Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 57 - தீத்தன் பரவை
Kandhar andhAdhi - theethan paravai
Kandhar andhAdhi - theethan paravai    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.216  pg 4.217 
 pg 4.218  WIKI_urai Song number: 57 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 57 ... தீத்தன் பரவை   (துதி)

......... பாடல் .........

      தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்
      தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே
      தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்
      தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே ...... 57

......... சொற்பிரிவு .........

தீத்தன் பரவு ஐ வெளி நீங்கி சேய் தொழ செல் பத

(உத்) தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்கு அறவே

தீத்து அன்பர் அவை தழைக்க விண் காவென சென்னியின் மேல்

தீத்தன் பரவு ஐயில் வேல் அத்தனே குருசீலத்தனே.

......... பதவுரை .........

தீத்தன் ... கிரணங்களை உடைய சூரியன்,

பரவு ... சஞ்சாரஞ் செய்யும்,

ஐ வெளி ... அழகிய ஆகாச வெளியையும்,

நீங்கி ... கடந்து சென்று,

சேய் ... தன் பிள்ளையாகிய பிரம்மனும்,

தொழ ... பயந்து வணங்கும்படி,

செல் ... திரிவிக்ரமவதாரத்தில்,

பத உத்தீத்தன் ... பாதத்தை ஊர்த்தவ தாண்டவமாய் எடுத்த மகாவிஷ்ணுவும்,

பரவை ... கடலும்,

முறையிட ... அலறி அபயமிட,

மாங்குறை ... மாமரமாகிய சூரனால் உண்டான துன்பத்தையும்,

தீங்கு ... தீமையையும்,

அறவே ... முழுவதும்,

தீத்து ... நீங்கும்படி ஒழித்து,

அன்பர் அவை ... அடியாார் கூட்டம்,

தழைக்க ... செழிக்கும்படி,

விண் ... விண் உலகத்தையையும்,

கா ... காப்பாற்று என்று,

சென்னியின் மேல் ... சிரசின்கண்,

தீத்தன் ... கங்கா ஜலத்தை சூடியிருக்கும் பரமசிவன்,

என ... சொல்ல,

பரவு ... அவரை வணங்கி அந்த வேலையை செய்து முடித்த,

ஐயில் வேல் ... கூரிய வேலாயுதத்தை,

அத்தனே ... கையில் ஏந்தி இருக்கும் முருகப் பெருமானே,

குரு ... குருவாகி அந்த சிவனுக்கு,

சீலத்தனே ... பிரணவப் பொருளை உபதேசித்த நற்குணக் குன்றனே.

......... பொழிப்புரை .........

திருமாலும் சமுத்திரமும் முறையிட சூரனை வதைத்து அடியார் கூட்டம் சுகமாய் வாழ அமராபதியைக் காத்து வா என பரமசிவன் பணிக்க, அவரை வணங்கி அதைச் செய்து முடித்த வேலாயுதனே, சிவனுக்கு குருவாய் இருந்து உபதேசித்தவனே.

கந்தர் அந்தாதி - 57 - தீத்தன் பரவை
Kandhar andhAdhi - theethan paravai
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - theethan paravai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]