Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 66 - சீகர சிந்துர
Kandhar andhAdhi - seegara sindhura
Kandhar andhAdhi - seegara sindhura    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.227  pg 4.228 
 WIKI_urai Song number: 66 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 66 ... சீகர சிந்துர   (மயிலால் வினைக்குன்றை பொடிசெய்)

......... பாடல் .........

      சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ
      சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு
      சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு
      சீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே ...... 66

......... சொற்பிரிவு .........

சீகரம் சிந்து ரவுத்த வெஞ்சூர செய புய

(வ) சீகர சிந்துர வல்லி சிங்கார சிவசுத

(சு) சீ கர சிந்துர கந்தர வாகன் சிறைவிடும்

(சு) சீகர சிந்து உர மால் வினை குன்றை சிகண்டி கொண்டே.

......... பதவுரை .........

சிகரம் ... அலைவீசும்,

சிந்து ... கடலின் கண்,

ரவுத்த ... பெரிய போர் வீரனான,

வெம் ... கொடிய,

சூர ... சூரபத்மனை,

செய ... ஜெயித்தவனே,

புய ... தோள்களை,

வசீகர ... விரும்பி அணைப்பதில் பிரியமுள்ளவளும்,

சிந்தூர ... நெற்றியில் திலகம் தீட்டியவளுமான,

வல்லி ... கொடி போன்ற வள்ளிநாயகிக்கு உரிய,

சிங்கார ... அலங்காரமுடையவனே,

சிவசுத ... சிவகுமாரனே,

சுசி ... பரிசுத்தமான அக்கினியால்,

கர ... பொறி ரூபத்தில் ஏந்தப் பட்டவனே,

சிந்தூர ... ஐராவதத்தையும்,

கந்தர ... மேகத்தையும்,

வாகன் ... வாகனமாக உடைய இந்திரனின்,

சிறையை விடும் ... சிறையை மீட்டுக் கொடுத்த,

சுசீகர ... பரிசுத்த மூத்தியே,

உர ... வலிய,

மால் ... மயக்கத்தைத் தரும்,

வினைக் குன்றை ... இருவினைகளாகிய மலையை,

சிகண்டி கொண்டே ... மயில் வாகனத்தில் எழுந்தருளி,

சிந்து ... சிதற அடித்து விடு.

......... பொழிப்புரை .........

சமுத்திரத்தில் சூரனை சங்கரித்தவனே, அழகிய தோள்களை உடையவனே, சிவ மைந்தனே, வள்ளி மணாளனே, அக்கினியின் கையில் இருந்தவனே, இந்திரனின் சிறையைக் களைந்த பரிசுத்தனே, நீ மயிலேறி வந்து என்னுடைய பூர்வ வினையாகிய குன்றை பொடி செய்ய வேண்டும்.

(சிகண்டி கொண்டே என்ற சொற்டொடருக்கு வேறு ஒரு பொருளும் காணலாம். மயில் மேரு முதலிய மலைகளை தகர்க்க வல்லது என்பதை மயில் விருத்தத்தில் காணலாம். ஆதலால் வேல் எப்படி வினைகளைக் களையுமோ அது போல உன் மயில் வாகனத்தைக் கொண்டு என் வினைகளை பொடியாக்கி விட வேண்டும் என்பதே பொருள்).

கந்தர் அந்தாதி - 66 - சீகர சிந்துர
Kandhar andhAdhi - seegara sindhura
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - seegara sindhura

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]