முருகனுக்கான Poems for |
---|
உண்டாயின் உண்டென்றும் uNdAyin uNdendRum |
கவியரசு கண்ணதாசன் தமிழ்நாடு Poet Kannadhasan Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
தைப்பிங் (மலேசியா) ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமி குறித்து கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடியது உண்டாயின் உண்டென்றும் இல்லாயின் இல்லென்றும் உடனுடன் காட்டி விடுவான் ஊர்காவல் நாமென்று கூர்வேலைக் கைக்கொண்டு உயிர்காக்க ஓடி வருவான் வண்டாடும் மைக்கூந்தல் வள்ளிதெய் வானையரை மறந்தவன் ஈண்டு வந்தான் வளமான தமிழோடு தமிழ்ச்சாதி வாழ்நாளை வளமாக்கக் கோவில் கொண்டான் தெண்டாயு தபாணித் தெய்வமே தைப்பிங்கின் தெளிந்தநீ ரோடை யருகே திருநாட்கள் பலகண்டு வருநாட்கள் தமிழர்க்குத் திருவாக வாழ்த்தி யருள்வான். கொண்டாளை உற்றாரை குலத்தோரை ஊர்வைத்து கொண்டுவிற் பார்கள் மனதை குன்றாக்கி நின்றாடி குறையாத பொருள்தந்து குடிகாக்க வேண்டு மெனவே பண்டார வடிவாகிப் பாய்க்கப்பல் தனிலேறி பழநியைப் பிரிந்து வந்தான் பலகால மானாலும் அடையாளம் மாறாமல் பனிமுகம் காட்டி நின்றான் தெண்டாயு தபாணி தென்னாட்ட வர்பாணி தேர்கின்ற தைப்பிங் நகரில் திருவோடு கொண்டாலும் அருளோடு பொருளோடு திருவோடு வாழ விடுவான். திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி. |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |