Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 91 - திகிரி வலம்புரி
Kandhar andhAdhi - thigiri valamburi
Kandhar andhAdhi - thigiri valamburi    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.258  pg 4.259  pg 4.260 
 WIKI_urai Song number: 91 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 91 ... திகிரி வலம்புரி   (இடங்குறித்தல்)

......... பாடல் .........

      திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன
      திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்
      திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்
      திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே ...... 91

......... சொற்பிரிவு .........

திகிரி வலம் புரி மாற்கு அரியார்க்கு உபதேசம் சொன்ன

திகிரி வலம்புரி செய் ஆர் இலஞ்சி செந்தூர் கனத்

(தந்) திகிரி வலம் புரிவேறும் படைத்தருள் சேய் தணியில்

திகிரி வலம்புரி சூடியவா நன்று சேடி இன்றே.

......... பதவுரை .........

திகிரி ... சக்ராயுதத்தை,

வலம் ... வலக் கையில்,

புரி ... தரித்துள்ள,

மாற்கு ... திருமாலால்,

அரியார்க்கு ... தேடி கண்டு கொள்ள முடியாத (பரமசிவனுக்கு),

உபதேசம் சொன்ன ... பிரணவப் பொருளை உபதேசித்த,

திகிரி ... சுவாமிமலைப் பதி,

வலம்புரி ... வலம்புரி சங்குகள்,

செய் ... வயல்களில்,

ஆர் ... நிறைந்திருக்கும்,

இலஞ்சி ... இலஞ்சிப் பதி,

செந்தூர் ... திருச்செந்தூர்,

கனத் தந்திகிரி ... மேகங்கள் சூழ்ந்த சர்ப்பம் போன்ற திருச்செங்கோடு,

வலம் ... திருவலம்,

புரி வேறும் ... வேறு பல தலங்களையும் சிருஷ்டித்து அருள் செய்த,

சேய் ... குமாரக் கடவுளின்,

தணியில் ... திருத்தணியில்,

திகிரி ... மூங்கில்,

வலம் புரி ... நந்தியாவட்டை மலரை,

சூடிய வா ... சூடி இருக்கும் குறிப்பு,

இன்றே நன்று ... இத்தினத்தில் நன்றாக அமைந்திருக்கிறது,

சேடி ... தோழியே.

......... பொழிப்புரை .........

திருமாலினால் அறியப்படாதவரான சிவனுக்கு பிரணவ உபதேசம் செய்த ஏரகப் பதி, சங்குகள் வயல்கள் நிறைந்துள்ள இலஞ்சிப் பதி, செந்திற் பதி, நாகாசலம், திருவலம் முதலிய பல தலங்களையும் தனது உறைவிடமாகக்கொண்ட குமாரக் கடவுளின் தணிகை மலையில் மூங்கிலின் மேல் நந்தியாவட்டை மலர் மலர்ந்திருக்கும் குறிப்பு நன்றாக அமைந்திருக்கிறது.

(தலைவி குமாரக்கடவுளின் பல தலங்களிலும் தணிகைக்கு மட்டும் சிறப்பான அடைமொழியைக் கூறி இருப்பதால் தணிகாசலனே அவளுக்கு உகந்த நாயகன் என்பதை குறிப்பாக உணர்த்தி இருக்கிறாள்).

கந்தர் அந்தாதி - 91 - திகிரி வலம்புரி
Kandhar andhAdhi - thigiri valamburi
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thigiri valamburi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]