முருகனுக்கான Poems for |
---|
மாண்பார் தண்டம் ஏந்தியவன் mANbAr thaNdam yEndhiyavan |
அழகாபுரி இளங்கோவன் தேவக்கோட்டை, தமிழ் நாடு Azhagapuri Ilangovan Dhevakottai, India | English | பட்டியல் தேடல் list search |
அலையாம் கரத்தால் தாலாட்டும் அணிசேர் பரவை மிகச்சூழ்ந்த மலையக நாட்டின் தைப்பிங்கில் மன்னன் கோவில் கொண்டுள்ளான்! கலைகள் நிறைந்த சீனச்சொல் கவின்சேர் தைப்பிங் பொருள்காணில் 'நிலையாம் அமைதிக் குடி'லென்றே நிதமும் சொல்வார் அஃதுண்மை. ... 1 மலையின் அடிவா ரத்தினிலே மண்டும் இயற்கைச் சூழலிலே கலையா முகில்கள் பொழிகின்ற கவினார் நகரே தைப்பிங்காம்! தலையை வெளியே நீட்டிடினும் தண்ணென் றிருக்கும் குளிர்மேவச் சிலையாய் வேலன் நின்றஇடம் தெய்வீக இயற்கைக் குடிலன்றோ? ... 2 நூற்றி இருப, தாண்டின்முன் நுவலும் முருகன் கோவிலதோ தேற்றம் மலையடி வாரத்தில் திருவாம் காட்சி தந்ததுவாம் மாற்றம் அறுபது வருடம்முன் மாண்பார் தண்டம் ஏந்தியவன் ஆற்றல் பெருக்கிட மக்கள்பால் அணித்தே இருக்க ஊர்வந்தான். ... 3 கொண்டு விற்கும் நகரத்தார் குலத்தைக் காக்கும் முருகிற்குத் தண்ட பாணி எனும்பெயரில் தைப்பிங் நகரில் கலைக்கோயில் கண்டாய் இனிக்கக் கட்டியுள்ளார் காவடி தூக்கிச் செல்கின்றார் மண்டும் நலமும் வளமெல்லாம் மன்னன் அருளக் காண்போமே! ... 4 திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி. |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |