஇய வரமுனி ஏனோர் பூரண இன்பம் விரும்பி - நாளும் போற்றிசெய் யேற்றம் பொலிந்த மணியாம் - (நல்ல) ... 15 சந்தம் பதினாயி ரஞ்சொல் - ஞான சதுரனுங் கீரனு மேமுதலான எந்தம் பெருமக்கள் யாரும் - மனம் என்கரு வூலத் திருத்தும் மணியாம் - (நல்ல) ... 16 தேனமர்பூம் பொழில் சேர்ந்த - புகழ்ச் சீகாழி வந்தருள் தேசிக மணியாம் ஞான சம்பந்தன் மணியாம் - உமை நங்கை முலைப்பாலை நுங்கும் மணியாம் - (நல்ல) ... 17 வெவ்விடம் தீர்க்கும் மணியாம் - அடும் வெஞ்சுரம் தீர்த்தருள் தந்த மணியாம் எவ்விடத் தேது பிறப்பில் - எளி யேனுறி னுங்கைவி டாத மணியாம் - (நல்ல) ... 18 இன்பினும் துன்பினும் தன்னை - இந்த ஏழை மறவாத வாழ்வை யளித்தே இன்கவி தன்பொ னடிக்கே - உவந் தென்றும் புகலருள் ஈந்த மணியாம் - (நல்ல) ... 19 இந்த மணியை யுளத்தே - மறப் பின்றி வைப்பீருள் லிருளிரிந் தோட என்றுமின் பாகி யிருப்பீர் - பிறப் பென்னுந் துயரினி மேலணு காதே - (நல்ல) ... 20 |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |