Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 69 - சீவன சத்துரு
Kandhar andhAdhi - seevana saththuru
Kandhar andhAdhi - seevana saththuru    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.230  pg 4.231 
 WIKI_urai Song number: 69 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 69 ... சீவன சத்துரு   (ஜீவாத்மா வீணாக காலத்தைக் கழிக்கிறது)

......... பாடல் .........

      சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்
      சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்
      சீவன சத்துருச் செய்யாண் மருகவெ னாதிடையே
      சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே ...... 69

......... சொற்பிரிவு .........

சீவன் அசத்து உருகு அன்பால் பிறப்பு அற தேவர் உய்ய

சீவன் அச (ஜ) த்து உருமிக்கும் மெய்யோன் கையில் சேர்ந்த செவ்வேள்

சீ (ஸ்ரீ) வனசத்து உருச்செய்யாள் மருக எனாது இடையே

சீவன் அசத்து உரு எய்தி எய்தாப்பழி சிந்திப்பதே.

......... பதவுரை .........

சீவன் ... பிராணனுக்கு,

அசத்து ... (நித்யத் தன்மையும் மாறுபடாத தன்மையும் இல்லாததால்) அசத்தாகும் (ஆதலால் பிராணனும் உடலும் சேர்ந்திருக்கும் பொழுதே),

உருகு அன்பால் ... நெஞ்சை உருகவைக்கும் பக்தியினால்,

பிறப்பு அற ... (சத்து எது என்று தெரிந்து கொண்டு) இந்த ஜென்மம் ஒழியும்படி,

சீவன் ... சகல ஜீவன்களுக்கும் மூலகாரணராகிய சிவபெருமானால்,

அசத்து (அஜத்து) ... ஆட்டு வாகனமுடைய,

உருமிக்கும் ... உஷ்ணமுடைய,

மெய்யோன் ... உடம்பை உடைய அக்னி தேவனின்,

கையில் சேர்ந்த ... கரத்தில் கொடுக்கப்பட்ட (பொறியாய் இருக்கும் போது),

செவ்வேள் ... குமாரக்கடவுளே,

சீ (ஸ்ரீ) ... ஒளிவீசும்,

வனசத்து ... தாமரையை இருப்பிடமாகக் கொண்ட,

உருச் செய்யாள் ... சிவந்த நிறமுடைய மகாலட்சுமிக்கு,

மருக ... மருகனே,

எனாது ... என்று சித்தத்தில் வைத்து நிலை பெறச் செய்து தியானிக்காமல்,

இடையே ... ஒரு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே,

சீவன் ... ஜீவனானது (சத்தாகிய பரமாத்மாவையும் அசத்தாகிய ஜீவாத்மாவையும் அறிந்து கொள்ளாமல்),

அசத்து ... ஜடமாகிய,

உரு ... மலபாண்டமாகிய தேகத்தை,

எய்தி ... அடைந்து,

எய்தாப்பழி ... அதற்கு ஏற்கத் தகாத பெரிய பழியை,

சிந்திப்பதே ... என் இதயம் எண்ணிக்கோண்டு,

அவமே ... அவமே காலத்தைப் போக்குகிறது.

......... பொழிப்புரை .........

ஜீவன் அசத்தாக இருப்பதால் அதற்குக் காரணமான இந்தப்பிறவியை ஒழிக்கும்படியான சத்தாகிய பரதெய்வமே, தேவர்களைக் காத்த குமாரனே, லட்சுமிக்கு மருகனே, என்றெல்லாம் அன்பினால் துதிக்காமல் இத் தேகம் பிழைப்பதற்கு வேண்டிய ஜீவன் உபாயத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு தகாத பழியை ஏற்றுக்கொண்டு வீணாக காலத்தைப் போக்குகிறது.

கந்தர் அந்தாதி - 69 - சீவன சத்துரு
Kandhar andhAdhi - seevana saththuru
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - seevana saththuru

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]