Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 67 - சிகண்டிதத் தத்த
Kandhar andhAdhi - sigandithath thaththa
Kandhar andhAdhi - sigandithath thaththa    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.228  pg 4.229 
 WIKI_urai Song number: 67 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 67 ... சிகண்டிதத் தத்த   (நலம் புனைந்துரைத்தல்)

......... பாடல் .........

      சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா
      சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்
      சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்
      சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே ...... 67

......... சொற்பிரிவு .........

சிகண்டி தத்த தமர வாரி விட்டு அ திதி புத்ர

(ரா) சி கண்டித தத்த நகபூதர தெய்வவள்ளி

(கொடிச்) சி கண்டு இதத்து அத்தமலர் மேற்குவித்து இடை செப்பு உரு

(வஞ்) சி கண் தித தத்து அகல் தபோபலம் என்னும் சேகரனே.

......... பதவுரை .........

சிகண்டி ... மயில் வாகனத்தை,

தத்த ... தாவிச் செலுத்தும்படி,

தமர ... ஆர்பாரிக்கும்,

வாரி ... கடலின் கண்,

விட்டு ... செலுத்தி,

அ ... அந்த வீரம் வாய்ந்த,

திதிபுத்ர ராசி ... திதி தேவியின் பிள்ளைகளாகிய அசுர கூட்டங்களை,

கண்டித ... கோபித்து அழித்தவனே,

தத்த ... தந்தம் உடைய,

நக பூதர ... பாம்பு போன்ற நாகாசல வேலவனே,

தெய்வ ... தெய்வீகமாகிய,

வள்ளிக் கொடிச்சி ... குறப்பெண்ணாகிய வள்ளி தேவியை,

கண்டு ... பார்த்து,

இதத்து ... பணிவுடன்,

அத்த மலர் ... உன் மலர் போன்ற கைகளை,

மேற்குவித்து ... தலைக்கு மேல் கூப்பிக் கோண்டு,

இடை ... ஏ பெண்ணே உன்னுடைய இடுப்பு,

செப்பு ... புகழ்ந்து கூறப்படும்,

உரு வஞ்சி ... வஞ்சிக் கொடி போன்ற உருவம் உடையது,

கண் ... உன் விழி,

தித ... நிலைபெற்ற,

தத்து ... ஆபத்துக்களை எல்லாம்,

அகல் ... அகற்றி என்னுடைய ஆசை அக்கினியைத் தணிப்பதால்,

தபோபலம் ... நான் செய்த தவத்தின் பயனே ஆகும்,

என்னும் ... என்றெல்லாம் புகழ்ந்துரைத்த

சேகரனே ... தலைவனே.

......... பொழிப்புரை .........

மயிலேறிச் சென்று கடலில் அசுர குலத்தை அழித்தவனே, செங்கோட்டு வேலவனே, வள்ளியை நோக்கி கைகளை தலைக்கு மேல் தூக்கி அவளுடைய அழகை விரித்துபைத்த கந்தப் பெருமானே.

கந்தர் அந்தாதி - 67 - சிகண்டிதத் தத்த
Kandhar andhAdhi - sigandithath thaththa
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sigandithath thaththa

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]