ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 கணினியில் கண் புதைத்து
kaNiniyil kaN pudhaiththu
 
Poems Songs for Lord Murugan    திரு. S. கார்த்திகேயன்
    பிள்ளையார் பாளையம், தமிழ்நாடு

   Thiru S. Karthikeyan
   Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

கணினியில் கண் புதைத்து
இரவில், மீயொளில் வாடும்
மானிடனுக்கு கவியாய் அருளும்
முருகா போற்றி!      (1)

உருவமிலா உணர்வு;
கடவுள்:காற்று
காற்றை உணராது பிணம்!      (2)

மாற்றங்கள் மட்டுமே நிலை-நிலையாய்
நீயிருக்க, அன்பர் மனதில் நிறைந்திருக்க;
தூணிலும் துரும்பிலும் நிலைத்திருக்க;
மாற்றங்கள் மாயையாய்,
உணர்ந்தவனில் நீ நிலையாய்!      (3)

உயர்வான வாழ்வு தந்து
உதிராமல் காத்து -
உதிர்ந்தாலும் அடி சேறு மாறு, இடையில்
உமைபாடும் பேறு! முருகா!
என்ன தவம் செய்தேன் நான்!      (4)

உமையடையும் இருவழிகளுள்
துரிதமாய் சேர்க்கும்-துன்பம்;
உம்மிடம் வரமாய் சொர்கம் கேட்க
அன்பர்க்கு பேரின்பம்.      (5)

கடவுள் ஒருவரே முருகா!
கருமணியாய் வழிநடத்தும் முருகா!
இதயத்தின் ஓசையே முருகா!
உலகை ஆளும் முருகா!      (6)

உணர்வில் நீயே முருகா! நற்றுணையாகுமே முருகா!
கற்பனை போதாது முருகா! கற்சிலையானேன் முருகா!
என் கடைசி மூச்சும் முருகா! முருகா! முருகா!

கல்லில் உமைக் கண்டேன்! கண்ணெதிரே தோன்றினாய்! முருகா!
புலனடக்கி ஜோதியாய்க் கண்டேன்! உள்ளத்தில் ஒளிர்ந்தாய்! முருகா!
உளமுருக்கி ஆலயம் வடித்தேன்! என்னுள்ளே கலந்தாய்! முருகா!

பல்லுயிரை உம் நிழலாய் நேசித்தேன்! நேரே நின்றாய்! முருகா!
எவ்வழியால் தொழுதாலும் அவ்வழியால் தோன்றும் முருகா!
உன்னடி சரணம்!

புன்னகையில் வாயடைத்துப் போனேன் -
முருகா!
என்று ஒரு முறை சொன்ன உடன் ...

உணர்ச்சி மிகுதியில் செயலிழந்தேன் -
முருகா!
உம் இல் சென்ற உடன் ...

முழுமையாய் எனை மறந்தேன் -
முருகா!
உம் திருவடி கண்ட உடன் ...

முழுமையாய் எனை உணர்ந்தேன் -
முருகா!
நின்னை சரண் அடைந்த உடன் ...


English transliteration to come
go to top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

kaNiniyil kaN pudhaiththu
Thiru S. Karthikeyan

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]