![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| ஜீவனில் ஸ்கந்தம் (வாசனை) சிவம் jeevanil skandham |
![]() | அன்னையின் அருட்தொண்டன் ஸ்ரீ S. சந்திரசேகரன் திருவாடானை, தமிழ்நாடு Sri S. Chandrasegaran ThiruvAdAnai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
சிவ குகமயம் புவியில் ஆன்மா அடுத்து அடுத்து வந்தது கலியில் கன்மம் ஆன்மாவை அலைய வைத்தது ஆன்மா அசைவில் அதிர ஆணவம் வந்தது ஆன்மா அமைதி இழக்க ஆங்காரம் வந்தது ஆன்மா இறை மறக்க சூரம் வந்தது அந்தர இந்திர சபையில் வருத்தம் வந்தது ஆதியின் அதோ முகத் தீ எழுந்தது சக்தியெனும் சரவணப் பொய்கை வீழ்ந்து கலந்தது அதிசயம் அங்கே ஆறுமுகம் அன்பாய் மலர்ந்தது கனிந்த அன்பில் கார்த்திகையர் இடம் வளர்ந்தது பரா சக்தியின் பார்வையில் ஸ்கந்தம் இணைந்தது தலைநான் முகனுக்கு நயம்பட ஓங்கி உரைத்தது தில்லை நாயகனுக்கு நல்உப தேசம் அளித்தது கணபதி கந்தன் விளையாட ஞானம் கனிந்தது தந்தை சொல் கந்தன் கேட்க நினைந்தது சக்தியே வேலாய் கந்தன் கை வந்தது ஆன்மாக்கள் இறை நினைக்க ஸ்கந்தம் நின்றது ஆன்மீக சக்தியே வேலாய் கருத்தில் பாய்ந்தது ஆன்மாவில் சூரம் ஆன்மீக அன்பில் தணிந்தது அமரர் தேவ யானையை அழகன் மணந்தது ஆதியின் ஜோதியை சேவல் கூவித் தெரிவிக்கின்றது ஆன்மாவில் ஓங்காரம் ஒலிக்க ஜோதி தெரிகின்றது மழை வரவில் மயில் ஆடி களிக்கின்றது மருகன் மனதில் வர மனம்ஆடி செழிக்கின்றது முருகனின் ஞானவேல் தத்துவத்தை மனம் நாடுகின்றது சூரம் மயிலாய் தாங்கி சேவலாய் அறிவிக்கின்றது ஜீவன் பேரன்பில் சிவ ஸ்கந்தமாய் ஜொலிக்கின்றது ஜீவன் இச்சை யென்னும் வல்லிக் கொடியாகியது சிவனில் ஸ்கந்தம் காமமின்றி நட்பில் இணைந்தது உடலைப் போற்றி உயிர்இறை நினைக்க பிறக்கின்றது உயிர் போற்ற ஸ்கந்தமாகி சிவனில் கலக்கின்றது. |
siva gugamayam puviyil AnmA aduththu aduththu vanthathu kaliyil kanmam AnmAvai alaiya vaiththathu AnmA asaivil adhira ANavam vanthathu AnmA amaidhi izhakka AngAram vanthathu AnmA iRai maRakka sUram vanthathu andhara indhira sabaiyil varuththam vanthathu Adhiyin athO mugath thee ezhunthathu sakthiyenum saravaNap poygai veezhndhu kalanthathu athisayam angE ARumugam anbAy malarnthathu kanindha anbil kArththikaiyar idam vaLarndhathu parA sakthiyin pArvaiyil skandham iNainthathu thalai-nAn muganukku nayambada Ongi uraiththathu thillai nAyaganukku nal-uba dhEsam aLiththathu gaNabathi kandhan viLaiyAda gnAnam kaninthathu thandhai sol kandhan kEtka ninainthathu sakthiyE vElAy kandhan kai vanthathu AnmAkkaL iRai ninaikka skandham nindRathu Anmeega sakthiyE vElAy karuththil pAynthathu AnmAvil sUram Anmeega anbil thaNinthathu amarar dhEva yAnaiyai azhagan maNanthathu Adhiyin jOdhiyai sEval kUvith therivikkindRathu AnmAvil OngAram olikka jOdhi therigindRathu mazhai varavil mayil Adi kaLikkindRathu marugan manadhil vara manam Adi sezhikkindRathu muruganin gnAnavEl thaththuvaththai manam nAdukindRathu sUram mayilAy thAngi sEvalAy aRivikkindRathu jeevan pEranbil siva skandhamAi jolikkindRathu jeevan ichchai yennum vallilk kodiyAgiyathu sivanil skandham kAmamindRi nadpil iNainthathu udalaip pOtri uyir-iRai ninaikka piRakkindRathu uyir pOtRa skandhamAgi sivanil kalakkindRathu. |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |