Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 56 - தென்ன வனங்கன
Kandhar andhAdhi - thenna vananggana
Kandhar andhAdhi - thenna vananggana    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.214  pg 4.215  pg 4.216 
 WIKI_urai Song number: 56 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 56 ... தென்ன வனங்கன   (தலைவனின் மாலை கேட்டல்)

......... பாடல் .........

      தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்
      தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்
      தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந்
      தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே ...... 56

......... சொற்பிரிவு .........

தென்ன வனம் கனம் சூழ் கா திரிநக சூலகர

தென்னவ அங்க னந்த பத நீட்டினன் செல்வன் முன்பின்

தென்னவன் அங்கம் நன்னீற்றால் திருத்திய தென்னை இன்னம்

தென்ன அனங்கன் அம் கை சிலை கூனையும் தீர்த்து அருளே.

......... பதவுரை .........

தென்ன வனம் ... தென்னஞ் சோலைகளும்,

கனம் ... மேகங்கள்,

சூழ் ... கவிந்து கொண்டிருக்கும்,

திரி நக ... திருத்தணி, பரங்குன்றம், திருச்செங்கோடு என்னும் மூன்று மலைகளுக்கு அதிபனே,

சூல கர ... கையில் சூலத்தைப் பிடித்திருக்கும்,

தென்னவ ... தென் திசைக்கு அதிபனாகிய எமராஜனின்,

அங்க ... உடல்,

னந்த ... அழியும்படி,

பத நீட்டினன் ... காலால் நீட்டி உதைத்த பரமசிவனின்,

செல்வ ... குமாரனே,

முன் ... முன்னொரு காலத்தில்,

பின் ... பின் முதுகில் கூனுடைய,

தென்னவன் ... பாண்டியனின்

அங்க ... உடல் கூனை,

நன்னீற்றால் ... நன்மையே பயக்கும் விபூதியினால்,

திருத்திய தென்ன ... சரி செய்து நிமிர்த்தியது போல,

இன்னம் ... இப்போது,

தென்ன ... வனப்புடைய,

அனங்கன் ... மன்மதனின்,

அம் ... அழகிய,

கை சிலை ... கையில் பிடித்த கரும்பு வில்லின்,

கூனையும் ... வளைவையும்,

தீர்த்து ... நீக்கி,

அருளே ... அந்த மன்மதன் என்மேல் பாணத்தை எய்தாதபடி நீ அணிந்திருக்கும் மாலையை தந்தருள வேண்டும்.

......... பொழிப்புரை .........

திருத்தணி, பரங்குன்று, திருச்செங்கோடு என்கிற மலைகளுக்கு அதிபனே, காலாந்தகனாகிய சிவனின் மைந்தனே, முன்பு சம்பந்தப்பிள்ளையாய் பாண்டியனின் கூனை நிமிர்த்தியது போல மன்மதனின் வில்லின் வளைதலையும் நீக்க வேண்டும்.

(முன்பின் என்கிற சொல்லுக்கு வேறு ஒரு நல்ல பொருளும் இருக்கிறது. பாண்டியனுக்கு முன்மார்பிலும் பின்முதுகிலும் கூன்கள் இருந்தன என்பது தக்க யாக பரணியில் சொல்லப்பட்டுள்ளது. ஆதலால் முன்பின் என்னும் சொற்சொடருக்கு முன்னும் பின்னும் இருந்த இரண்டு கூன்கள் என்றும் பொருள் கொள்ளலாம்).

கந்தர் அந்தாதி - 56 - தென்ன வனங்கன
Kandhar andhAdhi - thenna vananggana
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thenna vananggana

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]