திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 42 குறியை Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 42 kuRiyaik |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 42 - குறியைக் குறியாது குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியாமையும் அற்றதுவே! ......... சொற்பிரிவு ......... குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும் செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே! ......... பதவுரை ......... [தியானிக்கப்படும் பொருளை, பசு, பாசம் பற்றிய அறிவைக் கொண்டு தியானிக்காமல், பதிஞானத்தைத் தியானித்து அறிகின்ற வழியைத்] தனிச் சிறப்புமிக்க வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்தருளியவுடனே உலகத்தாருடன் கொண்டொழுகும் நெருங்கிய உறவுகள், வாக்கு, மனம், அறிவு ஆகியவற்றோடு அறியாமையும் நீங்கி ஒழிந்தனவே! |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.681 pg 4.682 pg 4.683 WIKI_urai Song number: 42 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.53mb to download |
Song 42 - kuRiyaik kuRiyAdhu kuRiyaik kuRiyAdhu kuRiththu aRiyum neRiyaith thani vElai nigazhththidalum seRivatRu ulagOdu urai sindhaiyum atRu aRivu atRu aRiyAmaiyum atRadhuvE! The close relationships, which I have with the world's people, as well as [my] speech, mind, knowledge and ignorance, were all removed and destroyed as soon as Thirumurugapperumaan, who has the unique great lance, graciously expounded to me [the method of meditating upon a thing by meditating upon the God's wisdom instead of meditating upon the knowledge concerning the soul and one's attachment to things and persons]! |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |