Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 65 - திகைப்படங்க
Kandhar andhAdhi - thigaippadangka
Kandhar andhAdhi - thigaippadangka    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.226  pg 4.227 
 WIKI_urai Song number: 65 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 65 ... திகைப்படங்க   (அகத்துறை)

......... பாடல் .........

      திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய
      திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய
      திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி
      திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ்சீகரமே ...... 65

......... சொற்பிரிவு .........

திகைப்பள் தங்க புயம் தந்தருளான் என்பள் திங்கள்

(நிய) தி கைப்பள் தம் கத்து அமையார் செந்திலார் என்பள் தென்னன்

(உய) தி கைப்பு அடங்க புகல் சேய் என்பள் கன்னி கண்ணீர் தர

(வி) தி கைபடு அங்கத்து அமையாது எம் ஐ ஆட்கொளும் சீகரமே.

......... பதவுரை .........

கன்னி ... என் உயிர் போன்ற இந்தப் பெண்,

கண்ணீர் தர ... விழிகளில் நீர் சொரிந்து கொண்டு,

திகைப்பள் ... மயங்கி நிற்கிறாள்,

செந்திலார் ... செந்திலாண்டவன்,

புயம் ... தன்னுடைய திருத்தோள்களை,

அருளான் என்பள் ... எனக்குக் கொடுத்து அருள மாட்டார் என்கிறாள்,

திங்கள் ... சந்திரனை,

நியதி ... தினமும்,

கைப்பள் ... வெறுத்து பேசுகிறாள்,

தம் கத்து ... தான் இப்படி அரற்றி வருந்துவதைப் பார்த்து,

அமையார் என்பள் ... மன்னித்து ரட்சிக்க மாட்டேன் என்கிறார் என்று சொல்லுகிறாள்,

தென்னன் ... பாண்டிய மன்னனின்,

உய்தி ... சுர வருத்தத்தின்,

கைப்பு அடங்க ... கொடுமை நீங்க,

புகல் ... தேவாரப் பதிகத்தைப் பாடி அருளிய,

சேய் என்பள் ... சம்பந்தப் பிள்ளை என்று கூறுகிறாள் (ஆதலால்),

விதி ... பிரமனின்,

கைப்படு ... கையினால் சிருஷ்டிக்கப்படுகின்ற

அங்கத்து ... உடலுக்குள்,

அமையாது ... இந்த ஆன்மா சேர்க்கபட்டு மீண்டும் பிறவி அடையாதபடி,

ஆட்கொளும் ... ஆண்டு கொள்ள வேண்டும்,

எம் ஐ ... என்னுடைய சுவாமியே

சீகரமே ... அழகிய குமாரக்கடவுளே.

......... பொழிப்புரை .........

அழகிய குமாரக் கடவுளே, என் உயிர்ப் பெண்ணானவள் செந்திலாண்டவன் என் குறைகளைக் தணிக்கிறானில்லை என்றும், அவன் புயத்தைத் தழுவத் தருகிறானில்லை என்றும் பாண்டியனின் சுரத்தை தணித்தருளிய ஞானசம்பந்தரே என்றும் சொல்லுகிறாள். இனி இப்படிப்பட்ட பிறவி உற்று வருந்தாத வண்ணம் ஆண்டு கொள்ள வேண்டும்.

கந்தர் அந்தாதி - 65 - திகைப்படங்க
Kandhar andhAdhi - thigaippadangka
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thigaippadangka

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]