Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 90 - சித்தத் தரங்க
Kandhar andhAdhi - siththath tharangka
Kandhar andhAdhi - siththath tharangka    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.257  pg 4.258 
 WIKI_urai Song number: 90 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 90 ... சித்தத் தரங்க   (வெறும் வெளிப் பூஜையால் பயன் இல்லை)

......... பாடல் .........

      சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்
      சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா
      சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்
      சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே ...... 90

......... சொற்பிரிவு .........

சித்த தரங்கத்தர் சித்தி எய்த திரிகின்றது ஏன்?

(அர்ச்ச) சித்து அத்தர் அங்கத்தர் சந்ததியே, செந்திலாய்,

(சலரா) சி தத்தரம் கத்து அரக்கரைச் செற்ற கந்தா, திங்கள்

(இஞ்) சி தத்து அரங்கத்தர் சேய் ஆரண தந்தி கிரி ஐ ஏ.

......... பதவுரை .........

சித்த தரங்கத்தர் ... கடல் அலை போல் அலைகின்ற மனதை உடையவர்

சித்தி எய்த ... மோட்சம் அடையும் பொருட்டு,

அர்ச்சித்து ... வெளி பூஜை மட்டும் செய்து

திரிகின்றது என்? ... வீணாக காலத்தைப் போக்குவதால் என்ன பயன்?

அத்தர் ... எல்லோருக்கும் இறைவனாகிய,

அங்கத்தர் ... எலும்பு மாலை பூண்ட சிவபெருமானின்,

சந்ததியே ... குழந்தையே,

செந்திலாய் ... செந்திலாண்டவனே,

சலராசி ... சமுத்திரத்தின் கண்,

தத்தரம் ... தங்கள் தங்கள் பெருமையை,

கத்தும் ... கூறி ஆர்ப்பாரித்து வந்த,

அரக்கரை ... அசுரர்களை,

செற்ற கந்தா ... அழித்த கந்தக் கடவுளே,

திங்கள் ... சந்திரன்,

இஞ்சி ... கோயில் மதில் மேல்,

தத்து ... தவழ்ந்து செல்லும் (அந்த அளவிற்கு உயர்ந்துள்ள),

அரங்கத்தர் ... ஸ்ரீரங்கநாதரின்,

சேய் ... பிள்ளையாகிய பிரம்மா (ஓதும்),

ஆரண ... வேதங்கள் பூஜிக்கும்,

தந்தி கிரி ... பாம்பு போன்ற செங்கோட்டு மலையில் வசிக்கும்,

ஐயே ... சுவாமியே.

......... பொழிப்புரை .........

பரமேஸ்வரனின் குமாரனே, கடலின் கண் அசுரர்களை வென்ற கந்தக் கடவுளே, திருமாலின் குமாரனாகிய பிரம்மா ஓதும் வேதங்கள் பூஜிக்கும் நாகாசல வேலவனே, மனதை அடக்க முடியாமல் சிலர் முத்தி அடைய ஆர்ப்பாட்ட பூஜை செய்வதால் என்ன பயன்?

கந்தர் அந்தாதி - 90 - சித்தத் தரங்க
Kandhar andhAdhi - siththath tharangka
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - siththath tharangka

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]