முருகனுக்கான Poems for |
---|
துணையென நிற்பான் thuNaiyena niRppAn |
பிள்ளைத்தமிழ்ப் பாவலர் சி. அன்பானந்தம் பினாங்கு, மலேசியா C. Anbanandham Penang, Malaysia | English | பட்டியல் தேடல் list search |
வண்ணமாம் பச்சை நாட்டின் வளமெலாம் சுட்டிக் காட்ட, எண்ணமார் மக்கள் கூட்டம் இயங்கியே நன்மை சேர்க்க, திண்ணமார் நகரத் தார்கள் திரவியம் கொடுத்து வாங்க வண்ணமார் தண்ட பாணி வனப்புற வந்தான் தைப்பிங்! தலம்புகழ் லாருட் தன்னில் தண்ணெனும் மாக்ஸ்வெல் சார்ந்தே வலம்தரும் அருவிப் பக்கம் வடித்தனர்; குமரன் ஆட்சி பலம்தரும் வடிவேல் சின்னம் பற்றுடன் தாங்கி நிற்க; நலந்திகழ் நகரத் தார்கள் நயந்துமே பரவி வந்தார்! திசையெலாம் புரக்கும் கந்தன் திருவடி போற்றச் செல்லும் திசைவெகு தூரம் இன்றித் திகழ்ந்திடச் சிம்பாங் சாலை மிசையொரு கோயில் கட்டி மிகுபுகழ் குடமு ழுக்கும் இசைவுறச் செய்தார்; வேலன் இருந்தனன் விரும்பி ஆங்கே! சிறப்புள தைப்பிங் கோயில் திகழ்ந்தொளிர் தண்ட பாணி பிறப்புள குறைகள் தீர்த்துப் பிறந்திடா நெறியிற் சேர்த்து மறப்புகள் இல்லா வண்ணம் மயிலொடு வேலும் காட்டிக் குறப்புகழ் வள்ளி யானை குழைந்துடன் வரவும் கொண்டான்! ஆடியாம் பூர்ணை நாளில் அருள்மிகு தண்ட பாணி தேடியே ரதத்தி லேறித் திருவுலா வருவான்! மற்றும் கூடியே கார்த்தி கைநாள் கோயிலுள் புறப்பா டேற்றுப் பாடியே பணிவார் பக்கல் பரிவுடன் வருவான் நன்கே! ஏற்றுவார்க் கெல்லாம் சேந்தன் இனிதெலாம் தருவான்; பொற்றாள் போற்றுவார்க் கருகில் சென்றே புகலிடம் அருள்வான்! வேலன் நாற்றுளே நிறைநெல் போல நயந்தருள் சுரத்தற் கென்றே தோற்றமாய்த் தண்டம் ஏந்தித் துணையென நிற்பான் வாழ்க! குடமுழுக் கினிமை கண்டால் கோடியாய் நலங்கள் சேரும்! கடவுளைத் தண்ட பாணி காளியின் மைந்தன் தன்னைத் திடமுறப் போற்றி செய்தால் திருவருள் கூடும்; வாழ்வில் இடம்பொருள் இதம்செய் செல்வம் இகமிதில் பெருகும் தானே! திரு சிவசக்திவேல் அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி. |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |