Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 68 - சேகரவாரண வேல்
Kandhar andhAdhi - sEgaravAraNa vEl
Kandhar andhAdhi - sEgaravAraNa vEl    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.229  pg 4.230 
 WIKI_urai Song number: 68 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 68 ... சேகரவாரண வேல்   (விரக தாபம்)

......... பாடல் .........

      சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத
      சேகர வாரண மேவும் புயாசல தீவினையின்
      சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்
      சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே ...... 68

......... சொற்பிரிவு .........

சே கரவா ரண வேல்வீர வேடச்சிறுமி பத

சேகர வாரணம் மேவும் புயாசல தீவினையின்

சேகு அர ஆரண வெற்பாள நாளும் த்ரியம்பகனார்

சே கர வாரணம் நின் கையில் வாரணம் சீவன் ஒன்றே.

......... பதவுரை .........

சே ... அடியவர்களை

கரவா ... பின் வாங்குதல் இல்லாத,

ரண வேல் வீர ... போர் செய்வதில் வல்லமை உள்ள வேலாயுத மூர்த்தியே,

வேடச்சிறுமி ... வள்ளி நாயகியின்,

பத சேகர ... தாள்களை சிரத்தில் ஏந்தியவனே,

வாரண ... தேவயானை,

மேவும் ... தழுவும்,

புயாசல ... மலை போன்ற தோள்களை உடையவனே,

தீவினையின் ... (அடியார்களின்) கொடிய வினையின்,

சேகு ... வஜ்ரம் போன்ற திடத் தன்மையை,

அர ... அரம் போன்று பொடி செய்பவனே,

ஆரண வெற்பாள ... வேதங்கள் பூஜிக்கும் செங்கோட்டு மலைக்கு அதிபனே,

நாளும் ... தினந்தோரும்,

த்ரியம்பகனார் ... முக்கண்ணுடைய சிவபெருமான்,

சே ... மால் விடையாகிய திருமாலின்,

கர ... கையிலிருக்கும்,

வாரண ... பாஞ்ச சன்யம் என்ற சங்கிற்கும்,

நின் கையில் ... உன் கையில் இருக்கும்,

வாரணம் ... கொடியாகிய கோழிக்கும்,

சிவன் ஒன்றே ... (உன்னைச் சேர்ந்திருக்கும் இரவு காலம் நீடிக்காமல் பொழுது புலர்வதை தொனி செய்து காட்டும் சங்கும், அதே போல் சேவல் காலைப் பொழுதை வரவழைக்க கூவுவதாலும்) இரண்டிற்கும் உயிர் ஒன்றாக இருக்குமோ?

......... பொழிப்புரை .........

அடியார்களை காப்பதையே நியமமாகக்கொண்ட வேல் ஏந்தி இருக்கும் வீரனே, வள்ளி நாயகியின் தாசனே, வேதங்கள் தொழும் செங்கோட்டு வேலவனே, இரவை நீட்டிக்காமல் காலைப் புலர்வதை காண்பிப்பதில் சங்கிற்கும் உன்னுடைய சேவலுக்கும் பிராணம் (உயிர்), ஒன்றாக இருக்குமோ?

கந்தர் அந்தாதி - 68 - சேகரவாரண வேல்
Kandhar andhAdhi - sEgaravAraNa vEl
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sEgaravAraNa vEl

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]