![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| பக்கமிரு மாதிருக்க pakkamiru mAdhirukka |
![]() | பேராசிரியர் டாக்டர் அர. சிஙகாரவடிவேலன் Dr Singaravadivelan | English | பட்டியல் தேடல் list search |
பக்கமிரு மாதிருக்கச் சொக்கவள்ளி வேலெடுத்துப் பச்சைமயில் உச்சிவரும் வேலனே - உன்றன் பஞ்சடியை நெஞ்சழுத்திப் பாற்குடத்தைத் தோளெடுத்தால் அஞ்சிமிகக் கெஞ்சிடுவான் காலனே. பழநி மலை மீதமர்ந்து பாட்டமுதை வேட்டருந்திப் பாருலகைக் காத்தருளும் கந்தனே - உன்றன் பால்வடியும் பூமுகத்தை நாள் முடியப் பார்த்திருந்தால் வேல்முடித்து வைத்துவிடும் பந்தமே. ஆண்டியுடை கொண்டிருந்தும் அரசமனம் கொண்டவனை அண்டியதும் நொண்டிவிடும் துன்பமே - அவன் ஆறெழுத்து மந்திரத்தின் ஓரெழுத்தை ஓதிடினும் பாரனைத்தும் பெற்றுயரும் இன்பமே. திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி. |
English transliteration to come |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |